கும்மாயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கும்மாயம் என்பது காரைக்குடி, செட்டிநாட்டு வீடுகளில் செய்து உண்ணக்கூடிய ஒரு வகை இனிப்புப் பலகாரமாகும் . கும்மாயம் ஆடி மாதத்தில் செய்து பெருமாளுக்கு படைத்தது உண்ணுவதை வழக்கமாக கொண்டுள்ளனர் . கும்மாயம் என்பதற்கு குழையச் சமைத்த பருப்பு என்று பொருள்படும்.[1]

இது உளுந்து, பாசிப் பருப்பு மாவு, நெய் , பனங்கருப்பட்டி போன்றவற்றைச் சேர்த்து வேக வைத்து செய்யப்படும் இனிப்புப் பலகாரமாகும் . ஆடி மாத இறுதியில் கும்மாயமானது தயாரித்து உண்ணப்படுகிறது . இதனை 'கும்மாயத்தோடு வெண்ணெய் விழுங்கிக் குடத்தயிர் சேர்த்து பருகி' என்று முதல் திருமொழியில் பெரியாழ்வார் பாடியுள்ளார். [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. தமிழ் விகசனரி
  2. தினமலர் நாளிதழ் ,14.07.2017, பக் 7
"https://ta.wikipedia.org/w/index.php?title=கும்மாயம்&oldid=2958922" இலிருந்து மீள்விக்கப்பட்டது