உள்ளடக்கத்துக்குச் செல்

கும்லா

ஆள்கூறுகள்: 23°2′40″N 84°32′30″E / 23.04444°N 84.54167°E / 23.04444; 84.54167
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கும்லா
நகரம்
கும்லா is located in சார்க்கண்டு
கும்லா
கும்லா
இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் கும்லா நகரத்தின் அமைவிடம்
கும்லா is located in இந்தியா
கும்லா
கும்லா
கும்லா (இந்தியா)
ஆள்கூறுகள்: 23°2′40″N 84°32′30″E / 23.04444°N 84.54167°E / 23.04444; 84.54167
நாடு இந்தியா
மாநிலம்ஜார்கண்ட்
மாவட்டம்கும்லா
பரப்பளவு
 • மொத்தம்7.89 km2 (3.05 sq mi)
ஏற்றம்
652 m (2,139 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்51,264
 • அடர்த்தி197/km2 (510/sq mi)
மொழிகள்*
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
835207
தொலைபேசி குறியீடு எண்06524
வாகனப் பதிவுJH]-07
இணையதளம்www.gumla.nic.in
Barefoot women in pink saris dancing
இளம் சிவப்பு உடையில் சர்ஹுல் நடனம் ஆடும் பெண்கள்

கும்லா (Gumla), இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தின் தென்மேற்கில் அமைந்த கும்லா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். கும்லாவிலிருந்து மாநிலத் தலைநகரான ராஞ்சி 85 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

அமைவிடம்

[தொகு]

சோட்டா நாக்பூர் மேட்டு நிலத்தின் தெற்கில் அமைந்த கும்லா நகரம், தக்காண பீடபூமியின் கிழக்கு முனையில் உள்ளது.

தட்ப வெப்பம்

[தொகு]

கும்லா நகரத்தின் கோடைக்காலத்திய அதிகபட்ச வெப்பம் 40 °C (104 °F) ஆகவும்; குளிர்காலத்திய குறைந்தபட்ச வெப்பம் 3 °C (37 °F) ஆக உள்ளது. ஆண்டு சராசரி மழைப்பொழிவு 1,450 மில்லிமீட்டர்கள் (57 அங்குலங்கள்) ஆகும்.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி, கும்லா நகரத்தின் மக்கள் தொகை 51,264 ஆகும்.[1][2] அதில் ஆண்கள் 26,252 மற்றும் பெண்கள் 25,012 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 6,373 ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 89.33% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 45.93%, இசுலாமியர் 20.35%, கிறித்தவர்கள் 18.26% மற்றும் பழங்குடி சர்னா சமயத்தினர் 14.95% ஆகவுள்ளனர். இந்நகரத்தில் பெரும்பான்மையாக இந்தி மொழி, உருது மற்றும் சத்திரி மொழி, குறுக்ஸ் மொழி, முண்டாரி மொழி போன்ற வட்டார மொழிகள் பேசப்படுகிறது.[3]

போக்குவரத்து

[தொகு]

சாலைப்போக்குவரத்து

[தொகு]

கும்லா நகரம் தேசிய நெடுஞ்சாலை எண் 43 வழியாக மாநிலத் தலைநகரான ராஞ்சியுடன் இணைக்கிறது. தேசிய நெடுஞ்சாலை எண் 78 அண்டை மாநிலமான சத்தீஸ்கருடன் இணைக்கிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
  2. "District Census Handbook, Gumla, Series 21, Part XII B" (PDF). Rural PCA-C.D. blocks wise Village Primary Census Abstract, location no. 801797, page 200-201. Directorate of Census Operations Jharkhand. பார்க்கப்பட்ட நாள் 25 October 2021.
  3. 2011 Census of India, Population By Mother Tongue

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கும்லா&oldid=3516487" இலிருந்து மீள்விக்கப்பட்டது