குமரன் கிருஷ்ணன்
குமரன் கிருஷ்ணன் Kumaran Krishnan | |
|---|---|
| பாகன் டாலாம் சட்டமன்றத் தொகுதி | |
| பதவியில் 12 ஆகத்து 2023 – தற்போது வரையில் | |
| முன்னையவர் | சத்தீஸ் முனியாண்டி (பாக்காத்தான் அரப்பான்–ஜசெக) |
| பெரும்பான்மை | 7,542 (2023) |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | Kumaran s/o Krishnan 20 பெப்ரவரி 1978 |
| தேசியம் | மலேசியர் |
| அரசியல் கட்சி | ஜனநாயக செயல் கட்சி (DAP) |
| பிற அரசியல் தொடர்புகள் | பாக்காத்தான் (PH) |
| வாழிடம் | பினாங்கு, மலேசியா |
| சமயம் | இந்து |
குமரன் கிருஷ்ணன் (ஆங்கிலம்; மலாய்: Kumaran Krishnan) (பிறப்பு: 20 பிப்ரவரி 1978)[1] என்பவர் ஒரு மலேசிய அரசியல்வாதி; ஆகத்து 2023 முதல் பினாங்கு பாகன் டாலாம் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக (MLA) பணியாற்றி வருகிறார்.
பாக்காத்தான் அரப்பான் (PH) கூட்டணியின் ஓர் உறுப்புக் கட்சியான ஜனநாயக செயல் கட்சியின் (DAP) உறுப்பினராக உள்ளார்.
அரசியல் வாழ்க்கை
[தொகு]ஆகத்து 12, 2023 அன்று பினாங்கு மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, முந்தைய பதவியில் இருந்த சத்தீஸ் முனியாண்டி க்குப் பதிலாக குமரன் கிருஷ்ணன் தம்முடைய முதல் பதவிக் காலத்தைத் தொடங்கினார்.[2]
பாகன் டாலாம் சட்டமன்ற உறுப்பினராவதற்கு முன்பு, குமரன் கிருஷ்ணன் செபராங் பிறை மாநகராட்சியில் (MBSP) செயலதிகாரியாகப் பணியாற்றினார். 2023 பினாங்கு மாநிலத் தேர்தலில், 7,542 வாக்குகள் பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற்றார். அவர் 10,506 வாக்குகள் (71.49%) பெற்று, மற்ற வேட்பாளர்களை தோற்கடித்தார்:
தேர்தல் முடிவுகள்
[தொகு]| ஆண்டு | தொகுதி | வேட்பாளர் | பெற்ற வாக்குகள் |
% | எதிரணி | வாக்குகள் | % | பதிவான வாக்குகள் |
பெரும் பான்மை |
% | ||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| 2023 | N09 பாகன் டாலாம் | குமரன் கிருஷ்ணன் | 10,506 | 71.49% | ஜெயராமன் குஞ்சுக்கண்ணு (பாஸ்) | 2,964 | 20.17% | 14,868 | 7,542 | 70.06% | ||
| சத்தீஸ் முனியாண்டி (சுயேச்சை) | 1,111 | 7.56% | ||||||||||
| எஸ். ராஜச கண்ணன் (பிஎப்பி) | 115 | 0.78% | ||||||||||
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "YB. Kumaran a/l Krishnan". idirektori.penang.gov.my.
- ↑ "Pulau pinang representatives". dapmalaysia.org.
- ↑ "RESULTS OF CONTESTED ELECTION AND STATEMENTS OF THE POLL AFTER THE OFFICIAL ADDITION OF VOTES". Retrieved 2023-12-03.
- ↑ "RESULTS OF CONTESTED ELECTION AND STATEMENTS OF THE POLL AFTER THE OFFICIAL ADDITION OF VOTES" (PDF). Retrieved 2023-12-03.