குன் யாங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குன் யாங்கு (Kun Yang) [1]சீனாவைச் சேர்ந்த ஓர் இயற்பியலாளராவார். 1967 ஆம் ஆண்டு இவர் பிறந்தார். 1994 ஆம் ஆண்டு யாங்கு இந்தியானா பல்கலைக்கழகத்தில் ஒடுக்கப்பட்ட பொருள் கோட்பாடு என்ற தலைப்பில் ஆராய்ச்சி மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றார். மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் யாங்கு பிரின்சுடன் பல்கலைக்கழகத்தில் தற்காலிகமாக பணியாற்றினார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் கலிபோர்னியா தொழில் நுட்ப நிறுவனத்தின் செர்மன் ஃபேர்சில்டு ஆய்வகத்தில் மூத்த ஆராய்ச்சியாளர் ஆனார். 1999 ஆம் ஆண்டு புளோரிடா மாநில பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். தற்போது இப்பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.[2] 80 மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

குன் யாங்கின் ஆராய்ச்சி ஆர்வம் குவாண்டம் ஆல் அமைப்புகள், வழக்கத்திற்கு மாறான மீகடத்திகள் மற்றும் ஒழுங்கற்ற குவாண்டம் காந்தங்கள் உட்பட வலுவாக தொடர்புடைய மின்னணு அமைப்புகளில் கவனம் செலுத்துகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 朱晓阳、杨昆、黄旦洪三位校友当选美国物理学会会士(APS Fellow) பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம் - 综合新闻 - 复旦大学
  2. "Kun Yang". Florida State University. Archived from the original on 2013-12-27. பார்க்கப்பட்ட நாள் December 27, 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குன்_யாங்கு&oldid=3356097" இலிருந்து மீள்விக்கப்பட்டது