குன்வர் வியோகி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

குன்வர் வியோகி (ஆங்கிலம்: Kunwar Viyogi) 1940 செப்டம்பர் 4 அன்று ரந்தீர் சிங் ஜாம்வால் என்ற இயற்பெயருடன் பிறந்த இவர் 'கர்' [1] என்ற அவரது நீண்ட டோக்ரி மொழி கவிதைக்காக சாகித்ய அகாடமி விருதைப் பெற்ற ஒரே இந்திய விமானப்படை அதிகாரி ஆவார். அவர் 'கர்' (வீடு) என்பதை ஒரு முளையாகப் பயன்படுத்தினார். 238 நான்கு வரி வசனங்களை பலவிதமான பாடங்களையும் கருத்துக்களையும் உணர்வுகளையும் ஒரு நீண்ட கவிதையாகத் எழுதினார். சாகித்ய அகாடமி வரலாற்றில் இந்த கௌரவத்தைப் பெற்ற இளைய கவிஞரும் ஆவார். தோக்ரி எழுத்தாளர்களுக்கான ஒப்பீட்டளவில் புதிய மற்றும் ஆராயப்படாத வகையான செய்யுள்களை தோக்ரி இலக்கியத்தில் அறிமுகப்படுத்தியதற்காக வியோகி குறிப்பிடத்தக்கவர்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

குன்வர் வியோகி 1940 செப்டம்பர் 4 ஆம் தேதி சம்பா மாவட்டத்தில் பூராக் சிங் ஜாம்வால் என்பவருக்குப் பிறந்தார். இவர் சம்மு & காஷ்மீர் காவல் துறையில் ஆய்வாளராக பணியாற்றினார். [2] அவரது தாயார், புஷ்பா தேவி ஒரு இல்லத்தரசியாகவும், ஐந்து சகோதரர்கள் மற்றும் மூன்று சகோதரிகளுக்கு தாயாகவும் இருந்தார். இதில் வியோகி மூத்தவர். வியோகியின் பெரும்பாலான உடன்பிறப்புகள் இராணுவத்தில் அல்லது விமானப்படையில் சேர்ந்து நாட்டிற்கு சேவை செய்தனர். அவரது சகோதரிகள் அனைவரும் பாதுகாப்பு அதிகாரிகளை மணந்தவர்கள்.

தந்தையின் தொழில் காரணமாக வியோகியின் குழந்தைப் பருவம் ஒரு இடத்தோடு பிணைக்கப்படவில்லை. கௌர் பஜோரியன், ராஜோரி, புத்தர், கோட்லி (தற்போது பாக்கித்தானில் ), சம்மு மற்றும் உதம்பூர் ஆகிய இடங்களில் வளர்ந்தார். அவர் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை சம்முவின் பட்டு சோகன் பகுதியில் கழித்தார். மேலும் தனது 13 வயதில் கவிதைகளால் ஈர்க்கப்பட்டார். சிறுகதைகளில் பங்களித்து, கிலோனா மற்றும் ஷாமா பத்திரிகைகளில் வெளியான அவரது படைப்புகளுக்கு பாராட்டுகளைப் பெற்றார்.

பள்ளி வாழ்க்கை[தொகு]

வியோகி ஆரம்பக் கல்வியை கவுர், சரோர் மற்றும் பக்கா தங்காவில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் பயின்றார். நடுநிலைக் கல்வியை சம்முவில் உள்ள பார்தாப் நினைவு ராஜபுத்திர பள்ளியில் கற்றார். பின்னர் அரசு காந்தி நினைவு அறிவியல் கல்லூரியில் உயர் படிப்புக்காக சேர்ந்தார். இளங்கலை அறிவியல், மேலாண்மையில் முதுகலைப் பட்டம், வெகுசனத் தொடர்பில் முதுகலைப் பட்டம், வணிக மேலாண்மையில் முதுகலைப் பட்டம் மற்றும் இதழியலில் முதுகலை பட்டம் போன்றவற்றை பெற்றார். குன்வர் வியோகி தோக்ரி, உருது, இந்தி, ஆங்கிலம் மற்றும் பஞ்சாபி மொழிகளில் தேர்ச்சி பெற்றவர். அவரது பொழுதுபோக்குகளில் கால்பந்தாட்டம் மற்றும் வளைதடிப் பந்தாட்டம் விளையாடுவது அடங்கும். மேலும் அவர் மாணவர் சங்கத்தின் நிகழ்வுகளில் தீவிரமாக பங்கேற்றார்.

தொழில்[தொகு]

தனது பட்டப்படிப்பைத் தொடரும் போது, வியோகி பாதுகாப்புப் படைகளான இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைக்கு விண்ணப்பித்ததில் மூன்றுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவர் விமானப்படையைத் தேர்ந்தெடுத்து விமானியாக பறக்கும் கல்லூரியில் விமானியாகப் பயிற்சி பெற்றார். அவரது வேலையின் தன்மை அவரை இந்தியா முழுவதும் அழைத்துச் சென்றது. அவர் சுமார் ஒன்றரை ஆண்டுகள் நியூயார்க்கில் ஒரு படைத் தலைவராக பணியாற்றினார். வியோகி விமானப்படை அதிகாரியாக சிறந்து விளங்கினாலும், மார்பக புற்றுநோயால் உயிரை இழந்த மனைவியின் மறைவின் காரணமாக அவர் முன்கூட்டியே ஓய்வு பெற்றார். அவர் அவருடன் நினைவுகளை விட்டு விலக நினைத்து ராஜஸ்தானின் பில்வாராவுக்கு குடிபெயர்ந்தார். மேலும்அவரது அனைத்து இலக்கிய சிந்தனைகளையும் கைவிட்டார்.

பின்னர் அவர் தனது நேரத்தை இந்திய ஆட்சிப் பணி மற்றும் முதுகலை வணிக மேலாண்மை. போன்ற வழிகளில் செலவிட்டார். 1992 இல், வியோகி சம்மு திரும்பி காஷ்மீர் டைம்ஸ் என்ற இதழின் தோக்ரி பதிப்பின் ஆசிரியராக சேர்ந்தார். அதில் அவர் தலையங்கங்கள், கட்டுரைகள் மற்றும் கவிதைகள் எழுதினார். பின்னர் அவர் மீண்டும் ராஜஸ்தானுக்கு சென்றார். தோக்ரிக்கு அவர் அளித்த மதிப்புமிக்க பங்களிப்பிற்காக 2001 ஆம் ஆண்டில், வியோகிக்கு நமி தோக்ரி சன்ஸ்தாவால் சாகித்ய ரத்தன் விருது வழங்கப்பட்டது. 2012-15 முதல், அவர் தனது படைப்புகளை வெளியிடவும் மறுபதிப்பு செய்யவும் பணியாற்றினார்.

விருதுகள் மற்றும் அங்கீகாரம்[தொகு]

  • 2001 ல் நமி டோக்ரி சன்ஸ்தா வழங்கிய சாகித்ய ரத்தன் விருது
  • 1966 இல் சிறந்த போர் கட்டுப்பாட்டுக்கான தங்க பதக்கம்.
  • 1985 இல் விமானப்படைத் தலைவரின் பாராட்டு.
  • இந்திய இசையில் வரலாறு 2017 இல் உருவாக்கப்பட்டது. சம்முவின் மிகப்பெரிய இலக்கிய அமைப்பான தோக்ரி சன்ஸ்தா, வியோகியின் செய்யுள்களை ஆத்மார்த்தமான பாடல்களாக மாற்றியமைத்து. எந்தவொரு இந்திய மொழியிலும் செய்யுள் சந்தியா என்ற முதல் செய்யுள் கச்சேரியில் வழங்கியது.

குன்வர் வியோகி நினைவு அறக்கட்டளை[தொகு]

குன்வர் வியோகி நினைவு அறக்கட்டளை வியோகியின் நினைவாக நிறுவப்பட்டது. கல்வி, இலக்கியம், கலை கண்டுபிடிப்பு, மொழி மற்றும் இலக்கியம் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றில் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் தோக்ரி மொழியின் மறுமலர்ச்சி, பாதுகாத்தல் மற்றும் ஊக்குவிப்பு ஆகியவற்றில் அறக்கட்டளை செயல்பட்டு வரும் முக்கிய துறைகள் ஆகும்.

தோக்ரி மொழியைத் தழுவுவதற்கு இளைஞர்களை ஊக்குவிப்பதற்காக, குன்வர் வியோகி நினைவு அறக்கட்டளை உதவித்தொகை, இலக்கிய விருதுகள், பல்கலைக்கழகத்தில் கலை கண்டுபிடிப்பு விருதுகள், கல்லூரி மற்றும் பள்ளி மட்டத்தில் இளைஞர்களுக்கும் திறமைசாலிகளுக்கும் விருதுகளை வழங்குகிறது.

புகழ்பெற்ற தோக்ரி எழுத்தாளர்களால் எழுதப்பட்ட தோக்ரி ஈரடிகள், செய்யுள்கள், வசனங்கள், கசல்கள் போன்றவை நவீனகால தோக்ரி இசையாக மாற்றப்பட்டு வருகின்றன.

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குன்வர்_வியோகி&oldid=2870904" இருந்து மீள்விக்கப்பட்டது