குமரகுருபர சுவாமிகள் புராணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குமரகுருபர சுவாமிகள் புராணம் என்பது ஒரு நூல். இதனைப் பாடியவர் சேற்றூர் ரா. சுப்பிரமணியக் கவிராயர். இந்த நூல் சாலியமங்கலம் மு. சாம்பசிவ நாயனார் எனபவரால் 1918-ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டுள்ளது. இதில் 1001 பாடல்கள் உள்ளன. திருப்பனந்தாள் 17-ஆம் பட்டம் சொக்கலிங்கத் தம்பிரான் வேண்டுகோளின்படி இது பாடப்பட்டது. [1] இதன் பாயிரப் பாடல்கள் 24 உள்ளன. அவற்றுள் குமரகுருபரர் வணக்கமாக வரும் பாடல் இது.

குலவு புலவோர் நீதியே குமர குருபர முனி எம் கோவே நுந்தம்
இலகு தெய்வத் தன்மை இறை புகழ் சரிதம் தமிழ்க் கவியால் இசைத்தால் இந்த
உலகர் பாராயணம் செய்து உய்குவர் யான் உய்குவன் என்று உளத்தில் காதல்
வருவதனால் புகலல் உற்று உம் கருணைத் துணை செய வேண்டி வணங்கினேனே.

படலங்கள்[தொகு]

  1. திருநாட்டுப் படலம்
  2. திருநகரப் படலம்
  3. திருச்செந்தில் சேர் படலம்
  4. மதுரை வருபடலம்
  5. பிள்ளைத்தமிழ் அரங்கேற்று படலம்
  6. தரும்புரம் சார்ந்த படலம்
  7. சிதம்பரம் சேர் படலம்
  8. உபதேசம் பெறு படலம்
  9. காஞ்சி சேர் படலம்
  10. காசி சேர் படலம்
  11. காசி அரசனைக் காண் படலம்
  12. அன்னதானப் படலம்
  13. நித்திய ஞான நெட்டை உரு படலம்
  14. தருமை மும்முறை சார்ந்து காசி சார் படலம்
  15. மரபு விளக்கப் படலம்

இவற்றில் கூறப்பட்டவை புராணச் செய்திகளே அன்றி வரலாற்றுக்குப் பயன்படுவன அல்ல. எனினும் எங்கெங்கு சென்றார், என்ன செய்தார் என்பதைக் காட்டுவனவாக உள்ளன.

இப் புராணம் கூறும் செய்திகளில் சில[தொகு]

இவர் குழந்தையாக இருந்தபோது நாவை நீட்டச் சொல்லி அதில் முருகன் தன் ஆறெழுத்து மந்திரத்தை எழுதுகிறான்.
குழந்தையாக இருந்தபோதே உலகப் பற்றைத் துறக்கிறார்.
மதுரையில் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் அரங்கேற்றம் செய்கிறார்.
அரசன் அணிகலன்களைப் பூட்டி இவரை அழகுபடுத்துகிறான்.
அரசன் வேண்டுகோளின்படி இவர் மீனாட்சிபுரம் அங்கயற்கண்ணி இரட்டைமணிமாலை, சொக்கலிங்கர் கலம்பகம் ஆகிய நூல்களைப் பாடுகிறார்.
சிங்கத்தின் மீது சென்று டில்லி பாதுசாவைக் காண்கிறார்.

மேற்கோள்[தொகு]

  1. மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 17-ஆம் நூற்றாண்டு பாகம் 1, தி பார்க்கர் அச்சகம், முதல் பதிப்பு 1990, திருத்தப்பட்ட பதிப்பு மார்கழி 2005 - பக்கம் 53