உள்ளடக்கத்துக்குச் செல்

குப்திபாரா ரதயாத்திரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குப்திபாரா ரதயாத்திரை ( Guptipara Rathayatra ) மேற்கு வங்க மாநிலம் ஹூக்லி மாவட்டத்திலுள்ள குப்திபாராவில் 1730களில் இருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. தேர் ஒரு நவரத்ன பாணியிலான மரக் கோயிலாகும், பிருந்தாவன் சந்திர ஜியு சுவாமி தேரில் முதன்மை தெய்வமாகும். குப்திபாரா ரதயாத்திரையானது புரி ரதயாத்திரைக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது. குப்திபாரா ரதயாத்திரையின் தனித்துவமான நிகழ்வுகளில் ஒன்று பண்டாரா கொள்ளை என்பதாகும். இது பூர்ணயாத்ரா அல்லது அல்டோ ரதத்திற்கு ஒரு நாள் முன்னதாக நடத்தப்படுகிறது. திருவிழாவையொட்டி குப்திபாராவில் ஒரு மாதம் திருவிழா நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவிழாவில் பங்கேற்கின்றனர்.[1]

வரலாறு[தொகு]

ரதயாத்திரை எப்போது தொடங்கியது என்பது தெளிவாகத் தெரியவில்லை. சில ஆதாரங்களின்படி, ரதயாத்திரை 400 ஆண்டுகளுக்கும் மேலானது. மற்ற ஆதாரங்களின்படி, ரதயாத்திரை 1735 மற்றும் 1740 க்கு இடையில் தொடங்கியது.[2] மற்றொரு ஆதாரத்தின்படி, பிருந்தாவனம் சந்திர ஜியு மடத்தின் சுவாமி மதுசூதானந்தா 1740-ஆம் ஆண்டு ரதயாத்திரையைத் தொடங்கினார். 1858 ஆம் ஆண்டில், பண்டாரா கொள்ளையில் ஒரு லட்சம் பக்தர்கள் கலந்துகொண்டனர் என்று மடத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன 1873 ஆம் ஆண்டில், அப்போதைய சுவாமி பிருதானந்தா ரதயாத்திரையின் போது விபத்தில் சிக்கினார். [2] அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, ரதத்தின் விமானங்களின் எண்ணிக்கை பதின்மூன்றிலிருந்து ஒன்பதாகக் குறைக்கப்பட்டது.[2]

தேர்[தொகு]

குப்திபாரா தேர்

தற்போதைய ரதம் அல்லது தேர் விமானங்களைக் கொண்ட ஒரு மர நவரத்னக் கோயிலாகும்.[3] ரதத்தின் கட்டமைப்பு குங்கிலிய மரத்தால் ஆனது. [2] ரதமானது 34 அடிக்கு 34 அடி அளவில் சதுர அடித்தளத்தைக் கொண்டுள்ளது[4] இது நான்கு மாடிகள், 36 அடி உயரம் கொண்டது.[4] ரதத்தில் கருவேல மரத்தால் செய்யப்பட்ட 16 சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. [2] அதன் முன்புறத்தில் நான்கு கயிறுகள் உள்ளன. 300 அடி நீளம் கொண்ட இவை ஒவ்வொன்றும் ரதத்தை முன்னோக்கி இழுக்கப் பயன்படுகிறது. வேகத்தைத் தடுப்பதற்காக பின்புறத்தில் முன் கயிறுகளில் ஒன்று பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

ரதயாத்திரையின் முதல் வருடத்தில் பயன்படுத்தப்பட்ட அதே ரதமே தற்போதைய ரதமாகும். இது கிட்டத்தட்ட 280 ஆண்டுகள் பழமையானது.[4] During the entire year the ratha is kept inside a giant metallic cage. Weeks before the festival it is brought out and prepared for the festival. As of 2012, the chariot was in a dilapidated condition.[5] ஆண்டு முழுவதும் ரதம் ஒரு பெரிய உலோகக் கூண்டில் வைக்கப்படுகிறது. திருவிழாவுக்கு சில வாரங்களுக்கு முன்பே வெளியில் கொண்டு வந்து விழாவுக்கு தயார்படுத்துவார்கள். 2012 ஆம் ஆண்டு நிலவரப்படி, தேர் சிதிலமடைந்த நிலையில் இருந்தது [6] குப்திபாரா பிருந்தாவன் சந்திரா ஜியு மடம் ஒவ்வொரு ஆண்டும் தற்போதைய கட்டமைப்பிற்கு பொருளுதவி வழங்கி வருகிறது. மடம் இதனை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்திய தொல்லியல் துறையை அணுகியுள்ளனர்.[7]

ஊர்வலம்[தொகு]

ஊர்வலம் குப்திபாரா மடத்தில் இருந்து தொடங்கி 1.5 கிமீ தொலைவில் உள்ள கோசைங்கஞ்ச் பாராபஜாரில் உள்ள குண்டிச்சா வீட்டை நோக்கிச் செல்கிறது.[8]

பக்தர்கள்[தொகு]

ஒவ்வொரு ஆண்டும் வர்த்மான், நதியா, ஹவுரா மற்றும் வடக்கு 24 பர்கானா மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் ரதயாத்திரையைக் காண குப்திபாராவுக்கு வருகிறார்கள்.[9]

இதனையும் பார்க்கவும்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (in Bengali). Eenadu India. 19 July 2015 இம் மூலத்தில் இருந்து 17 ஆகஸ்ட் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160817015135/http://bangla.eenaduindia.com/State/Hooghly/2015/07/19081804/Guptipara-RathJatra-Celebration.vpf. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 Sengupta, Ashok; Mandal, Tapas (5 July 2016). "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (in Bengali). Dainik Jugashankha (Kolkata) இம் மூலத்தில் இருந்து 11 ஆகஸ்ட் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160811043142/http://www.dainikjugasankha.in/index.php?archive=05.07.2016&city=3. பார்த்த நாள்: 6 July 2016. 
  3. (in Bengali)24 Ghanta (Zee News). 18 July 2015. http://zeenews.india.com/bengali/zila/west-bengal-rath_129658.html. பார்த்த நாள்: 5 July 2016. 
  4. 4.0 4.1 4.2 Sengupta, Ashok (18 July 2015). "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (in Bengali). Anandabazar Patrika (ABP Group) இம் மூலத்தில் இருந்து 17 ஆகஸ்ட் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160817022811/http://www.anandabazar.com/district/dhaksinbanga/howrah-hoogly/%E0%A6%AD-%E0%A6%A3-%E0%A6%A1-%E0%A6%B0-%E0%A6%B2-%E0%A6%A0-%E0%A6%B0-%E0%A6%AA-%E0%A6%B0%E0%A6%A4-%E0%A6%95-%E0%A6%B7-%E0%A7%9F-%E0%A6%97-%E0%A6%AA-%E0%A6%A4-%E0%A6%AA-%E0%A6%A1-1.177994. பார்த்த நாள்: 6 July 2016. 
  5. Ghosh, Tapas (21 June 2012). (in Bengali)Anandabazar Patrika (ABP Group). http://archives.anandabazar.com/archive/1120621/21south-rath.html. பார்த்த நாள்: 5 July 2016. 
  6. Ghosh, Tapas (21 June 2012). (in Bengali)Anandabazar Patrika (ABP Group). http://archives.anandabazar.com/archive/1120621/21south-rath.html. பார்த்த நாள்: 5 July 2016. 
  7. Ghosh, Tapas (21 June 2012). (in Bengali)Anandabazar Patrika (ABP Group). http://archives.anandabazar.com/archive/1120621/21south-rath.html. பார்த்த நாள்: 5 July 2016. 
  8. Datta, Rangan (6 September 2009). "Next weekend you can be at ... Guptipara". The Telegraph இம் மூலத்தில் இருந்து 3 April 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160403055652/http://www.telegraphindia.com/1090906/jsp/calcutta/story_11457400.jsp. பார்த்த நாள்: 6 July 2016. 
  9. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (in Bengali). Bartaman இம் மூலத்தில் இருந்து 15 ஜூன் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160615101804/http://bartamanpatrika.com/index.php/news/fullstory/19295. பார்த்த நாள்: 5 July 2016. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=குப்திபாரா_ரதயாத்திரை&oldid=3674056" இலிருந்து மீள்விக்கப்பட்டது