உள்ளடக்கத்துக்குச் செல்

குன்ஸ்ட்க்ரிங் கலைக்கூடம், மத்திய ஜகார்த்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குன்ஸ்ட்க்ரிங் கலைக்கூடம்
Galeri Seni Kunstkring
Map
முந்திய பெயர்கள்Buddha Bar, Immigrasie Dienst, Bataviasche Kunstkring
பொதுவான தகவல்கள்
இடம்மத்திய ஜகார்த்தா, இந்தோனேசியா
ஆள்கூற்று6°11′20″S 106°50′01″E / 6.188898°S 106.833497°E / -6.188898; 106.833497
கட்டுமான ஆரம்பம்1913
நிறைவுற்றது1914
துவக்கம்17 ஏப்ரல் 1914

குன்ஸ்ட்க்ரிங் கலைக்கூடம் (Kunstkring Art Gallery) (இந்தோனேசிய மொழி: கேலரி செனி குன்ஸ்ட்க்ரிங் ) இந்தோனேசியாவில் மத்திய ஜகார்த்தாவில் அமைந்துள்ள ஒரு பாரம்பரிய கட்டிடம் ஆகும். . டச்சு கட்டிடக் கலைஞர் பி.ஏ.ஜே.மூஜன் தந்த வடிவமைப்பின் அடிப்படையில் 1914 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. முதலில் உள்ளூர் கலை தொடர்பானவற்றிற்காக பயன்படுத்தப்பட்டது. பல மாற்றங்களுக்குப் பிறகு, 2011 ஆம் ஆண்டில் கட்டிடம் மீட்டெடுக்கப்பட்டது, மேல் தளம் ஒரு கலைக்கூடமாகப் பயன்படுத்தப்பட்டது. அதே நேரத்தில் தரை தளம் ஒரு உணவகமாக மாற்றப்பட்டது.

வரலாறு

[தொகு]

குன்ஸ்ட்க்ரிங் கட்டடம் பி.ஏ.ஜே.மூஜன் வடிவமைத்த இரண்டாவது கட்டடம் ஆகும். ஜகார்தாவில். புதிய மென்டெங் குடியிருப்பு பகுதிக்கு வருகின்ற பார்வையாளர்களை வரவேற்கும் வகையில் இது ஒரு குடிமை அடையாளமாக அமைந்துள்ளது.[1] குன்ஸ்ட்க்ரிங் கலை மையத்தை 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் படேவியாவின் கலாச்சார மையமாக மாற்றுவதான எண்ணம் நிலவியது. குன்ஸ்ட்க்ரிங்கின் முதல் செயலாளராகவும், பின்னர் ஜனாதிபதியாகவும் (1910) மூஜென் இருந்தார். இந்த மையமானது காட்சி / பிளாஸ்டிக் மற்றும் அலங்காரக் கலைகளின் மீதான ஆர்வத்தை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது ஆகும்.

மென்டெங் குடியிருப்பு பகுதியைக் கட்டுவதில் பங்கேற்ற கட்டுமான நிறுவனங்களில் ஒன்று நிலத்தை நன்கொடையாக வழங்கியதன் மூலம் இந்தக் கட்டடத்தைக் கட்ட முடிந்தது. இந்த கட்டிடத்தின் கட்டுமானம் 1913 ஆம் ஆண்டு தொடங்கியது, இது ஏப்ரல் 17, 1914 ஆம் நாள் டச்சு தீவுகளின் ஆளுநர் ஜெனரராக இருந்த அலெக்சாண்டர் வில்லெம் ஃபிரடெரிக் ஐடன்பர்க் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. அவர் நெடெர்லாண்ட்ஸ் இண்டிசே குன்ஸ்ட்க்ரிங்கின் மேற்பார்வையாளராக இருந்தார்.[2] கீழ் தளத்தை வணிக பயன்பாட்டிற்கு வாடகைக்கு விட்டதன் மூலமாகமூலம், குன்ஸ்ட்க்ரிங் அதன் செயல்பாடுகளுக்கான வருமானம் எளிதானது.[1] கலைக்கூடம் வரலாற்று ரீதியாக பிரபல ஐரோப்பிய கலைஞர்களான வின்சென்ட் வான் கோக், பப்லோ பிகாசோ, பால் கௌபின், பியட் ஓபோர்க் மற்றும் மார்க் சாகல் ஆகியோரின் படைப்புகளைக் கொண்டு அமைந்துள்ளது.

இந்த கட்டிடம் குன்ஸ்ட்க்ரிங்கை 1942 வரை வைத்திருந்தது, அதற்கு முன்பாக இது மஜெலிஸ் இஸ்லாம் ஆலா இந்தோனேசியாவின் (இந்தோனேசியாவின் உயர் இஸ்லாமிய கவுன்சில்) (1942-1945) தலைமை அலுவலகமாக செயல்பட்டது. பின்னர் மத்திய ஜகார்த்தாவிற்கான குடிவரவு அலுவலகமாக (1950–1997) செயல்பாட்டில் இருந்தது.[3]

பின்னர் 1997 ஆம் ஆண்டில், இந்த கட்டிடம் டாமி சோஹார்டோ என்பவரிடம் விற்கப்பட்டது. அப்போது கவனிப்பாரட்டு கிடக்கவே, கொள்ளையர்களால் கொள்ளையடிக்கப்பட்டது.[3] ஜன்னல் பிரேம்கள் மற்றும் படிக்கட்டுகள் அகற்றப்பட்டு, கறுப்புச் சந்தையில் விற்கப்பட்டன. 2003 ஆம் ஆண்டில், அப்போதைய ஆளுநர் சுட்டியோசோவின் உத்தரவின் பேரில், அரசாங்கம் கட்டிடத்தை திரும்பப் பெற்றது.தெளிவான அளவுருக்கள் இல்லாதபோதிலும் கட்டிடத்தின் முகப்பு சரிசரியாக சீர்செய்யப்பட்டு படிப்படியாக மீட்டெடுக்கப்பட்டது. கட்டிடத்தின் கட்டமைப்பு மற்றும் அலங்கார கூறுகளில் சிலவற்றில் மட்டும் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதே நேரத்தில் கொள்ளையடிக்கப்பட்ட பாகங்கள் கண்டுபிடிக்கப்படாமலேயே போயின.

புத்தா பார் சர்ச்சை

[தொகு]

தரை தளத்தை ஒரு தனியாருக்கு பார் ஆகப் பயன்பத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டபோது பெரும் சர்ச்சை எழுந்தது. 2008 ஆம் ஆண்டில், இந்த கட்டிடம் ஒரு சர்வதேச நிறுவனங்களின் உரிமையாளர் ஒருவரால் புத்தா பார் என்ற பெயரில் அமைந்த ஒரு பிரத்யேக கிளப்பை உருவாக்கப்போகிறது என்பது தெரியவந்தது.[3] வெகுஜன ஊடகங்களிலும் பிரச்னைகள் விவாதிக்கப்பட்டு நிலை மோசமான எல்லையை அடைந்தது. சில பௌத்தர்கள் இதற்கு புத்தரின் பெயரை வைப்பதை அவமானதாகக் கருதி எதிர்ப்பு தெரிவித்தனர்.

2011 ஆம் ஆண்டில், உரிமையாளர்கள் கட்டிடத்தை மறுபடியும் வடிவமைப்பு செய்தனர். கட்டிடத்தின் மேல் தளம் ஒரு கலைக்கூடமாக மாற்றப்பட்டது, இது கட்டிடத்தின் முந்தைய பயன்பாட்டைப் போலவே இருந்தது, அதே சமயம் கீழ் தளம் ஒரு உணவகமாக மாற்றப்பட்டது. அந்த உணவகத்தில் பழைய படேவியன் கட்டிடக்கலை ஒத்த கட்டிடக்கலை பாணியில் அமைந்தது.[4]

தற்போதைய நிலை

[தொகு]

ஏப்ரல் 2013 ஆம் நாளன்று இந்த கட்டிடம் மறுபடியும் திறக்கப்பட்டது. அப்போது அதற்கு துகு குன்ஸ்ட்க்ரிங் பாலீஸ் என்று பெயர் மாற்றம் பெற்றது.[5] கலை மற்றும் கலாச்சார மையமான குன்ஸ்ட்க்ரிங்கின் உண்மையான நோக்கத்தைப் புரிந்துகொண்டு அதன் அடிப்படையில், துகு குழுமத்தினர் இரண்டாவது தளத்தில் இந்தோனேசிய கலைஞர்களிடமிருந்து பெறப்பட்ட கலைப்படைப்புகளைக் காட்சிப்படுத்தினர்.பெரும்பாலான அறைகள் மற்றும் முதல் மாடியில் உள்ள பிரதான மண்டபம் ஒரு சிறந்த உணவு விடுதியாக மாற்றப்பட்ட சூழலிலும், இது இந்தோனேசியாவின் கலை, ஆன்மா உள்ளிட்டவற்றைக் கொண்ட கலை சேகரிப்புகளாலும், பழம்பொருட்களாலும் அலங்கரிக்கப்பட்டு காட்சி தருகிறது. இந்தோனேசிய ஓவியர்களின் முன்னோடிகளில் ஒருவரான ரேடன் சலேவுக்கு ஒரு அறை தனியாக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

கட்டிடக்கலை

[தொகு]

இந்த வடிவமைப்பு பழைய இண்டீஸ் பாணிக்கு மாற்றாக நியூ இண்டீஸ் பாணி எனப்படும் பகுத்தறிவுக் கட்டிடக்கலைப் பாணியைக் கொண்டு அமைந்துள்ளது.

இந்தோனேசியாவில் வலுவூட்டப்பட்ட கான்கிரீட் பயன்படுத்திய பெருமையினை இது கொண்டுள்ளது.

பிரதான முகப்பில் இடையில் மூன்று நுழைவு கதவுகள் உள்ளன. அவை ஒரே வடிவில் வடிவமைக்கப்பட்ட இரண்டு ஜன்னல்களுக்கு இடையில் உள்ளன. பிரதான முகப்பின் மேல் தளத்தில் பால்கேனிகள் பலஸ்ட்ரேடுகளுடன் உள்ளன. கட்டிடத்தில் இரண்டு கோபுரங்கள் உள்ளன. ஆரம்பத்தில் இருந்த அலங்கார விளக்குகள் காணவில்லை, அதே நேரத்தில் கறை படிந்த கண்ணாடி 1999 ஆம் ஆண்டில் கொள்ளையடிக்கப்பட்டது.[2] உட்புறம் இருண்ட மரத்தினாலான பேனலைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டது. பெரிய படிக்கட்டு கட்டிடத்தின் பக்கவாட்டில் அமைந்துள்ளது, அது கீழ் தளத்தை மேல் தளத்துடன் இணைக்கும் வகையில் அமைந்துள்ளது. கீழ் தளம் முதலில் சிறிய அறைகளால் சூழப்பட்ட ஒரு பெரிய அறையைக் கொண்டு அமைந்திருந்தது. அவை நெடெர்லாண்ட்ஸ் இண்டிச் குன்ஸ்ட்க்ரிங்கிற்கான நிர்வாக அலுவலகமாகப் பயன்படுத்தப்பட்டமு. 1999 ஆம் ஆண்டில், கீழ் தளமானது ஒரு தொடர்ச்சியான பெரிய அறையாக மாற்றப்பட்டது. மேல் தளம் ஒரு கலைக்கூடமாக பயன்படுத்தப்பட்டது. சில நேரங்களில் வரவேற்பு அறையாக வாடகைக்கும் விடப்படுகிறது. இந்த கட்டிடம் மென்டெங் பகுதியில் ஒரு அடையாளமாகத் திகழ்கிறது.[2] தற்போது மேல் தளம் ஒரு கலைக்கூடமாக மாற்றப்பட்டுள்ளது.

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 Silver, Christopher (2007). Planning the Megacity: Jakarta in the Twentieth Century. Planning, History and Environment Series. Routledge. pp. 56–60. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781135991227. பார்க்கப்பட்ட நாள் 14 August 2015.
  2. 2.0 2.1 2.2 "Bataviasche Kunstkring, Gedung". Ensiklopedi Jakarta (in Indonesian). Dinas Komunikasi, Informatika dan Kehumasan Pemprov DKI Jakarta. 2013. Archived from the original on ஜனவரி 21, 2013. பார்க்கப்பட்ட நாள் January 22, 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)CS1 maint: unrecognized language (link)
  3. 3.0 3.1 3.2 Rakun, Farid; Yunanto, Ardi (March 22, 2010). "How to fleece, cajole, and mislead the public: the case of the ex-immigration building, Central Jakarta". Karbon Journal. Archived from the original on ஜனவரி 25, 2013. பார்க்கப்பட்ட நாள் January 22, 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "New Menteng Bistro Leaves Buddha Bar Past in the Dust". http://www.thejakartaglobe.com/lifeandtimes/new-menteng-bistro-leaves-buddha-bar-past-in-the-dust/452901. பார்த்த நாள்: January 22, 2013. 
  5. "Tugu Kunstkring Paleis". Tugu Hotels. Tugu Hotels. 2013. Archived from the original on அக்டோபர் 4, 2013. பார்க்கப்பட்ட நாள் August 20, 2013. {{cite web}}: Unknown parameter |= ignored (help)