கும்பேஷ்வரர் கோயில்
Jump to navigation
Jump to search
கும்பேஷ்வரர் கோயில் | |
---|---|
![]() கும்பேஷ்வரர் கோயில் | |
நேபாளத்தில் கும்பேஷ்வரர் கோயிலின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: | 27°40′36″N 85°19′33″E / 27.67667°N 85.32583°Eஆள்கூறுகள்: 27°40′36″N 85°19′33″E / 27.67667°N 85.32583°E |
பெயர் | |
பெயர்: | Kumbheshwar Mandir |
தேவநாகரி: | कुम्भेश्वर मन्दिर |
அமைவிடம் | |
நாடு: | Nepal |
மாநிலம்: | பாக்மதி மண்டலம் |
மாவட்டம்: | லலித்பூர் மாவட்டம் |
அமைவு: | காத்மாண்டு |
கோயில் தகவல்கள் | |
சிறப்பு திருவிழாக்கள்: | மகா சிவராத்திரி, விநாயகர் சதுர்த்தி முதலியன |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | அடுக்குத் தூபி |
கோயில்களின் எண்ணிக்கை: | 3 |
நினைவுச்சின்னங்களின் எண்ணிக்கை: | 5 |
வரலாறு | |
கட்டப்பட்ட நாள்: | 1392 |
அமைத்தவர்: | மன்னர் ஜெயஷ்திதி மல்லர் |

ஐந்து அடுக்கு கொண்ட அடுக்குத் தூபி அமைப்பில் கட்டப்பட்ட கும்பேஷ்வரர் கோயில்
கும்பேஷ்வரர் கோயில் (Kumbheshwar Temple) (कुम्भेश्वर मन्दिर) நேபாளத்தின் பழைமை வாய்ந்த சிவன் கோயில்களில் ஒன்றாகும். இக்கோயில் பதான் நகரத்திலிருந்து வடக்கே 200 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இக்கோயில் நேபாள மன்னர் ஜெயஷ்தித மல்லரால் 1392-இல் கட்டப்பட்டது. இக்கோயில் ஐந்து அடுக்குகள் கொண்டது. கும்பேஷ்வரர் கோயில் மரச்சிற்பங்களுக்கு புகழ் பெற்றது. இக்கோயிலை நோக்கி பெரிய நந்தி சிலை அமைந்துள்ளது.[1][2] இக்கோயில் பௌத்த அடுக்குத் தூபி கட்டிடப் பாணியில் கட்டப்பட்டது.
கும்பேஷ்வரர் கோயில் வளாகத்தில் பகளாமுகி கோயில், உன்மத்த பைரவர் கோயில்கள் அமைந்துள்ளது.
படக்காட்சிகள்[தொகு]
கும்பேஷ்வரர் கோயில் வளாகத்தில் பகளாமுகி கோயில் காட்சிகள்