குமாரதேவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குமாரதேவர் என்பவர் சாந்தலிங்க அடிகளின் சீடராவர். இவர் அத்வைத உண்மை, ஆகம நெறியகவல், உபதேச சித்தாந்தக் கட்டளை, சகச நிட்டை, சிவதரிசன அகவல் போன்ற நூல்களை எழுதியுள்ளார். இவர் இயற்றிய மகாராஜா துறவு எனும் நூல் பெரும்புகழ் பெற்றது. இவர் கர்நாடக வீர சைவ மரபினைச் சார்ந்தவர்.

[1]

இவரது திருமடம் ஒன்று துறையூர் ஆதீனத்திற்கு கட்டுப்பட்டு கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் திருக் குமாரதேவர் மடம் உள்ளது. இங்கு இவர் தியானம் செய்த குகை உள்ளது. மேலும் இவர் விருதாச்சலம் பெரியநாயகி சமேத பழமலைநாதர் மீது பாடல் பாடியுள்ளார்.

காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. http://www.tamilvu.org/courses/degree/a041/a0414/html/a041432.htm
"https://ta.wikipedia.org/w/index.php?title=குமாரதேவர்&oldid=3270281" இலிருந்து மீள்விக்கப்பட்டது