குரான்சு இமால்
| குரான்சு இமால் Gurans Himal | |
|---|---|
அபி மலையின் தெற்கு/மேற்கு அம்சங்கள் | |
| உயர்ந்த புள்ளி | |
| உச்சி | அபி மலை |
| உயரம் | 7,132 m (23,399 அடி) |
| ஆள்கூறு | 30°00′15″N 80°56′00″E / 30.00417°N 80.93333°E |
| புவியியல் | |
| நாடு | நேபாளம் |
| மூலத் தொடர் | இமயமலை |
குரான்சு இமால் (Gurans Himal) என்பது நேபாளத்தின் தொலைதூர மேற்குப் பகுதியில் அமைந்துள்ள இமயமலையின் ஒரு சிறிய துணை மலைத் தொடராகும். இங்கு 8000 மீட்டர் உயர சிகரங்களோ, அல்லது 7,200 மீட்டருக்கு மேல் உயரமுள்ள சிகரங்களோ இல்லாததால், அதிகம் அறியப்படாத ஒன்றாக உள்ளது. இம்மலைத் தொடரின் மிக உயரமான சிகரம் அபி மலை ஆகும்.[1] இதன் உயரம் 7,132 மீ (23,399 அடி). இமயமலையின் முக்கிய சிகரங்களுடன் ஒப்பிடும்போது இதன் உயரம் ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தாலும், குரான்சு இமாலின் மற்ற குறிப்பிடத்தக்க சிகரங்களைப் போலவே, இதுவும் ஒரு தாழ்வான அடிவாரத்திலிருந்து வியத்தகு முறையில் உயர்ந்து நிற்கிறது.
கார்டரின் இமயமலை வகைப்பாட்டின்படி, குரான்சு இமால் இரண்டு துணைப்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. சைபால் துணைப்பிரிவு சேத்தி ஆற்றுக்கு கிழக்கே அமைந்துள்ளது. இதன் மிக உயரமான சிகரம் 7,132 மீ (23,399 அடி) உயரமுள்ள அபி மலை ஆகும். இயோகா பகார் துணைப்பிரிவு சேத்தி ஆற்ருக்கு மேற்கே அமைந்துள்ளது. மேலும் இதில் அபி (7,132 மீ / 23,399 அடி), இயெத்தி பகூராணி (6,850 மீ / 22,474 அடி), போபாயே (6,808 மீ / 22,336 அடி), மற்றும் நம்பா (6,755 மீ / 22,162 அடி) ஆகிய சிகரங்கள் உட்படப் பல சிகரங்கள் உள்ளன.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 H. Adams Carter (1986). "Classification of the Himalaya". The Himalayan Journal (The Himalayan Club) 42. https://www.himalayanclub.org/hj/42/22/classification-of-the-himalaya1/. பார்த்த நாள்: 17 April 2019.
வெளி இணைப்புகள்
[தொகு]- Gurans Himal region marked on OpenStreetMap