குமாரவேல் பிரேம்குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குமாரவேல் பிரேம்குமார்
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியன்
பிறப்பு2 சூன் 1993 (1993-06-02) (அகவை 27)
தஞ்சாவூர், தமிழ்நாடு
விளையாட்டு
நாடுஇந்தியா
விளையாட்டுTrack & Field
நிகழ்வு(கள்)நீளம் தாண்டுதல்
கழகம்செயின்ட் ஜோசப் விளையாட்டு அகாடமி
பயிற்றுவித்ததுபி.நாகராஜன்
சாதனைகளும் விருதுகளும்
தனிப்பட்ட சாதனை(கள்)நீளம் தாண்டுதல் (வெளி விளையாட்டு அரங்கம்): 8.09 (நியு டெல்லி 2013)
நீளம் தாண்டுதல் (உள் விளையாட்டு அரங்கம்): 7.92 (சீனா 2016)

குமாரவேல் பிரேம்குமார் என்பவர் தமிழ்நாட்டில் இருந்து வந்திருக்கும் இந்திய நீளம் தாண்டுபவர்.உள் விளையாட்டு அரங்க நீளம் தாண்டுதல் மற்றும் வெளி விளையாட்டு அரங்க நீளம் தாண்டுதல் இரண்டிலும் தேசிய சாதனை படைத்துள்ளார்.2012-ல் நடைபெற்ற ஆசிய உள் விளையாட்டு அரங்க தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கல பதக்கத்தையும் மற்றும் 2013-ல் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றுள்ளார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

பிரேம் குமார் தமிழ்நாட்டில் உள்ள தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு கிராமத்தில் 1993 சூன் 2ந்தேதி பிறந்தார்.அவருக்கு ஒரு வயது இருக்கும்போது அவரது தந்தை இறந்ததால் தாய் உமாராணி வளர்த்தார்.அவரது தாய் உள்ளூர் தேவாலயத்தில் பணிபுரிந்து குடும்பத்தை காப்பாற்றினார்.[1].அவர் தஞ்சாவூர் புனித அந்தோணியார் பள்ளியில் கல்வி பயின்றார்.அங்கே பணிபுரிந்த உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ் பிரேம்குமாரின் திறனை கண்டறிந்து தடகள வீரர் ஆவதற்கு ஊக்குவித்தார்.2010 -ல் பதின்பருவத்தில் சென்னைக்கு சென்று பயிற்சியாளர் பி.நாகராஜனிடம் பயிற்சி பெற்றார்.பச்சையப்பாக் கல்லூரியில் மேல்நிலைக் கல்வியில் சேர்ந்தார்.முதன்மை(பிரைம்) விளையாட்டு அகாடமியில் பி.நாகராஜனிடம் பயிற்சி பெற்றார்.2012-ல் மேல்நிலைக் கல்வியில் வெற்றி பெற்றார்[2].

விளையாட்டு வாழ்க்கை[தொகு]

Premkumar's seasons' best distances (in metres)

பிரேம்குமார் சென்னை, செயின்ட் ஜோசப் விளையாட்டு அகடமியில் பி.நாகராஜனிடம் பயிற்சி பெற்றார்.மே 2011-ல் கோயம்புத்தூரில் நடைபெற்ற மூத்தவர்களுக்கான 84வது மாநில தடகள போட்டியில் அகடமி சார்பில் பங்குப்பெற்று 7.75 மீட்டர்(25.4அடி) அளவில் நீளம் தாண்டி தங்கப்பதக்கம் வென்றார்.[3].ஆகஸ்ட் 2011-ல் சென்னையில் நடைபெற்ற தென் மண்டல ஜுனியர் தடகள சாம்பியன்ஷிப்பில் தமிழ்நாடு சார்பில் கலந்துகொண்டார்.அவர் 7.52 மீட்டர்(24.7அடி) புதிய தேசிய ஜுனியர் என்ற சாதனை புரிந்து தங்கம் வென்றார்[4]. பிரேம்குமார் 2012-ல் நடைபெற்ற ஆசிய உள் விளையாட்டு அரங்க தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பங்குப்பெற்று சைனாவை சார்ந்த ஹங்சூவின் இடத்தை பெற்றார்.அவர் 7.62 மீட்டர்(25.0 அடி) அளவில் நீளம் தாண்டி புதிய தேசிய உள்விளையாட்டு அரங்க நீளம் தாண்டுபவர் என்ற சாதனையை புரிந்து வெண்கல பதக்கத்தையும் வென்றார்.2006-ல் தாய்லாந்து பாட்டாயாவில் நடைபெற்ற ஆசிய உள் விளையாட்டு அரங்க தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 7.49மீட்டர் நீளம் தாண்டிய மஹாசிங்கின் முந்தய சாதனையை முறியடித்தார்.[5] .பிரேம்குமார் மட்டும் தான் இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற ஒரே இந்தியர் ஆவார்.

மேற்கோள்[தொகு]

  1. Kumaraswami, Lakshmi (8 September 2012). "Rural Rockstars: Kumaravel Premkumar". India Today.
  2. Hardy, James (2 August 2012). "Chennai's Olympics hopefuls: Kumaravel Premkumar". The Times of India. Chennai. Times News Network. Retrieved 9 August 2013.
  3. Record double for Suriya". The Hindu. Chennai. 23 May 2011. Retrieved 9 August 2013.
  4. Premkumar, Jessy steal the limelight". The Hindu. Chennai. 21 August 2012. Retrieved 9 August 2013
  5. Kumaravel Premkumar wins bronze in Asian Indoor Athletics". Jagran Prakashan. 18 February 2012. Retrieved 11 August 2013.