குராலம் பறந்தலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

குராலம்பறந்தலை என்பது சங்ககாலத்துப் போர்க்களங்களில் ஒன்று. பல அரசர்கள் ஒன்று திரண்டு இவ்வூரில் சேரன் செங்குட்டுவனைத் தாக்கினர்.

கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன் மோகூர் மன்னனோடு போரிட்டு வென்றான். வெற்றியின் அடையாளமாக மோகூர் மன்னனின் முரசத்தைக் கைப்பற்றினான். அத்துடன் அவனது காவல்மரமான வேம்பையும் வெட்டி வீழ்த்தினான். வெட்டிய மரத்துண்டு ஒன்றைத் தனக்கு முரசு செய்துகொள்வதற்காக தன் ஊருக்கு இழுத்துவந்தான். இழுத்து வருவதற்கு யானைகளைப் பயன்படுத்தினான். இழுக்கும் கயிறாக கூந்தல் முடியால் திரிக்கப்பட்ட கயிற்றைப் பயன்படுத்தினான்.

அப்படித் தன் நாட்டுக்கு இழுத்துச் செல்லும்போது முரசு முழக்கும் தகுதி பெற்ற அரசர் பலர் எதிர்த்தனர். அவர்களை இந்தக் குராலம்பறந்தலை என்னும் ஊரில் வென்று அவர்களை ஓடச்செய்தான்.

பரணர் - பதிற்றுப்பத்து 44

"https://ta.wikipedia.org/w/index.php?title=குராலம்_பறந்தலை&oldid=1208867" இருந்து மீள்விக்கப்பட்டது