குபேரா
| குபேரா | |
|---|---|
திரைப்படச் சுவரொட்டி | |
| இயக்கம் | சேகர் கம்முலா |
| தயாரிப்பு |
|
| கதை |
|
| இசை | தேவி ஸ்ரீ பிரசாத் |
| நடிப்பு |
|
| ஒளிப்பதிவு | நிகேத் பொம்மிரெட்டி |
| படத்தொகுப்பு | கார்த்திகா ஸ்ரீநிவாஸ் |
| கலையகம் |
|
| வெளியீடு | 20 சூன் 2025 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் தெலுங்கு |
| ஆக்கச்செலவு | ₹90–120 கோடி[1] |
| மொத்த வருவாய் | ₹132 கோடி[2] |
குபேரா 2025-இல் வெளிவந்த இந்திய இருமொழித் திரைப்படமாகும். சமூகம் தொடர்பான விறுவிறுப்பான இத்திரைப்படத்தை சேகர் கம்முலா இயக்கியிருந்தார். அமீகோஸ் கிரியேசன்ஸ் நிறுவனம் சார்பாக சுனில் நாரங், புஸ்கூர் இராம்மோகன் இராவ் தயாரித்த இப்படம் ஒரே நேரத்தில் தெலுங்கிலும், தமிழிலும் படமாக்கப்பட்டது. இப்படத்தில் நாகார்ஜுனா, தனுஷ், இராஷ்மிகா மந்தனா, சிம் சர்ப்பு, தலிப் தகில் ஆகியோர் நடித்திருந்தனர்.
தனுஷ் முன்னணி நடிகராக நடித்த 51-ஆவது திரைப்படம் என்பதால், இத்திரைப்படம் 2021 சூன் மாதம் தற்காலிகத் தலைப்பில் டி51 என்ற பெயரில் முறையாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், நாகார்ஜுனா வந்த பிறகு, அது தனுஷ், நாகார்ஜூனா, சேகர் ஆகியோரைக் குறிக்கும் வகையில் டிஎன்எஸ் என்று மாற்றப்பட்டது. முதன்மைப் படப்பிடிப்பு 2024 பெப்ரவரி மாதம் தொடங்கியது. அதிகாரப்பூர்வத் தலைப்பு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. இத்திரைப்படம் ஹைதராபாத், மும்பையில் படமாக்கப்பட்டது. இத்திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். நிகேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்துள்ளார். கார்த்திகா ஸ்ரீநிவாஸ் படத்தொகுப்பும் தோட்டா தரணி தயாரிப்பு வடிவமைப்பும் செய்துள்ளார்.[3]
2025 சூன் 20 அன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியானது.
கதைச்சுருக்கம்
[தொகு]நீரஜ்மித்ரா மும்பையில் சக்திவாய்ந்த, இலட்சியத் தொழிலதிபராவார். வங்காள விரிகுடாவில் மறைத்து வைக்கப்பட்டுள்ள ஓர் அரிய எண்ணெய் இருப்பைக் கண்டுபிடிப்பார். அதை, தனது செல்வாக்கு, அரசியல் கட்டுப்பாடு ஆகியவற்றின் ஆதாரமாக மாற்ற ஆர்வமுள்ள அவர், உயர் அரசியல்வாதிகளின் ஆதரவுடன் ஓர் இரகசியப் பணியைத் திட்டமிடுகிறார். அதைச் செயல்படுத்த, அவர் ஊழலுக்கு அடிபணியாத சிறையில் இருக்கும் ஒரு நேர்மையான முன்னாள் மத்தியப் புலனாய்வுத் துறை அதிகாரியான தீபக்கிடம் வருகிறார். வேறு வழியில்லாமல், தீபக் உதவ ஒப்புக்கொள்கிறார். நீரஜின் பேராசையை தீபக்கிடம் சொல்லவில்லை. என்றாலும் தீபக்கின் குடும்பச் சூழ்நிலை காரணமாக நீரஜ்மித்ராவின் திட்டத்தில் கட்டாயத்துடன் செயல்படவைக்கிறது. மும்பையில் அமைதியாக இந்த வேலையைச் செய்ய, தீபக் நாடெங்கிலும் இருந்து ஒரு பிச்சைக்காரர்களின் குழுவைச் சேகரிக்கிறார்.
தீபக் தேர்ந்தெடுத்த நான்கு பிச்சைக்காரர்களில் ஒருவர் தேவா, திருப்பதியைச் சேர்ந்த ஒரு கனிவான அப்பாவியாக உள்ள மனிதர். தேர்ந்தெடுத்த நான்கு பேரையும் வெளிநாட்டு நிறுவன உரிமையாளராக மாற்ற பயிற்சியளிக்கப்படுகிறது. இந்நான்கு பேரைப் பயன்படுத்தி அவர்களின் வங்கிக் கணக்கின் மூலமாக முக்கிய அரசியல்வாதிகளுக்கு கோடி கோடியாய் பணத்தை மாற்றத் திட்டமிடுகின்றனர். பணமாற்றத்திற்குப் பிறகு ஒவ்வொருவரையும் கொலை செய்துவிடுகின்றனர். குஷ்பூ என்பவர் கர்ப்பினிப்பெண்ணாக இருந்ததால் கொலை செய்வதிலிருந்து காப்பாற்றப்படுகிறார். இந்தக் கூட்டத்திலிருந்து தேவாவும் தப்பித்துக் கொள்கிறார். தேவாவைக் கொல்ல, திட்டமிட்டப்பட்டுள்ளனர் என்பது தேவாவிற்குப் புரிகிறது. இந்நிலையில் அவர்களிடமிருந்து தேவா தப்பித்துக் கொண்டே வருகிறார். தேவாவைக் கண்டுபிடிக்க மற்ற பிச்சைக்காரர்களின் உதவியை தீபக் பெறுகிறார். நீரஜ், தீபக் ஆகியோரிடமிருந்து தேவா எப்படித் தப்பிக்கிறார். கடைசியில் என்ன நடக்கிறது என்பது கதைக்கருவாகும்.
நடிகர், நடிகையர்
[தொகு]- அக்கினேனி நாகார்ஜுனா -தீபக் தேஜ், முன்னாள் மத்தியப் புலனாய்வு நிறுவன அதிகாரி
- தனுஷ் - தேவா
- ராஷ்மிகா மந்தண்ணா - சமீரா
- கே. பாக்கியராஜ் - சாது
- சுனைனா - தீபா
- சாயாஜி சிண்டே - அசோக், காவல் துணை ஆய்வாளர்
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை விவேகா எழுதியிருந்தார்.
| தமிழ்ப் பாடல்கள் | ||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| # | பாடல் | வரிகள் | பாடியோர் | நீளம் | ||||||
| 1. | "போய்வா நண்பா" | விவேகா | தனுஷ் | 4:03 | ||||||
| 2. | "கத கத கத" | விவேகா | கைதே கார்த்தி, கரீமுல்லா | 3:00 | ||||||
| 3. | "என் மகனே" | விவேகா | சிந்தூரி விஷால் | 4:45 | ||||||
வெளியீடு
[தொகு]திரையரங்கம்
[தொகு]2025 சூன் 20 அன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியானது.[4]
வீட்டு ஊடகங்கள்
[தொகு]படத்தின் திரையரங்குகளுக்குப் பிந்தைய தகவல் ஓடை உரிமங்களை அமேசான் பிரைம் வீடியோ வாங்கியது.[5]
விமர்சனங்கள்
[தொகு]ஆனந்த விகடன் வலைதளத்தில் வந்த விமர்சனத்தில் "ஆங்காங்கே வரும் எமோஷன் மொமண்ட்களும், நடிகர்களின் உணர்வுப்பூர்வமான நடிப்பும் மட்டுமே அயற்சிப்பாதையின் களைப்பை ஓரளவிற்குச் சரிகட்டுகின்றன. சில சறுக்கல்கள் எட்டிப்பார்த்தாலும், பரபரப்பிலும், எமோசனிலும் தேவையான திரையனுபவ செல்வத்தைத் தந்திருக்கிறார் இந்தக் 'குபேரா'" என்று எழுதினர்.[6]
கல்கி வலைதளத்தில் வந்த விமர்சனத்தில் "ஒன்று ஸ்மார்ட்டான சண்டைப் படம், அல்லது த்ரில்லர் என்று ஒரு முடிவு எடுத்திருக்க வேண்டும். பிச்சைக்காரர்களின் கஷ்டங்களைச் சொல்ல வேண்டும் என்று எடுத்தால் போதாது. எதாவது தீர்வு சொல்ல முடியுமா. இவர் சொன்ன தீர்வைப் படத்தில் கூட ஏற்க முடியாது. நிஜத்தில் எங்கே ஏற்பது" என்று எழுதினர்.[7]
தினமணி நாளிதழில் வந்த விமர்சனத்தில் "தனுஷின் நடிப்பு படத்தில் மிக முக்கியமான ஒன்று! அந்தக் கதாபாத்திரம் உருவாக்கப்பட்ட விதமும் மிகச்சிறப்பான ஒன்றாகவே கருதப்பட வேண்டும்! எந்தவித ஹீரோயிசமும் சேர்க்கப்படாமல், கதைக்கும், கதாபாத்திரத்திற்கும் உண்மையாக இருந்ததற்கு பாராட்டுகளைத் தெரிவித்தே ஆகவேண்டும்!" என்று எழுதி ![]()
![]()
![]()
![]()
மதிப்பீடுகள் வழங்கினர்.[8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://www.deccanchronicle.com/entertainment/sekhar-kammulas-kubera-budget-overshoots-1842668
- ↑ "16 ദിവസം, കുബേര നേടിയ കളക്ഷൻ ഞെട്ടിക്കുന്നു, കണക്കുകള്". Asianet News Malayalam (in மலையாளம்). 7 July 2025. Retrieved 2025-07-07.
ആഗോള ഗ്രോസ് കളക്ഷൻ 16 ദിവസത്തില് 132 കോടിയാണ് നേടിയിരിക്കുന്നത് എന്നാണ് ഒഫിഷ്യല് റിപ്പോര്ട്ട്
[The official report says that the global gross collection has reached 132 crores in 16 days.] - ↑ "Kubera Teaser: Dhanush, Nagarjuna, And Rashmika Mandanna Lead The Way In Gripping Thriller". ABP News. 16 November 2024. Archived from the original on 27 December 2024. Retrieved 16 November 2024.
- ↑ "Dhanush, Nagarjuna-starrer Kubera to release on June 20 this year". Telangana Today (in ஆங்கிலம்). 27 February 2025. Archived from the original on 27 February 2025. Retrieved 27 February 2025.
- ↑ "Kuberaa on OTT: Where to watch Nagarjuna, Dhanush and Rashmika Mandanna's film online after its theatrical run". Pinkvilla (in ஆங்கிலம்). 27 February 2025. Archived from the original on 27 February 2025. Retrieved 27 February 2025.
- ↑ ரமேஷ், அரவிந்த்ராஜ் (2025-06-20). "Kuberaa Review: நடிப்பை அள்ளி வழங்கும் `குபேரன்' தனுஷ்; ஆழமான எமோஷன்ஸ்; சுவாரஸ்யமான படமாக மாறுகிறதா?". விகடன். Retrieved 2025-06-24.
- ↑ நா.மதுசூதனன் (2025-06-21). "விமர்சனம்: குபேரா - ஒரு பிச்சைக்காரன் குபேரனான கதை!". கல்கி ஆன்லைன். Retrieved 2025-06-24.
- ↑ தர்மராஜகுரு, க (2025-06-20). "பணம், பசி, துரோகம்! குபேரா - திரை விமர்சனம்". தினமணி. Retrieved 2025-06-24.
வெளி இணைப்புகள்
[தொகு]- 2025 தமிழ்த் திரைப்படங்கள்
- 2025 தெலுங்குத் திரைப்படங்கள்
- 2025 இந்தித் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தெலுங்குத் திரைப்படங்கள்
- இந்திய இந்தித் திரைப்படங்கள்
- ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்
- தனுஷ் நடித்துள்ள திரைப்படங்கள்
- கே. பாக்யராஜ் நடித்த திரைப்படங்கள்
- நாசர் நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்த திரைப்படங்கள்