உள்ளடக்கத்துக்குச் செல்

குமாவோனி ஹோலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குமாவோனி ஹோலி
கடைபிடிப்போர்குமாவோனி மக்கள்
வகைஇந்து சமய பாரம்படியக் கொண்டாட்டம்
கொண்டாட்டங்கள்ஹோலிகாவிற்கு முந்தைய இரவில்
நாள்per இந்து நாட்காட்டியின்படி
நிகழ்வுவருடாந்திரம்

குமௌனி அல்லது குமாவோனி ஹோலி என்பது இந்தியாவின் குமாவோன் பகுதியில் உள்ள இந்து பண்டிகையான ஹோலியின் வரலாற்று மற்றும் கலாச்சார கொண்டாட்டமாகும். குமௌனி மக்களுக்கு இது மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். இது நன்மையின் வெற்றியையும், குளிர்காலத்தின் முடிவையும், புதிய விதை பருவத்தின் தொடக்கத்தையும் குறிக்கிறது. இது வட இந்திய இமயமலை சார் விவசாய சமூகத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பண்டிகையாகும். இப்பண்டிகை வட இந்தியாவின் கலாச்சார மரபுகள் மற்றும் குமாவோனின் உள்ளூர் மரபுகளின் கலவையாகும்.

பசந்த பஞ்சமியில் இருந்து தொடங்கும் குமாவோனி அதன் வடிவம் எதுவாக இருந்தாலும், அது பைத்கி ஹோலி, காரி ஹோலி மற்றும் மஹிலா ஹோலி என அனைத்து வடிவங்களிலும் ஒரு இசை நிகழ்ச்சியாக இருப்பது, குமாவோனி ஹோலியின் பண்டிகையில் தனித்துவமாகும். இதன் காரணத்தால் குமாவோனில் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு ஹோலி கொண்டாட்டங்கள் நீடிக்கிறது. [1] பைத்கி ஹோலி மற்றும் காரி ஹோலி ஆகியவை தனித்தன்மை வாய்ந்தவை. அவை அடிப்படையாக மெல்லிசைப் பாடல்கள், வேடிக்கை மற்றும் ஆன்மீகத்தின் கலவையாக உள்ளன. இந்த பாடல்கள் பாரம்பரிய ராகங்களை அடிப்படையாகக் கொண்டவை. பைத்கி ஹோலி நிர்வான் கி ஹோலி அல்லது இரட்சிப்பின் ஹோலி என்றும் அழைக்கப்படுகிறது.

குமௌனி ஹோலி, நாட்டில் எங்கும் கொண்டாடப்படும் ஹோலி கொண்டாட்டங்களில் இருந்து மிகவும் வேறுபட்ட குணாங்களைக் கொண்டுள்ளது. [2]

ஹோலியின் வடிவங்கள்

[தொகு]

ஹோலி கொண்டாட்டத்தின் தொடக்கமாகக் கருதப்படும் ஹோலிப் பாடல்கள் , பலவகைகளைக் கொண்டுள்ளன. இவை அனைத்தும் பஸந்த் பஞ்சமி அன்றே தொடங்குகின்றன.

பைதகி ஹோலி

[தொகு]

பைதகி ஹோலி (உட்காரும் ஹோலி)என்பது குமாவோன் முழுவதும் பசந்த பஞ்சமி தினத்தில் தொடங்கி துல்ஹெந்தி (அல்லது சந்திர மாதமான பால்குனாவின் கடைசி பௌர்ணமி நாள்) வரையிலான இசைக் கூட்டக் கொண்டாட்டத்தின் ஒரு வடிவமாகும். குமாவோனின் சில பகுதிகளில், குளிர்காலத்தின் உச்சக்கட்டத்தில், டிசம்பர் மாதத்தில், அதாவது இந்திய மாதமான பௌஷ்ஷின் முதல் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி, மார்ச் (4 மாதங்கள்) வரை பைதகி ஹோலியைக் கொண்டாடுகிறார்கள். மேலும் பைதகி ஹோலியின் போது வண்ணங்கள் பயண்படுத்தப்படுவதில்லை.

பைதகி ஹோலி பாடல்கள் ஹிந்துஸ்தானி பாரம்பரிய இசையின் பாரம்பரிய மரபுகளை அடிப்படையாகக் கொண்டவை. ஆனால் குமாவோனி நாட்டுப்புற இசை மரபுகளின் சாயத்தைப் பெரிதும் கொண்டுள்ளன.

ஹோலியர்கள் (ஹோலிப் பாடல்களைப் பாடுபவர்கள்) ஹார்மோனியம் மற்றும் தபேலா போன்ற பாரம்பரிய இசையுடன் கூடிய பாடல்களைப் பாட, மக்கள் கூடும் கோவில்களின் வளாகத்திலிருந்து பைத்கி ஹோலி தொடங்குகிறது. பொதுவாக பௌஷின் முதல் ஞாயிறு முதல் நிர்வாண ஹோலி என்று அழைக்கப்படுகிறது. சுவாமி பிரம்மானந்த் எழுதிய சில ஹோலிகளும் இங்கு பாடப்படுகின்றன இவவை பிரம்மானந்த் கி ஹோலி என்று அழைக்கப்படுகின்றன. சிவராத்திரியிலிருந்து தொடங்கி ஹோலியின் கவனம் ஷிவ்பாடி ஹோலிக்கு திரும்புகிறது.

மிகவும் பிரபலமான பைதகி ஹோலி குழுக்கள் சம்பவத் மாவட்டத்தில் உள்ளன. மேலும் அனைத்து குடும்பங்களிலும் குறைந்தபட்சம் ஒரு இசைக் கலைஞரேனும் இருக்கிறார். அவர்கள் சொந்தமாக இசையமைத்த பைத்தாகி ஹோலிப் பாடல்களை பிராந்திய குமாவோனி மொழி அல்லது இந்தி மொழியில் பாடுகிறார்கள்.

ராகங்களை அடிப்படையாகக் கொண்ட பாடல்கள் எப்போது பாடப்பட வேண்டும் என்பதில் குமாவோனிகள் மிகவும் கவனம் கொண்டுள்ளனர். உதாரணமாக, நண்பகலில் பிலு, பிம்பலாசி மற்றும் சாரங் ராகங்களின் அடிப்படையிலான பாடல்கள் பாடப்படுகின்றன. அதே நேரத்தில் கல்யாண், ஷியாம்கல்யாண், காஃபி, ஜெய்ஜவந்தி போன்ற ராகங்களின் அடிப்படையிலான பாடல்கள் மாலை பாடப்படுகின்றன. ராகங்கள் (மெல்லிசைகள்) வழங்குவதிலும் ஒரு குறிப்பிட்ட தனித்துவம் உள்ளது. அவற்றில் ஜங்லகாஃபி (இது காமாஜின் சிறப்பு அங்கம்) போன்ற சில, குமௌனி ஹோலிக்கு தனித்துவமானவை. ஹோலியின் பாடல்களில் தாள பயன்பாடும் தனித்துவமானது. குமௌனி ஹோலியில் உள்ள தமார் தாளம் இந்திய பாரம்பரிய இசைப்படி 14 ட்மாத்திரைகளல்லாது 16 மாத்திரைகளைக் கொண்டுள்ளது. மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் மற்றொரு தாளம் சஞ்சர் என்று அழைக்கப்படுகிறது. இதிலும் 16 மாத்திரைகள் உள்ளன. இவை தவிர டீன்டல் மற்றும் கெஹர்வா ஆகியவை பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. சில சமயங்களில் தாத்ரா பயன்படுத்தப்படுவதையும் காணலாம். பைதாக் அல்லது கூட்டங்கள் உள்ளூர் சமூக மையங்களிலும் வீடுகளிலும் கூட நடத்தப்படுகின்றன. இது பொதுவாக தமார் ராகத்தில் தொடங்கி பைரவி ராகத்தில் முடிகிறது.

பாடல்கள் பொதுவாக மத இயல்புடனும் இந்து கடவுள்களான கிருஷ்ணர் மற்றும் ராமர் வாழ்க்கையிலிருந்து எடுக்கப்பட்ட கதைகளாகவும் உள்ளன. இன்னும் இந்த கூட்டங்களில் இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் கூட பங்கேற்பதால் இது மதநல்லினக்க கொண்டாட்டமாகப் பார்க்கப் படுகிறது.

காதி ஹோலி

[தொகு]

காதி ஹோலி (நிற்கும் ஹோலி) பொதுவாக பைதகி ஹோலியுடன் தொடங்கும், ஆனால் சில சமயங்களில் பைதகி ஹோலியை விட சற்று தாமதமாகவும் தொடங்குகிறது. குமாவோனின் கிராமப்புறங்களில் இது பெரும்பாலும் கொண்டாடப்படுகிறது. காதி ஹோலியின் பாடல்கள் பாரம்பரிய நோக்தார் தொப்பி, நீள அங்கி மற்றும் சட்டை அணிந்த நாட்டியக்காரர்கள் ஆட, தோல், ஜோடா மற்றும் ஹுர்கா போன்ற இசைக்கருவிகள் இசைக்கப் பெற்று மக்களால் பாடப்படுகின்றன.

பைதகி ஹோலியின் பாரம்பரிய இசைப்பாடல்கள் குமாவோனி சுவை மிகுந்தவை. காதி ஹோலி பாடல்களை குழுவாகப் பாடும் ஆண்கள், வெவ்வேறு வீடுகளுக்குச் சென்று அந்த வீட்டின் உறுப்பினர்களை வாழ்த்தி, இல்லத்தரசிகளின் செழிப்புக்காக பிரார்த்தனை செய்யும் பாடல்களைப் பாடுகிறார்கள். ஆண்களின் இந்த குழுக்கள் டோலி என்று அழைக்கப்படுகின்றன.

பைதகி ஹோலியின் மிகவும் சோகமான தன்மைக்கு மாறாக காதி ஹோலி உற்சாகமும் உல்லாசமும் நிறைந்ததாக உள்ளது. [3][4]

மஹிலா ஹோலி

[தொகு]

அவை பைத்தாகி போன்ற ஆனால் பிரத்தியேகமாக பெண்களால் உருவாக்கப்பட்ட கூட்டங்களாகும்.[5]உணவு

[தொகு]

ஹோலிக்கான சிறப்பு சமையல் தயாரிப்புகளில் குஜியா (வறுத்த மாவா,திடப் பால் சாறு, இனிப்பு நிரப்பப்பட்ட வறுத்த பாலாடை மற்றும் உலர்ந்த பழங்கள் மற்றும் கொட்டைகள்) மற்றும் உள்ளூர் மசாலா மற்றும் பாங் கி சட்னியுடன் கூடிய கொத்தமல்லி இலைகள் சேர்த்த வறுத்து வேகவைத்த உருளைக்கிழங்கு (ஆலூ கே குட்கே) ஆகியவை அடங்கும்.

முக்கியத்துவம்

[தொகு]

அவரது தீய தந்தை ஹிரண்யகசிபுவின் திட்டங்களிடமிருந்து, பக்திமிக்க பிரஹலாதன் வெற்றி பெற்றதன் அடையாள முக்கியத்துவத்தைக் குறிப்பது உள்பட, குமாவோன் ஹோலியில், நீண்ட இமயமலை குளிர்காலத்தின் முடிவையும், புதிய விதைப்பு பருவத்தின் தொடக்கத்தையும் குறிக்கிறது. இது குமாவோனி விவசாயிகளுக்கு ஒரு சில நாட்களுக்கு கடினமான விவசாய உழைப்பில் இருந்து ஒரு இடைவெளியைகத் தருகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "eUttaranchal - Rediscover Uttarakhand - Tourism, Culture & People". www.euttaranchal.com. 6 March 2015.
  2. http://www.thefreelibrary.com/Kumaon's+'Baithki+Holi'+begins+with+traditional+fervour.-a0220698197 [தொடர்பிழந்த இணைப்பு]
  3. "झनकारो झनकारो झनकारो / कुमाँऊनी - कविता कोश". www.kavitakosh.org. Archived from the original on 2010-07-13. பார்க்கப்பட்ட நாள் 2023-02-24.
  4. "बलमा घर आयो फागुन में / कुमाँऊनी - कविता कोश". www.kavitakosh.org. Archived from the original on 2010-07-13. பார்க்கப்பட்ட நாள் 2023-02-24.
  5. "बलमा घर आयो फागुन में / कुमाँऊनी - कविता कोश". www.kavitakosh.org. Archived from the original on 2010-07-13. பார்க்கப்பட்ட நாள் 2023-02-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குமாவோனி_ஹோலி&oldid=3726083" இலிருந்து மீள்விக்கப்பட்டது