குமார் சா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

குமார் சா[தொகு]

குமார் சா என்பவர் தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் ஒரு கதைசொல்லி ஆவார். இவர் ஒரு குழந்தைகள் கலைஞர். தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களுக்கெல்லாம் பயணம் செய்து குழந்தைகளைச் சந்தித்து குழந்தைகளுக்கான கதைகளை குழந்தைகளின் மொழியில் சொல்லி வாழும் ஒரு கலைஞர். இவர் இலட்சக்கணக்கான குழந்தைகளை அவர்களின் வாழ்விடத்திற்கே சென்று சந்தித்து அவர்களுடன் தங்கி வாழ்ந்து வருகிறார். குழந்தைகளின் உலகம் கதைகளால் நிறைந்தது. குழந்தைகளுக்குக் கதைகளைச் சொல்ல இன்று பாட்டிகள் தாத்தாக்கள் வீடுகளிலில்லை கதை சொல்ல பெற்றோருக்கு நேரமுமில்லை எனக் கூறும் இவர் கதை சொல்லலையும் அதற்காகப் பயணிப்பது என்பதையுமே  தம் முழுநேரப்பணியாகக் கருதி செய்து வருகிறார். 
குமார் சா

பிறப்பு[தொகு]

குமார் சா தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தின் திருவில்லிபுத்தூரில் 1987 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 16 ஆம் நாள் பிறந்தார்.

கல்வி[தொகு]

குமார்சா தமது முன்பருவக்கல்வியை கோவை மற்றும் திருவில்லிபுத்தூரில் ஆல்வின் மெட்ரிக் பள்ளியிலும், தொடக்கக்கல்வியை திருவில்லிபுத்தூர் திரு.வி.க அரசு நடுநிலைப்பள்ளியிலும், இடைநிலைக்கல்வியை அருப்புக்கோட்டை சி.எஸ்.ஐ, அல்அமீன் பள்ளிகளிலும் மேனிலைக் கல்வியை அப்துல் கலாம் படித்த ஸ்வார்ட்ஸ்  மேல்நிலைப் பள்ளியிலும் கற்றார். தமது டிப்ளமோவை சேலம் சி.எஸ்.ஐ பாலிடெக்னிக் கல்லூரியிலும், பொறியியல் படிப்பை சென்னை வேல் ஹைடெக் கல்லூரியிலும் படித்தார்.

பணிகள்[தொகு]

குமார் சா 2007 ஆம் ஆண்டு அறம் பவுண்டேசனுடன் இணைந்து கிராமங்களில் அமைந்துள்ள ஆதரவற்றோர் இல்லங்கள் முதியோர் இல்லங்கள் ஆகியவற்றில் சேவைப்பணிகளிலும் அவற்றிற்கு பொருளீட்டும் நடவடிக்கைளிலும் ஈடுபட்டார். 2011 ஆம் ஆண்டு திருவள்ளூர், பழவேற்காடு அருகே திருப்பாலைவனம் எனும் ஊரின் செஞ்சியம்மன் நகர் குழந்தைகளுக்கென தனிப்பயிற்சிக் கல்விக்கூடத்தை நிறுவி அவ்வூரில் கல்லூரிகளைக் கண்டிராத மாணவர்களிடம் பணியாற்றி அவ்வூரின் முதல் தலைமுறை பட்டாரிகளை உருவாக்கும் முயற்சியில் சுபாஷ், ஸ்ரீலேகா, ராமச்சந்திரன் ஆகியோருடன் இணைந்து சாதனை படைத்தார்.

 2013 ஆம் ஆண்டில் நவீன், பாஸ்கர், பிரவீன் ஆகியோருடன் இணைந்து கதை சொல்ல வாங்க எனும் அமைப்பை குழந்தைகளுக்காகத் தொடங்கி ஊர்ஊராகச் சென்று குழந்தைகள் கதை நிகழ்வை நடத்தினார். 
 கடலோரக் கதை என்ற அமைப்பைப் பெரியவர்களுக்காகத் தொடங்கி இசையுடன் கதை சொல்லும் புதுமையான முயற்சியைச் செய்து காட்டினார்.  
2015 இல் மணல் மகுடி நாடகக்குழுவுடன் இணைந்து நடிப்புக்கலையில் பரிணமித்து வருகிறார்.

2016 இல் ஸ்பேஸ் என்ற அமைப்பை பொள்ளாச்சி ஆழியாரில் தொடங்கி குழந்தைகள் கலைக்கூடத்தை நடத்திவருகிறார்.

2017 இல் ஆழியாரில் பயணப்பள்ளியை நிறுவி பயணங்களின் மூலம் கற்றல் மற்றும் சமுதாயப் பணி ஆற்றுதலைச் செய்து வருகிறார்.

சாதனைகள்[தொகு]

இந்தியா முழுவதும் குழந்தைகளைச் சந்தித்து கதைசொல்லிவரும் இவர் இதுவரையிலும் தோராயமாக 5 இலட்சம் குழந்தைகளுக்கு கதைசொல்லியுள்ளார்.

இந்தியா முழுவதும் செல்வதான தனது முதல் பயணத்தில் ரூபாய் 500 மட்டுமே கையில் வைத்துக்கொண்டு கன்னியாகுமரி முதல் தர்மசாலா வரை சென்று திரும்பினார்.

இந்தியா முழுவதும் பயணிப்பதான தனது இரண்டாவது பயணத்தில் ரூபாய் 580 செலவில் சென்னையில் பயணத்தைத் தொடங்கி இந்திய பாகிசுதான் எல்லையான ரானாகட்ச் வரை சென்று திரும்பினார்.

கதைகள் காப்பாற்றப்பட வேண்டும் என்ற தலைப்பை வலியுறுத்தி மிதிவண்டிப் பயணத்தை சென்னையில் தொடங்கி தமிழ்நாடு மற்றும் கேரளாவில் மொத்தம் பத்தாயிரம் கிலோமீட்டர் பயணித்துள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குமார்_சா&oldid=2377477" இருந்து மீள்விக்கப்பட்டது