குமரக்கோட்டம் - அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ் கடவுளாம் முருகப்பெருமான் வரலாற்றை கூறும் கந்தபுராணம் அரங்கேற்றம் செய்யப்பெற்ற சிறப்பு வாய்ந்த திருத்தலம். கந்தபுராணத்தை இயற்றிய கச்சியப்ப சிவாச்சாரியாருக்கு முருக கடவுள் வார்த்தையை கொடுத்து, பிழையையும் திருத்தி, புலவனாய் வந்து அரங்கேற்றமும் செய்த அற்புத திருத்தலம். அருணகிரிநாதர் ஏராளமான திருப்புகழ்ப் பாடல்கள் பாடியருளிய புண்ணிய திருத்தலம்.

தல வரலாறு[தொகு]

படைக்கும் கடவுளான பிரம்மதேவர் ஒருமுறை மிகுந்த ஆணவம் கொண்டிருந்தார். அவரது ஆணவத்தை அடக்க எண்ணிய முருகப்பெருமான், பிரம்மாவிடம், படைப்புத் தொழிலுக்கு ஆதாரமான பிரணவத்தில் "ஓம்" என்ற மந்திரத்தின் பொருள் வினவினார். பொருள் அறியாமல் விழித்த பிரம்மதேவரை சிறையில் அடைத்தார். பிரம்மா சிறைப்பட்டதால், படைப்புத்தொழிலையும் முருகப்பெருமான் மேற்கொண்டார். அவ்வாறு முருகப்பெருமான் படைப்புத்தொழிலை மேற்கொள்ளும் திருக்கோலத்தில் அருளும் திருத்தலமே குமரக்கோட்டம் ஆகும். இங்கு முருகப்பெருமான் படைப்புத்தொழிலை மேற்கொள்ளும் "பிரம்ம சாஸ்தா" வடிவில் அருள்கிறார்.