குமரி ஆதவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

குமரி ஆதவன் தமிழ்நாட்டில் உள்ள எழுத்தாளர்களில் ஒருவர். இவர் கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்தவர். இவரது இயற்பெயர் ஜெஸ்டின் பிரான்சிஸ் என்பதாகும். இவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் மணலிக்கரையில் உள்ள புனித மரிய கொரற்றி மேல் நிலை பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். தமிழின் மேல் கொண்ட ஆர்வத்தால் ஓய்வு நேரங்களில் தமிழுக்கும் தொண்டாற்றி வருகிறார். இவர் ஆகத்து 4, 1970ம் ஆண்டு பிறந்தார். இவர் மேடை பேச்சுகளிலும் பட்டி மன்ற பேச்சுகளிலும் சிறந்து விளங்குபவர்.

சார்ந்திருக்கும் அமைப்புக்கள்[தொகு]

இவர் அமுத சுரபி இலக்கிய இயக்கத்தின் செயலாளராக பணிசெய்து வருகிறார். தமிழாலயம் , தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கம் , களரி பண்பாட்டு ஆய்வு மையம் , தமிழ்நாடு அறிவியல் இயக்கம் போன்றவைகளில் உறுப்பினராகவும், பொறுப்பாளராகவும் இருந்து பணிசெய்கிறார் . இலக்கியப் பட்டறை என்ற அமைப்பை உருவாக்கி இளைஞர்களுக்கு இலக்கிய ஆளுமைகள் மூலம் பயிற்சி வழங்கி வருகிறார்.

சமுதாய நோக்கு[தொகு]

சன் டிவி அரட்டை அரங்கத்தில் இரண்டு முறை கலந்து கொண்டு முதன்மை பேச்சாளராக அனைவருடைய பாராட்டையும் பெற்றார் . முதல் அரட்டை அரங்கத்தில் குமரி மாவட்ட நாடார்களுக்கு ஏற்பட்ட தீண்டாமை கொடுமையை எதிர்த்து போராட காரணமான நிகழ்வான தாலி அறுத்தான் சந்தை நிகழ்ச்சியை மிக அருமையாக பதிவு செய்தார். தற்ோது திண்டுக்கல் ஐ. லி ோனி பட்டிமன்ற குழுவில் கலைஞர் டி.வி. யிலும் வெளி நாடுகளுக்கும் சென்று பேசி வருகிறார்.

இலக்கிய பங்களிப்புக்கள்[தொகு]

இவருடைய சிகரம் தொடு என்ற கவிதை ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி தன்னாட்சி,நாகர்கோவில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பாடமாக இருந்தது.கைதிகள் கவிதை மா.சு. பல்கலைக் கழகத்தில் பாடமாக இருந்தது. தமிழக கிராமிய விளையாட்டுகள் நூல் மூன்றாமாண்டு தமிழ் மாணவர்களுக்கும், இந்நூலின் ஒரு பகுதிகேரளாவில் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் பாடமாக உள்ளன. நதி ஓடி கொண்டிருக்கிறது, மறுபக்கம் பேரன்ற ஆவண குறும்படங்களுக்கு எழுத்து இயக்கம் போன்ற பணிகளை செய்திருக்கிறார். மனிதனாக வா என்ற விழிப்புணர்வு ஒலி நாடாவிற்கும் இராக தீபம் என்னும் பாரத நாட்டிய ஒலி நாடாவிற்கும் பாடல்களை எழுதியுள்ள இவர் ஐம்பதிற்கும் மேற்பட்ட நாடக மேடைகளில் நடித்துள்ளார். கருத்தரங்க மேடைகள் , தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்றவற்றிலும் பங்கேற்றுள்ளார்.

ஆய்வு கட்டுரைகள்[தொகு]

இலக்கிய சாதனையாளர் , நல் நூல் விருது ,ெசால்வலர், நல்லாசிரியர், ஆய்வறிஞர், கவிக்குருசில், கவிச்சுடர்,சேவைச்செம்மல், அருட் கலைஞர் போன்ற பல விருதுளை இவர் பெற்றுள்ளார். இவரது படைப்புகளை பல மாணவ மாணவிகள் முனைவர் பட்டத்திற்கு ஆய்வு செய்து பட்டம் பெற்றுள்ளனர். காமராசர் விருது நகர் மக்களால் தோற்கடிக்க பட்டு பின்னர் குமரி மாவட்ட நாகர்கோயில் தொகுதி மக்களால் நாடாளுமன்றத்திற்கு அனுப்பியதை பற்றி அப்பச்சி தேர்தல் என்ற தலைப்பில் ஆய்வு கட்டுரை எழுதியுள்ளார் . அழிந்து வரும் கிராமிய விளையாட்டுகள், மண்ணும் கலையும், உலக ொழிகளின் தாய் தமிழே, சிலம்பில் அறம், உடைந்து சிதறும் குடும்ப உறவுகள், குழதைகளின் எதிரிகள் என்பன போன்ற ஏராளம் ஆய்வு கட்டுரைகள் எழுதியுள்ளார்.

இதழ் ஆசிரியர்[தொகு]

தென் ஒலி மாத இதழில் துணை ஆசிரியராகவும், மாணவர்தென்றல் காலாண்டிதழ் ஆசிரியராகவும் பணிபுரிந்து வருகிறார். இவர் கவிதை , கட்டுரை, வரலாறு ஆகிய துறைகளில் 16 புத்தகங்கள் எழுதியுள்ளார். இவரது 50 கவிதைகள் ஆங்கிலத்தில் மெ ாழி பெயர்க்கப்பட்டுள்ளன.

எழுதிய நூல்கள்[தொகு]

1. ரத்தம் சிந்தும் தேசம்

 (கவிதை -1999)

2. எரிதழல் கொண்டு வா

 (கவிதை -2003)

3. குருதியில் பூத்த மலர்

 (வாழ்க்கை வரலாறு 2003)

4. அறிக பாசிசம்

 (கட்டுரை நூல் 2003)

5. அருமை மகளே

  (கவிதை 2005)

6. குலை குலையா முந்திரிக்கா

  (ஆய்வு நூல் 2007)

7. ஆதவன் பதில்கள்

  (கேள்வி பதில் 2008)

8. பேரறிஞர்களுடன்

  (நேர்காணல் 2009)

9. ஒரு தமிழ் சிற்பியின் பயணம்

  (வாழ்க்கை வரலாறு 2010)

10. தெற்கில் விழுந்த விதை

  (தேவசகாயம் பிள்ளை வாழ்க்கை 
  வரலாறு 2010)

11. என் கேள்விக்கென்ன பதில்

  (கேள்வி பதில் 2010)

12. பெருங்கடலின் சிறுதுளி

  (கேள்வி பதில் 2017)

13. தூண்டில்காரனும் ஒருகூடை மனிதர்களும்

  (கேள்வி பதில் 2018)

14. கேட்கச் செவியுள்ளவர் கேட்கட்டும்

  (கட்டுரைகள் 2018)

15. தமிழக கிராமிய விளையாட்டுகள்

  (ஆய்வு நூல் 2019)

16. Homeland

  (poetry 2017)

17. சிகரம் நோக்கிச் சிறகுகள் விரிப்போம் (கட்டுரை 2020)[1]

18. தம்பதியர்களின் கனிவான கவனத்திற்கு ( கட்டுரை 2020 )

குமரி ஆதவன் வரலாறு (குமரி ஆதவன் வரலாறும் படைப்புகளும்) திருமதி. சிவலக்ஷமி அவர்களால் எழுதப்பட்டு மலேசிய நாட்டின் மலாய்ப் பல்லைக்கழகம் மற்றும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தார் இணைந்து வெளியிட்டுள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

 1. DIN, தொகுப்பாசிரியர் (01st December 2020). மணலிக்கரை பள்ளியில் நூல் வெளியீட்டு விழா. தினமணி நாளிதழ். https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2020/dec/01/thread-launch-ceremony-at-manalikkarai-school-3514352.html. 

வெளியிணைப்புக்கள்[தொகு]

[1]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குமரி_ஆதவன்&oldid=3086692" இருந்து மீள்விக்கப்பட்டது