உள்ளடக்கத்துக்குச் செல்

குமரநல்லூர்

ஆள்கூறுகள்: 10°46′0″N 76°3′0″E / 10.76667°N 76.05000°E / 10.76667; 76.05000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குமரநல்லூர்
சிற்றூர்
ஒரு பள்ளி
குமரநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளி
குமரநல்லூர் is located in கேரளம்
குமரநல்லூர்
குமரநல்லூர்
கேரளத்தில் அமைவிடம்
குமரநல்லூர் is located in இந்தியா
குமரநல்லூர்
குமரநல்லூர்
குமரநல்லூர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 10°46′0″N 76°3′0″E / 10.76667°N 76.05000°E / 10.76667; 76.05000
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்பாலக்காடு
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்15,346
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகமலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
679552
தொலைபேசி குறியீடு0466
வாகனப் பதிவுKL-52
அருகில் உள்ள நகரம்பாலக்காடு
சட்டமன்றத் தொகுதிதிரிதலா

குமரநல்லூர் (Kumaranellur) என்பது இந்தியாவின், கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தில் பட்டம்பி வட்டத்தில் உள்ள ஒரு சிற்றூராகும். இது கப்பூர் கிராம ஊராட்சிக்கு உட்பட்டது. இது பாலக்காடு மாவட்டத் தலைமையகத்திலிருந்து மேற்கு நோக்கி 75 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. மேலும் இந்த ஊர் அண்டை மாவட்டத் தலைமையகமான மலப்புறத்திலிருந்து தெற்கு நோக்கி 48 கி.மீ. தொலைவிலும், திரூரிலிருந்து 27 கி.மீ. தொலைவிலும், வளஞ்சேரியிலிருந்து 22 கி.மீ. தொலைவிலும், பட்டாம்பியிலிருந்து 20 கி.மீ. தொலைவிலும், குன்னங்குளத்திலிருந்து 20 கி.மீ. தொலைவிலும், பொன்னானியிலிருந்து 15 கி.மீ. தொலைவிலும், குட்டிப்புரத்தில் இருந்து 14 கி.மீ. தொலைவிலும், திரிதாலாவிலிருந்து 8 கி.மீ. தொலைவிலும், எடப்பாள் நகரத்திலிருந்து 5 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இந்த இடம் பாலக்காடு மாவட்டம் மற்றும் மலப்புறம் மாவட்டத்தின் எல்லையில் உள்ளது. மலப்புறம் மாவட்டன் குட்டிப்புரம் இந்த இடத்திலிருந்து வடக்கே உள்ளது, எடப்பாள் இந்த இடத்திலிருந்து மேற்கு நோக்கி உள்ளது.[1] குமரநல்லூர் ஊரானது, கல்வி, மருத்துவம் போன்ற நோக்கங்களுக்காகு மலப்புறம் மாவட்டத்தில் உள்ள பொன்னானி, எடப்பாள், குட்டிபுரம் ஆகிய ஊர்களைச் சார்ந்துள்ளது. இது திருத்தாலை சட்டமன்றத் தொகுதி மற்றும் பொன்னானி மக்களவைத் தொகுதி ஆகியவற்றுக்கு உட்பட்டது.

மக்கள் வகைப்பாடு

[தொகு]

2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி, குமரநல்லூர் ஊரின் மொத்த மக்கள் தொகை 7,260 ஆகும். இதில் ஆண்களின் எண்ணிக்கை 3,465 என்றும், பெண்களின் எண்ணிக்கை 3,795 என்றும் உள்ளது.[1]

ஊரில் குறிப்பிடத்தக்கவர்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Census of India: Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. Archived from the original on 8 December 2008. Retrieved 10 December 2008.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குமரநல்லூர்&oldid=4249757" இலிருந்து மீள்விக்கப்பட்டது