குமரகிரி ஏரி, சேலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குமரகிரி ஏரி, சேலம்
அமைவிடம்சேலம், சேலம் மாவட்டம், தமிழ்நாடு
வகைநீர்த்தேக்கம்
வடிநில நாடுகள்இந்தியா
Surface area45 ஏக்கர்கள் (0.18 km2)

குமரகிரி ஏரி, தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் ஏரியாகும்.

ஏரியில் மண் திட்டுக்கள்[தொகு]

அம்மாபேட்டை குமரகிரி ஏரி நீர்நிலை ஆதார பசுமை இயக்க குழுவின் பொருளாளர் ராஜகோபால் மற்றும் "சேலம் குடிமக்கள் குழு"வைச் சார்ந்த "பியூசு மானுசு" போன்ற சுற்றுச்சூழல் ஆர்வாளர்களால் இந்த ஏரியின் நடுவே பல தனித் தீவுகள் ஏற்படுத்தப்பட்டு வேம்பு, மூங்கில் என சுமார் 6000 மரங்கள் நடப்பட்டன[1].[2] அந்த மரங்கள் நன்கு வளர்ந்து பறவைகளுக்கு வாழ்விடமாக விளங்குகிறது. நீர்காகம், புள்ளி மூக்கு வாத்து, அரிவாள் மூக்கன், ஆசியக் குயில், சிறு வெண் கொக்கு, உண்ணிக்கொக்கு , மடையான், வெள்ளை மார்பு காணான்கோழி, செந்நீலக் கொக்கு, கருங்கரிச்சான், முக்குளிப்பான், நீலத் தாழைக்கோழி, நாமக்கோழி, பொரி உள்ளான், செம்மூக்கு ஆள்காட்டி போன்ற பல்வேறு பறவைகள் வந்து செல்கின்றன.[3] தற்போது இந்த இடம் குட்டி பறவைகள் சரணாலயம் ஆக விளங்குகிறது.

ஏரிப்பூங்கா[தொகு]

மேலும் இங்கு அமைக்கப்பட்டுள்ள ஏரிப்பூங்கா ஓர் சுற்றுலாத்தளமாக விளங்குகிறது. காலை மாலை வேளைகளில் நடைப்பயிற்சி செய்ய சிறந்த இடமாக உள்ளது.

ஏரியின் படிமத் தொகுப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குமரகிரி_ஏரி,_சேலம்&oldid=2722742" இருந்து மீள்விக்கப்பட்டது