குப்பல்நத்தம்
குப்பல்நத்தம்
( KUPPALNATHAM ) Kuppanam | |
---|---|
கிராமம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | மதுரை |
அரசு | |
• முதல் அமைச்சர் | மு. க. ஸ்டாலின் |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 625 527 |
வாகனப் பதிவு | TN 58 ... |
குப்பல்நத்தம் (Kuppalnatham ), தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள சேடபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கும் தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1958 ஆகும். இவர்களில் பெண்கள் 962 பேரும் ஆண்கள் 996 பேரும் உள்ளனர்.
அமைவிடம்
[தொகு]இந்த ஊரானது மாவட்ட தலைநகரான மதுரையிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும், சேடபட்டியில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 522 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
மக்கள் வகைபாடு
[தொகு]2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கிராமத்தில் 551 வீடுகள் உள்ளன. மொத்த மக்கள் தொகையானது 1925 ஆகும். இதில் பெண்களின் எண்ணிக்கை 947 (49.2 % ) என்றும், ஆண்களின் எண்ணிக்கை 978 என்றும் உள்ளது. கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 58.4 % ( 1125) ஆகும். இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.[1]
கிராமத்தின் முக்கியமான கோவில்
[தொகு]- குப்பல்நத்தம் பொய்கைமலை சமணக் குகைக் கோவில்
- குப்பல்நத்தம் வெங்கடாஜலபதி கோயில்
- கோணம்மாள் கோவில் குப்பல்நத்தம்
- காளியம்மன் கோவில் குப்பல்நத்தம்
- கருப்பசாமி கோவில் குப்பல்நத்தம்
- முனியாண்டி கோவில் குப்பல்நத்தம்
மேற்கோள்
[தொகு]- ↑ "Kuppalnatham Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2023-01-02.