குமட்டிக்காய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குமட்டிக்காய்
Citrullus colocynthis - Köhler–s Medizinal-Pflanzen-040.jpg
Citrullus colocynthis from Koehler's Medicinal-Plants (1887).
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: ரோசிதுகள்
வரிசை: Cucurbitales
குடும்பம்: Cucurbitaceae
பேரினம்: Citrullus
இனம்: C. colocynthis
இருசொற் பெயரீடு
Citrullus colocynthis
(L.) Schrad.
வேறு பெயர்கள் [1]
  • Citrullus colocynthoides Pangalo
  • Citrullus pseudocolocynthis M.Roem.
  • Colocynthis officinalis Schrad.
  • Colocynthis vulgaris Schrad.
  • Cucumis colocynthis L.

குமட்டிக்காய் அல்லது குமிட்டிகாய் எனப்படும் இது ஒரு படர்கொடி தாவரம். இதை ஆற்றுத்தும்மட்டி, கொம்மட்டி, வரித்தும்மம், பேய்கும்மட்டி என்ற வேறு பெயர்களிலும் அழைப்பர். இவை களைகளாய் விளைநிலங்களில் காணப்படுகின்றன. இதன் தாயகம் மெடட்ரேனியன் மற்றும் ஆசியா. ஆப்பிரிக்கா, இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் அதிகம் காணப்படுகிறது. தமிழகமெங்கும் மணற்பாங்கான இடங்களில் வளர்கிறது. மிகவும் வெட்டப்பட்ட இலைகளையுடைய தரையோடு வேர்விட்டுப் படரும் கொடி.

பண்புகள்[தொகு]

இதன் காய்கள் மிகுந்த கசப்பு சுவையுடையது. பச்சை, வெள்ளை நீள வரிகளையுடைய காய்களாகும். இதன் காய்கள் சிறிய பந்து போல் இருக்கும். ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை வண்ணத்திலும் இருக்கும். இதில் அமிலத்தன்மை அதிகம் இருக்கும். விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

பயன்கள்[தொகு]

சித்த மருத்துவத்திலும், வேளாண்மையில் தாவர பூச்சிவிரட்டியாகவும் பயன்படுகின்றது.[2][3] இலை, காய், வேர் ஆகியவை மருத்துவப் பயனுடையவை. புழுவெட்டினால் மயிர் கொட்டும் இடங்களில் காயை நறுக்கி தேய்த்து வரப் புழு வெட்டு நீங்கும்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குமட்டிக்காய்&oldid=2876286" இருந்து மீள்விக்கப்பட்டது