கும்பகோணம் மகாமகம் 2016 சிறப்பு மலர் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கும்பகோணம் மகாமகம் 2016 சிறப்பு மலர்
நூல் பெயர்:கும்பகோணம் மகாமகம் 2016 சிறப்பு மலர்
ஆசிரியர்(கள்):ஆசிரியர் குழு
வகை:சமயம்
துறை:சமயம்
மொழி:தமிழ்
பக்கங்கள்:256
பதிப்பகர்:இந்து சமய அறநிலையத்துறை
பதிப்பு:2016

கும்பகோணம் மகாமகம் 2016 சிறப்பு மலர், 2016 மகாமகத்தின்போது இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள நூலாகும்.[1] [2]

அமைப்பு[தொகு]

தமிழக முதலமைச்சரின் வாழ்த்துச்செய்தி, ஆதீனங்களின் ஆசியுரைகள், திரு வி.க., உ. வே. சாமிநாதையர், கிருபானந்தவாரியார் சுவாமிகள், தொ. மு. பாஸ்கர தொண்டைமான், மா.இராசமாணிக்கனார் போன்றோரின் பதிவுகள், மகாமகம், கும்ப்கோணம் தொடர்பான கட்டுரைகள் காணப்படுகின்றன. கவின் கலைக்கல்லூரி மாணவர்களின் கலை ஓவியங்கள் உள்ளிட்ட பல பதிவுகள் மலருக்கு அணி சேர்க்கின்றன. மதுரை மீனாட்சிசுந்தரேசுவரர், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி, திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன், நெல்லையப்பர், பார்த்தசாரதி, ஸ்ரீரங்கம் நம்பெருமான், அருணாசலேஸ்வரர் ஆகிய இறைவனின் உற்சவமூர்த்திகளின் வண்ணப்படங்கள் உள்ளன.

உசாத்துணை[தொகு]

'கும்பகோணம் மகாமகம் 2016 சிறப்பு மலர்', நூல், (2016; இந்து சமய அறநிலையத்துறை)

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. மகாமக விழா சிறப்பு மலர் பக்தர்கள் பங்கேற்க வாய்ப்பு, தினமலர் 27 டிசம்பர் 2015
  2. மகாமக சிறப்பு மலர் வெளியீடு, தினமணி, 20 பிப்ரவரி 2016