குயர்வாசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குயர்வாசு (Gujarwas) [1]இந்தியாவின் அரியானா மாநிலத்திலுள்ள மகேந்திரகார் மாவட்டம், அடேலி தாலுக்காவில் உள்ள ஒரு கிராமமாகும்.

அடேலி-மகேந்திரகார் சாலையில் அடேலியிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும், மகேந்திரகாரிலிருந்து 19 கிலோமீட்டர் தொலைவிலும் குயர்வாசு கிராமம் அமைந்துள்ளது. ஒர் ஆண்கள் பள்ளி மற்றும் இரண்டு பெண்கள் பள்ளி என மூன்று அரசுப் பள்ளிகள் இங்கு உள்ளன. ஆண்கள் பள்ளி மெட்ரிக் வரையிலும் பெண்கள் பள்ளிகளில் ஒன்று தொடக்கப் பள்ளி வரையும், மற்றொன்று மேல்நிலைப்பள்ளி வரையிலும் கல்வியளிக்கின்றன.

ஓம் பிரகாசு யாதவ் சனவரி 2016 முதல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமத்தலைவராகப் பணியாற்றி வருகிறார். குயர்வாசு கிராமத்தின் மக்கள்தொகை 2000 நபர்கள் ஆகும். இம்மக்கள் தொகையில் 52% நபர்கள் ஆண்கள் மற்றும் 48% நபர்கள் பெண்களாவர். 58% மக்கள் 35 வயதுக்கு கீழானவர்களாகவும், 28% மக்கள் 35 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் உள்ளனர். 14% மக்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்கின்றனர். வருமானத்திற்கு இவர்கள் விவசாயத்தையே நம்பியுள்ளனர்.

பாபா கோவிந்தா உள்ளிட்ட நான்கு முக்கியமான கோவில்கள் இக்கிராமத்தில் உள்ளன. கோலி பண்டிகைக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் சைத்ர துவாதசி என்ற திருவிழா ஒவ்வோர் ஆண்டும் இங்கு கொண்டாடப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Google Maps". Google Maps. பார்க்கப்பட்ட நாள் 2016-04-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குயர்வாசு&oldid=2165515" இலிருந்து மீள்விக்கப்பட்டது