குரங்கன் சுறா
குரங்கன் சுறா புதைப்படிவ காலம்: | |
---|---|
Horn shark, Heterodontus francisci | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
Unrecognized taxon (fix): | Heterodontus |
Species | |
See text |
மாட்டுத்தலை சுறா அல்லது குரங்கன் சுறா (Bullhead shark) என்பது சுறாக்களில் ஒரு சிறிய வரிசை ஆகும். ஒன்பது உயிரினங்கள் ஹெடெரோடோன்டிடே குடும்பத்தில் ஹெட்டெரோடோன்டஸ் என்ற ஒற்றை இனத்தில் வைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ஒப்பீட்டளவில் சிறியவை. இதில் மிகப்பெரிய இனங்களாக உள்ளவை அதிகபட்சமாக 1.65 மீட்டர்கள் (5.5 அடி) நீளத்தில் இருக்கும். இவை வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டலப் பகுதிகளில் வாழ்கின்றன.
ஆரம்பகால சுராசிக் கால புதைபடிவ பதிவில் ஹீட்டெரோடான்டிஃபார்ம்கள் காணப்படுகின்றன. இருப்பினும், இவற்றின் பழமை இதோடு முடியக்கூடியது என்று கூற முடியாது, இவற்றின் தோற்றம் இன்னும் பின்னோக்கி பழமையானதாக இருக்கலாம்.
விளக்கம்
[தொகு]
குரங்கன் சுறாக்கள் உருவவியல் ரீதியாக தனித்துவமானவை. இவற்றின் வாய் முகப்பு பிற சுறாக்கள் போல் அல்லாமல் முற்றிலும் முன்புறமாக அமைந்துள்ளது. வாயின் முன் பகுதியில் உதட்டுக் குருத்தெலும்புகள் காணப்படுகின்றன. வாயில் காடிப் பள்ளங்கள் உள்ளன. கண் மேல்புறம் முகடு உண்டு.
கண்களில் நிக்ட்டிட்டேட்டிங் சவ்வு இல்லை. இதன் உடலில் சிறிய காற்றுத் துளை உள்ளது. குரங்கன் சுறாக்களுக்கு இரண்டு முதுகு துடுப்புகளும், ஒரு குத துடுப்பும் உள்ளது . முதுகுத் துடுப்பு மற்றும் குத துடுப்புகளில் துடுப்புக் கதிர்கள் மட்டுமல்லாமல், அவற்றின் அடியில் குருத்தெலும்புகள் உள்ளன.
இனங்கள்
[தொகு]குரங்கன் சுறாக்களில் ஒன்பது இனங்கள் விவரிக்கப்பட்டுள்ளன:
- ஹெடெரோடோன்டஸ் ஃபிரான்சிசி ( ஜிரார்ட், 1855) (கொம்பு சுறா)
- ஹெடெரோடோன்டஸ் கேலீடஸ் ( Günther, 1870) (கிரெஸ்டட் குரங்கன் சுறா)
- ஹெடெரோடோன்டஸ் ஜபோனிகஸ் ( மேக்லே & டபிள்யூ ஜே மேக்லே, 1884) (யப்பானிய குரங்கன் சுறா)
- ஹெடெரோடொன்டஸ் மெக்ஸிகனஸ் ( எல்ஆர் டெய்லர் & காஸ்ட்ரோ-அகுயர், 1972) (மெக்சிகன் ஹார்ன்ஷார்க்)
- ஹெடெரோடோன்டஸ் ஓமென்சிஸ் ( ZH பால்ட்வின், 2005) (ஓமன் குரங்கன் சுறா)
- ஹெடெரோடோன்டஸ் போர்டஸ்ஜாக்ஸோனி ( FAA மேயர், 1793) (போர்ட் ஜாக்சன் சுறா)
- ஹெடெரோடோன்டஸ் கோயி ( ஃப்ரெமின்வில், 1840) (கலாபகோஸ் குரங்கன் சுறா)
- ஹெடெரோடோன்டஸ் ராமல்ஹீரா ( ஜேஎல்பி ஸ்மித், 1949) (வெள்ளைப்புள்ளி குரங்கன் சுறா)
- ஹெடெரோடோன்டஸ் ஜீப்ரா ( ஜான் எட்வர்டு கிரே, 1831) (ஜீப்ரா குரங்கன் சுறா)
-
போர்ட் ஜாக்சன் சுறாவின் பல்லின் வகையடுக்கு மற்றும் மூக்கு அமைப்பு
குறிப்புகள்
[தொகு]- ↑ Sepkoski, Jack (2002). "A compendium of fossil marine animal genera (Chondrichthyes entry)". Bulletins of American Paleontology (ocean) 364: 560. http://strata.ummp.lsa.umich.edu/jack/showgenera.php?taxon=575&rank=class. பார்த்த நாள்: 2008-01-09.
- ↑ . N.p.. Web. 10 Jun 2013. http://paleodb.org/cgi-bin/bridge.pl?a=checkTaxonInfo&taxon_no=252518&is_real_user=1