கும்பகோணம் ராஜகோபாலசுவாமி கோவில்

ஆள்கூறுகள்: 10°52′18″N 79°06′28″E / 10.8717429°N 79.1076747°E / 10.8717429; 79.1076747
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராஜகோபாலசுவாமி கோயில்
ராஜகோபாலசுவாமி கோயில், கும்பகோணம்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தஞ்சாவூர்
அமைவு:கும்பகோணம்
ஆள்கூறுகள்:10°52′18″N 79°06′28″E / 10.8717429°N 79.1076747°E / 10.8717429; 79.1076747
கோயில் தகவல்கள்

ராஜகோபாலசுவாமி கோயில் இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்தில் அமைந்துள்ள ஒரு விஷ்ணுக் கோயிலாகும்.

அமைவிடம்[தொகு]

இக்கோயில் கும்பகோணத்தின் பெரிய தெருவின் வடக்கில் அமைந்துள்ளது.

மூலவர்[தொகு]

இக்கோயிலின் பிரதான தெய்வம் (மூலவர்) விஷ்ணுவின் வடிவான ராஜகோபாலசுவாமி ஆவார். தாயார் செங்கமலவள்ளி நாச்சியார்.[1]

இதே பெயரில் இன்னுமோர் கோவில் கும்பகோணத்தில் தொப்புத் தெருவில் அமைந்துள்ளது.[2]

சிறப்பம்சம்[தொகு]

கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும் மகாமகத்துடன் தொடர்புடைய ஐந்து விஷ்ணு கோயில்களில் ராஜகோபாலசுவாமி கோயிலும் ஒன்று.[1]

கருடசேவை[தொகு]

கருடசேவை இக்கோயிலின் பிராதான விழாக்களில் ஒன்றாகும்.[1]

மகாசம்புரோக்ஷணம்[தொகு]

மகாசம்புரோக்ஷணம் எனப்படும் இக்கோயிலின் கும்பாபிஷேகம் 19 ஜூன் 2015 அன்று நடந்தேரியது.[3]

இவற்றையும் பார்க்க[தொகு]

தரவுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Mahamaham Festival 2004 (in Tamil), Hindu Religious and Charitable Endowments Administration Department, Government of Tamil Nadu, 2004
  2. Divyadesam
  3. Kumbabishegam at Rajagopalaswamy Temple, Dinamani, Tamil Daily, 20 June 2015