குமட்டி
குமட்டி | |
---|---|
Citrullus colocynthis from Koehler's Medicinal-Plants (1887). | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
வரிசை: | Cucurbitales
|
குடும்பம்: | Cucurbitaceae
|
பேரினம்: | |
இனம்: | C. colocynthis
|
இருசொற் பெயரீடு | |
Citrullus colocynthis (L.) Schrad. | |
வேறு பெயர்கள் [1] | |
|
குமட்டி, குமுட்டி அல்லது குமிட்டி எனப்படும் இது ஒரு படர்கொடி தாவரம். இதை ஆற்றுத்தும்மட்டி, கொம்மட்டி, வரித்தும்மம், பேய்கும்மட்டி என்ற வேறு பெயர்களிலும் அழைப்பர். இவை களைகளாய் விளைநிலங்களில் காணப்படுகின்றன. இதன் தாயகம் மெடட்ரேனியன் மற்றும் ஆசியா. ஆப்பிரிக்கா, இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் அதிகம் காணப்படுகிறது. தமிழகமெங்கும் மணற்பாங்கான இடங்களில் வளர்கிறது. மிகவும் வெட்டப்பட்ட இலைகளையுடைய தரையோடு வேர்விட்டுப் படரும் கொடி.
பண்புகள்
[தொகு]இதன் காய்கள் மிகுந்த கசப்பு சுவையுடையது. பச்சை, வெள்ளை நீள வரிகளையுடைய காய்களாகும். இதன் காய்கள் சிறிய பந்து போல் இருக்கும். ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை வண்ணத்திலும் இருக்கும். இதில் அமிலத்தன்மை அதிகம் இருக்கும். விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.
பயன்கள்
[தொகு]சித்த மருத்துவத்திலும், வேளாண்மையில் தாவர பூச்சிவிரட்டியாகவும் பயன்படுகின்றது.[2][3] இலை, காய், வேர் ஆகியவை மருத்துவப் பயனுடையவை. புழுவெட்டினால் மயிர் கொட்டும் இடங்களில் காயை நறுக்கி தேய்த்து வரப் புழு வெட்டு நீங்கும்.