உள்ளடக்கத்துக்குச் செல்

குமரன் தங்கராஜன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குமரன் தங்கராஜன்
பிறப்பு10 மார்ச்சு 1989 (1989-03-10) (அகவை 37)
சென்னை, தமிழ்நாடு
இருப்பிடம்சென்னை
பணிநடனக் கலைஞர், நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2007-தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
சுஹாசினி (தற்போது வரை)

குமரன் தங்கராஜன் (10 மார்ச்சு 1992) என்பவர் தமிழ்நாட்டு நடனக் கலைஞர் மற்றும் நடிகர் ஆவார்.

நடிப்புத் துறை

[தொகு]

ஆரம்பகாலத்தில் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஜோடி நம்பர் 1 என்ற நடனப்போட்டி நிகழ்ச்சியில் பின்னணி நடனக் கலைஞராகப் பணியாற்றினார். அதைத் தொடர்ந்து உங்களில் யார் அடுத்த பிரவுதேவா என்ற நடன போட்டி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு கொண்டார். 2009 இல் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட 4 என்ற நடனப்போட்டியில் அப்சராவுடன் ஜோடியாக நடனம் ஆடி அரையிறுதி சுற்றில் வெளியேற்றப்பட்டார். அதைத் தொடர்ந்து மானாட மயிலாட 5 இல் நடிகை சுஹாசினியுடன் ஜோடியாக நடனம் ஆடினார்.

2015 இல் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இந்த திரைபபடத்தில் விக்ரம் பிரபு, கீர்த்தி சுரேஷ், காவ்யா செட்டி, நவ்தீப் போன்ற பலர் நடித்துள்ளனர். 2017 இல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மாப்பிள்ளை என்ற தொலைக்காட்சி தொடரில் கதாபாத்திர நடிகராக அறிமுகமானார். இந்த தொடரில் நடிகர் செந்தில் குமார் மற்றும் நடிகை ஸ்ரீஜா சந்திரன் ஆகியோர் முன்னணிக்கு கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

2018 இல் விஜய் தொலைக்காட்சியில் ஈரமான ரோஜாவே[1] என்ற தொடரில் மாறன் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். அதைத் தொடர்ந்து அதே ஆண்டில் பாண்டியன் ஸ்டோர்ஸ்[2] என்ற தொடரில் கதிர் என்ற முன்னணிக் கதாபாத்திரத்தில் நடிகை சித்ராவுக்கு ஜோடியாக நடிக்கின்றார். ஜோடி பன் அன்லிமிடெட் என்ற நடன போட்டி நிகழ்ச்சியில் நடிகை சித்திராவுடன் இணைத்து நடனம் ஆடி 2வது வெற்றியாளராக வந்தார்.[3]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

தொடர்கள்

[தொகு]
ஆண்டு தொடர் கதாபாத்திரம் அலைவரிசை
ஜோடி நம்பர் 1பின்னணி நடனக்கலைஞர்விஜய் தொலைக்காட்சி
உங்களில் யார் அடுத்த பிரவுதேவாபோட்டியாளராக
2009-2010மானாட மயிலாட 4கலைஞர் தொலைக்காட்சி
2010மானாட மயிலாட 5போட்டியாளராக
2017மாப்பிள்ளைவிஜய் தொலைக்காட்சி
2018ஈரமான ரோஜாவேmaran
2018–2023பாண்டியன் ஸ்டோர்ஸ்கதிர்
2018–2019ஜோடி பன் அன்லிமிடெட்போட்டியாளராக
2019ஸ்டார்ட் மியூசிக்விருந்தினராக

திரைப்படம்

[தொகு]
ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம்
2015இது என்ன மாயம்

விருதுகள் மற்றும் பரிந்துரைகள்

[தொகு]
ஆண்டு விருது பரிந்துரை பெறுநர் முடிவு
2019 கலாட்டா நட்சத்திர விருதுகள் 2019 சிறந்த ஜோடி குமரன் & சித்திரா பரிந்துரை

மேற்கோள்கள்

[தொகு]
  1. "விஜய் டிவியில் புதிய தொடர் - ஈரமான ரோஜாவே". cinema.dinamalar.com. Retrieved 2018-07-06.
  2. "Upcoming New Vijay TV Serial "Pandiyan Stores"".
  3. "Jodi- Fun Unlimited returns to Vijay Television".
"https://ta.wikipedia.org/w/index.php?title=குமரன்_தங்கராஜன்&oldid=4495673" இலிருந்து மீள்விக்கப்பட்டது