குமுதினி பாசு
குமுதினி பாசு | |
|---|---|
| பிறப்பு | 1873 கல்கத்தா, மேற்கு வங்கம், இந்தியா |
| இறப்பு | 1942 கல்கத்தா, மேற்கு வங்கம், இந்தியா |
| தொழில் | எழுத்தாளர், சீர்திருத்தவாதிசுதந்திரப் போராட்ட வீரர், பெண்கள் உரிமைக்காக போராடிய பெண்மணி |
குமுதினி பாசு (Kumudini Basu) என்பவர் ஒரு வங்காள எழுத்தாளர் ஆவார். சமூக சீர்திருத்தவாதி, சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் பிரிட்டிசு இந்தியாவில் பெண்கள் உரிமை ஆர்வலர் என்று பன்முகங்களுடன் அறியப்படுகிறார். 1873–1942 ஆம் ஆண்டுகள் காலத்தில் இவர் வாழ்ந்தார்.
குடும்பம்
[தொகு]குமுதினி பாசு 1873 ஆம் ஆண்டு இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் உள்ள கல்கத்தாவில் பிறந்தார், இவர் இந்திய தேசியவாதியான கிருட்டிண குமார் மித்ராவின் மூத்த மகளாகப் பிறந்தார்.[1][2] இவருக்கு பசந்தி சக்ரவர்த்தி (நீ மித்ரா) என்ற சகோதரிகள் இருந்தனர்.
குமுதினி தொழிலதிபர் சரத் சந்திர பாசு-முல்லிக்கை மணந்தார்.[1]
தொழில் வாழ்க்கை
[தொகு]குமுதினி பாசு கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார்.[3]
குமுதினி பாசு ஓர் எழுத்தாளராகப் பணியாற்றினார். சுப்ரபாத் (1907-14)[4] என்ற பத்திரிகையை நிறுவி ஆசிரியராகவும் பணியாற்றினார். 1925 -1927 காலத்தில் பங்கலட்சுமி என்ற பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார். பல புத்தகங்களையும் கவிதைகளையும் இவர் வெளியிட்டார். சீகர் பாலிதான் (சீக்கியரின் தியாகம்) என்ற புத்தகமும் இதில் அடங்கும்.[1]
இந்திய ஒத்துழையாமை இயக்கத்தில் பாசு பங்கேற்றார்.[5]
பெண்களின் கல்வியை மேம்படுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்ட இவர் (இந்தியப் பெண்களின் மாபெரும் வட்டம்) என்ற அமைப்பின் செயலாளராகப் பணியாற்றினார்.[6]
இவர் பெண்களின் வாக்குரிமைக்காக பிரச்சாரம் மேற்கொண்டார். மேலும் பெண்களின் வாக்குரிமைக்காகப் போராடிய நிகில் பாங்கிய நாரி வோதாதிகர் சமிதியின் (அனைத்து வங்காளப் பெண்கள் வாக்குரிமை சங்கம்) காமினி ராய் மற்றும் மிருணாளினி சென்[7] ஆகிய தலைவர்களில் ஒருவராகவும் திகழ்ந்தார். ஆகஸ்ட் 16, 1925 அன்று, வங்காள சட்டமன்றம் பெரும்பான்மை வாக்குகளால் ஒரு பெண் வாக்குரிமைத் தீர்மானத்தை நிறைவேற்றியது,[8] 1926 இந்தியப் பொதுத் தேர்தலில் முதல் முறையாக சில வங்காளப் பெண்கள் தங்கள் உரிமையைப் பயன்படுத்த அனுமதித்த்து.[7] 1935 ஆம் ஆண்டில், பாசு இந்திய வாக்குரிமைக் குழு என்றும் அழைக்கப்படும் லோதியன் குழுவிற்கு உலகளாவிய வாக்குரிமை குறித்த தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள கடிதம் எழுதினார். கல்கத்தா நகராட்சியின் முதல் பெண் கவுன்சிலராக குமுதினி பாசு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[9]
பெண்களின் வாக்களிக்கும் உரிமைகளுக்காக அவர் பெரிதும் வாதிட்ட போதிலும், வாக்களிப்பது என்பது மரியாதைக்குரிய பெண்களை விபச்சாரிகள் போன்ற "விரும்பத்தகாத பெண்களுடன்" கலக்கவோ அல்லது குழப்பமடையவோ கட்டாயப்படுத்தக்கூடும் என்று பாசு அஞ்சினார்.[6] பாலியல் தொழிலாளர்கள் காவல்துறையில் பதிவு செய்ய வேண்டும் என்றும், வாக்களிக்க தனி வாக்குச் சாவடிகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் முன்மொழிந்தார்.[6]
ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரின் ஆன்மீக, அறிவுசார் மற்றும் உடல் சீரழிவுக்கு" பர்தா நடைமுறை முக்கிய காரணங்களில் ஒன்று என பாசு தனது கண்டனம் தெரிவித்தர்"[10]
இவர் 1942 இல் இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் கல்கத்தாவில் இயற்க்கை எய்தினார்.
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 3 "Mitra, Kumudini". The Incarnate Word. Retrieved 2025-01-17.
- ↑ Pal, Rina (August 2019). "Role of Women in Indian Freedom Struggle (1905 – 1927)". Anudhyan An International Journal of Social Sciences (AIJSS): 32. https://rnlkwc.ac.in/pdf/anudhyan/volume4/Role-of-Women-in-Indian-Freedom-Struggle-1905%E2%80%931927-Dr-Rina-Pal.pdf.
- ↑ Forbes, Geraldine Hancock (2005). Women in Colonial India: Essays on Politics, Medicine, and Historiography (in ஆங்கிலம்). Orient Blackswan. p. 70. ISBN 978-81-8028-017-7.
- ↑ Mukherjee, Sreemati (2024-04-30). Women and the Romance of the Word: 19th Century Contexts in Bengal (in ஆங்கிலம்). Bloomsbury Publishing. p. 91. ISBN 978-93-5640-604-9.
- ↑ Mukhopādhyāẏa, Amitābha (1996). Women in Indian Life and Society (in ஆங்கிலம்). Punthi Pustak and Institute of Historical Studies. p. 221. ISBN 978-81-85094-97-7.
- 1 2 3 Sarkar, Asok Kumar; Gupta, Satyajit Das (2024). Understanding Women's Empowerment in South Asia: Perspectives on Entitlements and Violations (in ஆங்கிலம்). Springer Nature. p. 25. ISBN 978-981-16-7538-6.
- 1 2 Bharati Ray (1990). "Women in Calcutta: the Years of Change". In Chaudhuri, Sukanta (ed.). Calcutta: The Living City. Vol. II: The Present and Future. Oxford University Press. pp. 36–37. ISBN 978-0-19-563697-0.
- ↑ Asthana, Pratima (1974). Women's Movement in India (in ஆங்கிலம்). Vikas Publishing House. p. 113. ISBN 978-0-7069-0333-1.
- ↑ Hust, Evelin; Mann, Michael (2005). Urbanization and Governance in India (in ஆங்கிலம்). Manohar. p. 88. ISBN 978-81-7304-609-4.
- ↑ Patil, V. T. (1989). New Dimensions and Perspectives in Gandhism (in ஆங்கிலம்). Inter-India Publications. p. 394. ISBN 978-81-210-0230-1.