குமாரசாமி கவுண்டன் வலசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குமாரசாமி கவுண்டன் வலசு இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம்  ஆகும். இது அப்பனூத்து பஞ்சாயத்திற்கு உட்பட்ட கிராமம் ஆகும். இங்குள்ள மக்களின் முக்கிய தொழில் விவசாயம் ஆகும்.பழனி-யில் இருந்து சுமார் 25 கி.மீ தொலைவிலும் தாராபுரத்தில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவிலும்  அமைந்துள்ளது.

மக்கள்[தொகு]

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தோராயமாக ~ 300 மக்கள் வசிக்கின்றனர்.இங்கு ஒரு ஆரம்பப்பள்ளி உள்ளது. அது ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை தமிழ்வழி கல்வி வழங்குகிறது.[1]

கோவில்கள்[தொகு]

  • காளியம்மன் கோவில்
  • விநாயகர் கோவில்
  • கருச்சி அப்பிச்சி கோவில்
  • முனியப்பன் கோவில்
  • காட்டு கருப்பணசாமி கோவில்

வேளாண்மை[தொகு]

இவ்வூரின் முக்கிய தொழிலாக வேளாண்மை விளங்குகிறது. முக்கியமாக மக்காசோளம், நிலக்கடலை, பருத்தி ஆகியன பயிரிடப்படுகிறது. மழை மற்றும் நிலத்தடிநீர் ஆகியவை முக்கிய நீர் ஆதாரங்களாகும்.

  • பயிர்கள்:மக்காசோளம், நிலக்கடலை, பருத்தி
  • காய்-கறிகள் : கத்தரி , வெங்காயம் , மிளகாய் , வெண்டைக்காய் , தக்காளி, சுரைக்காய் ,பீர்க்கங்காய் , பூசணி.

இவையனைத்தும் ஒடடனசத்திரம் காந்தி சந்தை மற்றும் பழனி உழவர் சந்தைக்கு விற்பனைக்கு எடுத்து செல்லப்படுகிறது. இவை தவிர பாசிப்பயறு,உளுந்து , கொள்ளு ,நரிப்பயிர் போன்ற தானியங்களும் பயிரிடப்படுகின்றன. விவசாயம் சார்ந்த ஆடு வளர்ப்பு, மாடுவளர்ப்பு ஆகியவையும் செய்யப்படுகிறது.

தோட்டங்கள்[தொகு]

  • பறையன் காடு
  • மந்தை தோட்டம்
  • பீயமரத்தோட்டம்
  • உரம்புத்தோட்டம்
  • பள்ளக்காடு
  • பெரிய தோட்டம்
  • அங்காகாட்டுத்தோட்டம்
  • சுமைகாரன் தோட்டம்
  • உப்புலியன் காடு
  • சல்லிக்காட்டு தோட்டம்
  • மேட்டான்காடு
  • புதுத்தோட்டம்
  • கடையூட்டுத்தோட்டம்
  • வடக்கு வலவு
  • தெற்கு தெரு
  • ஊர்பண்ணாடி தோட்டம்
  • பூச்சகாட்டு தோட்டம்
  • அருவன்காட்டு தோட்டம்
  • பெரியகரடு
  • வையாலிகாடு
  • நடுத்தோட்டம்
  • ஆள்காரன் தோட்டம்
  • காலணி

பேருந்துகள்[தொகு]

சாலக்கடை 5

தடம் --> பழனி - தொப்பம்பட்டி - திருவாண்டாபுரம் - அப்பனூத்து - கு.க.வலசு - சாலக்கடை

22

தடம் --> பழனி - தொப்பம்பட்டி - திருவாண்டாபுரம் - அப்பனூத்து - கு.க.வலசு

உழவர் சந்தை பேருந்து

தடம் -->  பழனி - பூலாம்பட்டி - வாகரை - திருவாண்டாபுரம் - அப்பனூத்து - கு.க.வலசு

  1. வாக்காளர் பட்டியல்[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=குமாரசாமி_கவுண்டன்_வலசு&oldid=3444847" இலிருந்து மீள்விக்கப்பட்டது