குன்லா
குன்லா | |
|---|---|
காத்மாண்டுவில் குன்லாவின் போது காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள திபங்கர புத்தரின் சிலைகள் | |
| பிற பெயர்(கள்) | நேபாளி மொழியில் குன்லா பர்வா எனவும் அறியப்படுகிறது. |
| கடைப்பிடிப்போர் | நேபாள பௌத்த மதத்தினர் |
| வகை | மதச் சடங்கு |
| முக்கியத்துவம் | புத்தர் தொடங்கிய மழைக்கால பின்வாங்கலைக் கொண்டாடுகிறது. |
| அனுசரிப்புகள் | படக் காட்சிகள், இசை ஊர்வலங்கள், அன்னதானம், நோன்பு, பிரார்த்தனை |
குன்லா (Gunla) என்பது நேபாளத்தின் தேசிய சந்திர நாட்காட்டியின் நேபாள சம்பத் சந்திர நாட்காட்டியின்படி பத்தாவது மாதமாகும்.[1] இது கிரெகொரியின் நாட்காட்டியின் ஆகத்து மாதத்துடன் ஒத்திருக்கிறது.
குன்லா என்பது நேவார் பௌத்த மதத்தினருக்கு புனிதமான மாதமாகும். அவர்கள் இந்த மாதங்களில் வேதங்களை ஓதி, விரதங்களைக் கடைப்பிடிக்கிறார்கள். மேலும் பக்தி இசையை வாசித்து வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்கிறார்கள். இது நேவார் பௌத்தின் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாகும்.[2] புனித மாதத்தைக் கடைப்பிடிக்கும் நடைமுறை கௌதம புத்தர் தொடங்கிய மழைக்கால பின்வாங்கலைக் கொண்டாடும் காலத்திலிருந்தே இது தொடர்கிறது. இந்த காலகட்டத்தில் துறவிகள் ஒரே இடத்தில் தங்கி உள்ளூர் மக்களுக்கு தருமத்தைக் கற்பித்தனர்.[3][4]
பாரம்பரிய நம்பிக்கைகளின்படி, பழங்காலங்களில், அதிக மழை பெய்யும். இந்த மழையின் காரணமாக, அந்த நேரத்தில் மண் வீடுகள் அழிந்துவிடும். மேலும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் மக்களின் வாழ்க்கையில் மனச்சோர்வை அதிகரிக்கும். எனவே, மனச்சோர்வைத் தணிக்கவும், வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளிலிருந்து பாதுகாப்பாக இருக்கவும், மக்கள் உயரமான இடத்தில் இருந்த சுயம்புநாதர் கோயிலுக்கு பக்தி இசையை வாசித்துக் கொண்டு செல்வார்கள்.[5]
அவதானிப்புகள்
[தொகு]பக்தர்கள் தினமும் அதிகாலையில் காத்மாண்டுவிலுள்ள சுயம்புநாதர் கோயில் மற்றும் பிற பௌத்த கோயில்களுக்கு குன்லா பஜன் என்ற இசையை இசைத்து புனித மாதத்தைக் கொண்டாடுகின்றனர். இசைக்குழுக்கள் நகரின் பல்வேறு பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.
பக்தர்கள் தங்கள் வீடுகளிலும் வேதங்களை ஓதுகிறார்கள். சிலர் விரதம் இருக்கின்றனர். குன்லாவின் போது தியாக் தாய்கு என்ற மற்றொரு பக்தி செயல்பாடு நிகழ்த்தப்படுகிறது. பக்தர்கள் ஒரு அச்சைப் பயன்படுத்தி கருப்பு களிமண்ணிலிருந்து சிறிய தாது கோபுரங்களை உருவாக்குகிறார்கள்.[6]
முக்கிய நாட்கள்
[தொகு]பஞ்சாரன்
[தொகு]
பஞ்சாரண் என்பது பிச்சை கொடுக்கும் திருவிழா ஆகும். வஜ்ராச்சார்யா மற்றும் சாக்கியர்கள் சாதியைச் சேர்ந்த ஆண்கள் நகரத்தைச் சுற்றி பிச்சை எடுக்கிறார்கள். பக்தர்கள் அவர்களுக்கு அரிசியும் பணமும் வழங்குகிறார்கள். தனியார் வீடுகள், முற்றங்கள் மற்றும் பரிசுகள் விநியோகிக்கப்படும் சாலையோரங்களில் புத்தரின் சிலைகள் மற்றும் பௌபா சுருள் ஓவியங்களுடன் ஆலயங்கள் அலங்கரிக்கப்படுகின்றன. இந்த நிகழ்வு காத்மாண்டு சமவெளி மற்றும் இலலித்பூரில் வெவ்வேறு தேதிகளில் நடைபெறுகிறது.[7]
புத்தர் காட்சி
[தொகு]குன்லாவின் இரண்டாவது பதினைந்து நாட்களின் முதல் நாளில், தீபங்கர புத்தர் மற்றும் பௌபா ஓவியங்களின் பெரிய உருவங்கள் புனித முற்றங்களில் காட்சிக்கு வைக்கப்படுகின்றன. இந்த விழா பகித்யா புவேகு என்று அழைக்கப்படுகிறது. [8][9]
இந்த நாளில் பகித்ய சுவாவானேகு என்று அழைக்கப்படும் ஒரு திருவிழாவில், உள்ளூர் இசைக்குழுக்கள் தங்கள் கருவிகளஒஇ இசைத்தபடி புனித முற்றங்களுக்குச் செல்கின்றன. இந்த திருவிழா முழுநிலவு நாளுக்கு அடுத்த நாள் நடைபெறுகிறது. மேலும், கை யாத்திரை திருவிழாவுடன் ஒத்துப்போகிறது.[10]
நிசாலா சாவனேகு என்பது குன்லா பஜன் சமூகங்களின் மற்றொரு முக்கிய சடங்கு ஆகும். அவர்கள் சுயம்புலிங்கத்திற்கு இசைக் கச்சேரிகளை நடத்தி பிரசாதங்களை வழங்குகிறார்கள்.[11]
பிற கொண்டாட்டங்கள்
[தொகு]விழாவின் ஐந்தாவது நாளில் நாக பஞ்சமி கொண்டாடப்படுகிறது. இது இந்து வழிபாட்டு முறையில் ஒரு பிரிவான நாக வழிபாட்டில் போற்றுதற்குரிய நாளாகும். இந்நாளில் நாக தோசம் நீங்கவும், தங்களின் சந்ததிகளுக்கு அந்தத் தோசம் பாதிக்காமல் இருக்கவும் நாக வழிபாடு செய்கின்றார்கள். ஆவணி மாதத்தில் வருகின்ற பஞ்சமி திதியை நாகப் பஞ்சமி என்று அழைக்கின்றனர். [12] [13]
விழாவின் எட்டாவது நாளில் கிருட்டிணரின் பிறப்பைக் கொண்டாடுகிற கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதத்தில் தேய்பிறையின் எட்டாம் நிலையில் (அட்டமி திதி) ரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நாளில் இவ்விழா நிகழ்கிறது. கிரெகொரியின் நாட்காட்டியின் ஆகத்து அல்லது செப்டம்பர் மாதத்தில் இதை கொண்டாடுகிறார்கள். இது பௌயா கிவா சுயேகு என்றும் அழைக்கப்படும் தந்தையர் நாளாகவும் கொண்டாடுகிறார்கள்..[14]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Nepal Sambat gets national status". The Rising Nepal. http://www.gorkhapatra.org.np/detail.php?article_id=8874&cat_id=5.
- ↑ Locke, John K. (2008). "Unique Features of Newar Buddhism". Nagarjuna Institute of Exact Methods. Archived from the original on 24 March 2012. Retrieved 5 August 2012.
- ↑ LeVine, Sarah and Gellner, David N. (2005) Rebuilding Buddhism: The Theravada Movement in Twentieth-Century Nepal. Harvard University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-674-01908-9. Page 64. Retrieved 5 August 2012.
- ↑ Lewis, Todd T. (Winter 1993). "Contributions to the Study of Popular Buddhism: The Newar Buddhist Festival of Gumla Dharma". Journal of the International Association of Buddhist Studies. Retrieved 19 February 2013. Page 323.
- ↑ Gurju. Ashok Bajracharya, Swayambhu
- ↑ Lewis, Todd T. (Winter 1993). "Contributions to the Study of Popular Buddhism: The Newar Buddhist Festival of Gumla Dharma". Journal of the International Association of Buddhist Studies. Retrieved 19 February 2013. Page 333.
- ↑ Lewis, Todd T. (Winter 1993). "Contributions to the Study of Popular Buddhism: The Newar Buddhist Festival of Gumla Dharma". Journal of the International Association of Buddhist Studies 16 (2): 336–339. https://journals.ub.uni-heidelberg.de/index.php/jiabs/article/viewFile/8816/2723. பார்த்த நாள்: 8 August 2014.
- ↑ Lewis, Todd T. (Winter 1993). "Contributions to the Study of Popular Buddhism: The Newar Buddhist Festival of Gumla Dharma". Journal of the International Association of Buddhist Studies. Retrieved 19 February 2013. Page 335.
- ↑ Tuladhar, Alok (25 October 2013). "Bahi Dyo: The Outbound Courtyard Deity". ECS Nepal. http://ecs.com.np/features/bahi-dyo-the-outbound-courtyard-deity.
- ↑ Lewis, Todd T. (Winter 1993). "Contributions to the Study of Popular Buddhism: The Newar Buddhist Festival of Gumla Dharma". Journal of the International Association of Buddhist Studies 16 (2): 335–341. https://journals.ub.uni-heidelberg.de/index.php/jiabs/article/viewFile/8816/2723. பார்த்த நாள்: 8 August 2014.
- ↑ Lewis, Todd T. (Winter 1993). "Contributions to the Study of Popular Buddhism: The Newar Buddhist Festival of Gumla Dharma". Journal of the International Association of Buddhist Studies 16 (2): 335–341. https://journals.ub.uni-heidelberg.de/index.php/jiabs/article/viewFile/8816/2723. பார்த்த நாள்: 8 August 2014.
- ↑ http://www.siththarkal.com/2010/09/blog-post.html நாகபஞ்சமி
- ↑ http://temple.dinamalar.com/news_detail.php?id=2382
- ↑ Levy, Robert Isaac (1990). "A Catalogue of Annual Events and Their Distribution throughout the Lunar Year". Mesocosm: Hinduism and the Organization of a Traditional Newar City in Nepal. University of California Press. p. 653. ISBN 9780520069114.