குன்றூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொன்றுமுதிர் வேளிர் என்றும் தொன்முது வேளிர் என்றும் குறிப்பிடப்படும் வேளிரின் பழங்குடி மக்கள் வாழ்ந்த ஊர் குன்றூர். இந்தக் குடியைச் சேர்ந்த உழவர் பெருமக்கள் வயலில் மேயும் ஆமைகளைப் பிடித்துவந்து அதனைச் சுட்டு உண்பர். (பரணர் - நற்றிணை 280)

இந்தக் குன்றூருக்குக் கிழக்குப்பக்கம் கடல் இருந்தது. (மாங்குடி மருதனார் - குறுந்தொகை 164)

"https://ta.wikipedia.org/w/index.php?title=குன்றூர்&oldid=739914" இலிருந்து மீள்விக்கப்பட்டது