குரிசில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குரிசில்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
அக்டினோட்டெரிகீயை
வரிசை:
பேர்சிஃபார்மீசு
குடும்பம்:
அலந்தூரிடே
பேரினம்:
அகந்தூரசு
இனம்:
A. triostegus
இருசொற் பெயரீடு
Acanthurus triostegus
(லின்னேயஸ், 1758)
வேறு பெயர்கள்

Teuthis elegans Garman, 1899

குரிசில் அல்லது கோழிமீன் (Acanthurus triostegus) என்பது பேர்சிஃபார்மீசு வரிசையின், முள்வால் வகையி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறிய முள்வால் வகையி மீன் ஆகும்.[1][2] இது பொதுவாக 17 செ.மீ (7 அங்குலம்) நீளம் கொண்டது, ஆனால் சில மீன்கள் 27 செ.மீ. நீளம்வரை எட்டும்.[2] அரேபிய தீபகற்பத்தைச் சுற்றியுள்ள கடல்களைத் தவிர, இந்தோ-பசிபிக் பகுதிகளிலும், ஹவாய் தீவுகளிலும் பசிபிக் பகுதியிலும், கிழக்கு பசிபிக் பகுதியில் கலிபோர்னியா வளைகுடாவிலும், ரெவில்லாகிகெடோ தீவுகள், கிளிப்பர்டன் தீவு உட்பட பனாமா வரையிலும் இவை பரவலாக காணப்படுகின்றன. கோகோசு தீவுகள் மற்றும் கலாபகசுத் தீவுகள் மத்தியதரைக் கடல் மற்றும் அட்ரியாடிக் கடல் முழுவதும் காணபடுகின்றன. சில அறிக்கைகள் சூயஸ் கால்வாய் வழியாக இவை நுழைய வாய்ப்புள்ளது என்கின்றன.

விளக்கம்[தொகு]

குரிசில் மீனானது மஞ்சள் நிற உடலில் வரிக்குதிரை போன்று அடர்த்தியான கருப்பு கோடுகள் கொண்டதாக உள்ளது. இது தட்டையான நீள்வட்ட வடிவ மீனாகும்.[3] இதன் அதிகபட்ச நீளம் சுமார் 26–27 cm (10–11 அங்) ஆகும்.[2][3] இதன் தலை சிறியது, கூர்மையான முகவாய் மற்றும் அடர்த்தியான உதடுகளுடன் கொண்ட வாயைக் கொண்டது. இதன் உடலில் ஆறு கருப்பு கோடுகளைக் கொண்டுள்ளது. அதன் மூலம் ஒன்பது கொடுகள் கொண்ட வரிக்குதிரை டேங்கிலிருந்து (Acanthurus polyzona ) இது வேறுபடுகிறது. முதல் கருப்பு பட்டை சாய்ந்து கண் வழியாக செல்கிறது. வால் பகுதி மீது இரண்டு கருப்பு புள்ளிகள் உள்ளன, மேலும் வால் பகுதியில் ஒரு சோடி கூர்மையான, உள்ளிழுக்கும் தன்மை கொண்ட முட்கள் உள்ளன. இந்த முட்களை இவை தங்களின் தற்காப்புக்கு பயன்படுத்துகின்றன.[3]

பரவலும், வாழ்விடமும்[தொகு]

குரிசில் மீனாது வெப்பமண்டல இந்தோ-பசிபிக் பகுதியில் காணப்படுகிறது. இது வாழும் எல்லையானது கிழக்கு ஆப்பிரிக்க கடற்கரை மற்றும் மடகாஸ்கரில் இருந்து தென்மேற்கு ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் மத்திய அமெரிக்கா வரை பரவியுள்ளது, இதில் பல பசிபிக் தீவுக் குழுக்கள் அடங்கும். இவை கடற்காயல்கள், விரிகுடாக்கள், முகத்துவாரங்களில் கடினமான அடிப்பகுதிகளில் காணப்படுகின்றன. இதன் குஞ்சுகள் ஆழம் குறைந்த கடல் பகுதிகளிலும், பெரிய மீன்கள் சுமார் 90 m (300 அடி) ஆழப்பகுதிகளிலும் காணப்படுகின்றது.[1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 McIlwain, J., Choat, J.H., Abesamis, R., Clements, K.D., Myers, R., Nanola, C., Rocha, L.A., Russell, B. & Stockwell, B. (2012). Acanthurus triostegus. The IUCN Red List of Threatened Species எஆசு:10.2305/IUCN.UK.2012.RLTS.T177965A1504553.en
  2. 2.0 2.1 2.2 Froese, Rainer and Pauly, Daniel, eds. (2019). "Acanthurus triostegus" in FishBase. December 2019 version.
  3. 3.0 3.1 3.2 Lamare, Véronique; Mitel, Cédric (4 August 2018). "Acanthurus triostegus" (in French). DORIS. பார்க்கப்பட்ட நாள் 9 August 2020.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)

வெளி இணைப்புகள்[தொகு]

  • "Acanthurus triostegus". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System). பார்க்கப்பட்ட நாள் 30 January 2006.
  • Photos of குரிசில் on Sealife Collection
"https://ta.wikipedia.org/w/index.php?title=குரிசில்&oldid=3929061" இலிருந்து மீள்விக்கப்பட்டது