குப்பை சேர்த்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குப்பை சேர்த்தல்

குப்பை சேர்த்தல் (Compulsive hoarding)[1] தேவையில்லாத அல்லது பயனற்ற பெருமளவு பொருட்களைச் சேர்த்து வைத்துக் கொள்ளும் ஒரு மனித மனநிலை ஆகும். குப்பை சேர்க்கும் மனநிலையுள்ளோர் தமக்குத் தேவையில்லாத பொருட்களை எறிவதனை ஏற்றுக் கொள்வதில்லை. குப்பை சேர்க்கும் மனநிலையுள்ளோரால் அவர்கள் மட்டுமின்றி அவர்களது உறவினர், நண்பர்களும் நலவியல், பொருளாதாரப் பாதிப்புக்களை எதிர்கொள்ளுகின்றனர்.

குப்பை சேர்க்கும் மனநிலையால் வீடு முழுக்க குப்பைகள் நிரம்புவதால் சமையல், துப்பரவாக்குதல், வாழுதல், உறங்குதல் போன்ற எல்லா நாளாந்த நடவடிக்கைகளும் பாதிப்படைகின்றன. தீப்பிடித்தல், தடுக்கி விழுதல், சுகாதாரக் கேடுகளையும் குப்பை சேர்த்தல் ஏற்படுத்துகிறது. குப்பை சேர்ப்போர் சில சமயங்களில் தாம் சேர்ப்பது குப்பை என உணர்ந்து கொண்டாலும் குப்பைகளில் அவர்கள் கொண்டுள்ள உளப்பிணைப்பின் காரணமாக அவற்றினை எறியும் மனநிலையினை அடைய முடிவதில்லை.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Epidemiology of hoarding disorder". Bjp.rcpsych.org. 2013-10-24. 2014-05-01 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குப்பை_சேர்த்தல்&oldid=3126186" இருந்து மீள்விக்கப்பட்டது