குயின் (இசைக்குழு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குயின்
குயின் கச்சேரி, 1984.
ஜான் டெக்கான் (இடதுகோடி), பிரெஃடி மெர்குரி (நடுவில்), பிரியன் மே (முன்னணியில்), இரோசர் டெய்லர் (இசைப்பேரிகை)
பின்னணித் தகவல்கள்
பிறப்பிடம்இலண்டன், இங்கிலாந்து
இசை வடிவங்கள்ராக்
இசைத்துறையில்1970[1]–present[2]
வெளியீட்டு நிறுவனங்கள்ஈஎம்ஐ, எலெக்ட்ரா, கேபிட்டல், ஆலிவுட், ஐலாந்து
இணைந்த செயற்பாடுகள்இசுமைல் இசைக்குழு, த கிராஸ் இசைக்குழு, குயின் + பவுல் இரோட்ஜர்சு, டேவிட் பௌவி, குயின் + ஆடம் இலம்பெர்ட்
இணையதளம்queenonline.com
உறுப்பினர்கள்பிரியன் மே
இரோசர் டெய்லர்
முன்னாள் உறுப்பினர்கள்பிரெஃடி மெர்குரி
ஜான் டெக்கான்
மேலும் பார்க்க: துவக்ககால உறுப்பினர்கள்

குயின் (Queen) 1970இல் இலண்டனில் உருவான பிரித்தானிய ராக் இசைக்குழு ஆகும். இக்குழு உருவான காலத்தில் பிரெஃடி மெர்குரி (முதன்மை பாடகர், பியானோ), பிரியன் மே (கிட்டார், பாட்டு), ஜான் டெக்கான் (அடித்தொனி கிட்டார்), மற்றும் இரோசர் டெய்லர் (முரசு, பாட்டு) உறுப்பினர்களாக இருந்தனர். இக்குழுவின் துவக்க கால இசைப்படைப்புகள் மேலெழும் இராக், கடின ராக் மற்றும் கன மெட்டல் இரகங்களில் அமைந்திருந்தன. தற்போது வளர்ந்தநிலையில் மெதுவே பாரம்பரிய, வானொலிக்கு உகந்த, பலதரப்பட்ட இசையாக்கங்களை வெளிப்படுத்துகின்றனர்.

நவம்பர் 24, 1991இல் பிரெஃடி மெர்குரி எய்ட்சு-தொடர்புள்ள நோயினால் இயற்கை எய்தினார்.[3] 1997இல் ஜான் டெக்கான் தமது குடும்பத்துடன் கூடுதல் நேரம் கழிக்க விரும்பி ஓய்வு பெற்றார். மற்ற இரு உறுப்பினர்களும் பவுல் இரோசர்சுடன் 2005இலிருந்து 2009 வரை உலகெங்கும் கச்சேரிகளை நடத்தி வந்தனர். இக்குழுவின் மிகப்பெரும் மூன்று பரவலான புகழ்பெற்ற இசைப்பாடல்களாக "வீ வில் ராக் யூ", "வீ ஆர் தி சாம்பியன்சு" மற்றும் "பொகீமியன் ராப்சோடி" விளங்கின.

குயின் இசைக்குழு மொத்தம் தரவரிசைப் பட்டியலில் முதலாவதாக வந்த 18 இசைத்தொகுப்புகளையும் 18 தனிப்பாட்டுக்களையும் 10 இசைக் குறுவட்டுக்களையும் வெளியிட்டுள்ளனர். இவர்களது வட்டுகளின் சாதனை விற்பனை 150 மில்லியனிலிருந்து 300 மில்லியனாக மதிப்பிடப்படுகிறது; உலகின் மிகக் கூடுதலாக விற்பனையாகும் கலைக்குழுக்களில் ஒன்றாக இந்த இசைக்குழு விளங்குகிறது. பிரித்தானிய இசைத்தட்டுத் தொழில் வழங்கும் பிரித்தானிய இசைக்கு மிகச்சிறந்த பங்களிப்பிற்கான விருது 1990இல் இவர்களுக்கு வழங்கப்பட்டது. 2001இல் ராக் மற்றும் ரோல் இசை புகழ்மையத்தில் (Rock and Roll Hall of Fame) இடம் பெற்றனர்.[4]

மேற்சான்றுகள்[தொகு]

  1. "Heritage award to mark Queen's first gig". Bbc.co.uk. 5 March 2013. http://www.bbc.co.uk/news/uk-england-london-21669973. 
  2. "QOL F.A.Q." Queen Online. Are Queen still active as a band? Very much so.
  3. http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/november/24/newsid_2546000/2546945.stm
  4. http://news.bbc.co.uk/1/hi/entertainment/2339131.stm
"https://ta.wikipedia.org/w/index.php?title=குயின்_(இசைக்குழு)&oldid=1721636" இலிருந்து மீள்விக்கப்பட்டது