உள்ளடக்கத்துக்குச் செல்

குன்னம் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குன்னம்
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 148
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்பெரம்பலூர் மாவட்டம்
மக்களவைத் தொகுதிசிதம்பரம் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது2008
மொத்த வாக்காளர்கள்2,73,461[1]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி திமுக   
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

குன்னம் சட்டமன்றத் தொகுதி (Kunnam Assembly constituency) பெரம்பலூர் மாவட்டத்தின்[2] 2011-ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இந்த தொகுதி உருவாக்கப்பட்ட பின்னர் இதுவரை 3 சட்டமன்ற தேர்தல்களை சந்தித்துள்ளது. குன்னம் தொகுதி உருவாக்கப்படுவதற்கு முன்பு 1967-ஆம் ஆண்டு முதல் வரகூர் சட்டமன்றத் தொகுதியாக இதன் பகுதிகள் இருந்தது. 2008-ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு 2011-ம் ஆண்டு குன்னம் சட்டமன்ற தொகுதி உருவாக்கப்பட்டது.

குன்னம் சட்டமன்ற தொகுதியில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் வட்டம் மற்றும் அரியலூர் மாவட்டத்தின் செந்துறை வட்டப் பகுதிகளும் உள்ளன.

இத்தொகுதியில் விவசாயமே பிரதான தொழில் ஆகும். குன்னம் பகுதிகளில் பருத்தி, மக்காச்சோளம், மஞ்சளும், செந்துறை தாலுகா பகுதிகளில் பருத்தி, முந்திரி உள்ளிட்டவை அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. சுண்ணாம்பு கல்குவாரிகளும் அதிகம் செயல்பட்டு வருகிறது. செந்துறை தாலுகாவில் தனியார் சிமெண்டு தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன. தமிழ் தாத்தா உ.வே. சாமிநாத ஐயர் தனது பெற்றோருடன் தங்கி பயின்றதும் இந்த தொகுதியில்தான்.[3]

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

[தொகு]

திருமாந்துரை ஊராட்சி (பெரம்பலூர்), பெண்ணக்கோணம் (தெற்கு), அத்தியூர் (தெற்கு), அகரம்சீகூர், வசிஷ்டபுரம், கீழப்பெரம்பலூர், வயலப்பாடி ஊராட்சி, கிழுமத்தூர் (தெற்கு), கிழுமத்தூர் (வடக்கு), வடக்கலூர் (பெரம்பலூர்), பெருமத்தூர் (வடக்கு), சிறுமத்தூர், கீழப்புலியூர் (வடக்கு), கீழப்புலியூர் (தெற்கு), பெருமத்தூர் (தெற்கு) ஆண்டிகுரும்பலூர், நன்னை (மேற்கு), நன்னை (கிழக்கு), ஓலைப்பாடி (பெரம்பலூர்) (மேற்கு), துங்கபுரம் (வடக்கு), துங்கபுரம் (தெற்கு),தேனூர் ஊராட்சி (பெரம்பலூர்)(மேற்கு) பரவாய் (கிழக்கு), பரவாய் (மேற்கு), மலைராயநல்லூர், எழுமூர் (கிழக்கு), எழுமுர் (மேற்கு), அசூர், சித்தளி (கிழக்கு), சித்தளி (மேற்கு), பேரளி (வடக்கு), பேரளி (தெற்கு), ஒதியம், பெரியம்மாபாளையம், குன்னம், வரகூர், கொளப்பாடி, புதுவேட்டைக்குடி, காடூர் (வடக்கு), காடூர் (தெற்கு) பெரியவெண்மணி (பெரம்பலூர்) (கிழக்கு), பெரியவெண்மணி (மேற்கு), மேலமாத்தூர் ஊராட்சி, அழகிரிப்பாளையம் ஊராட்சி, தொண்டப்பாடி, கூத்தூர் ஊராட்சி (பெரம்பலூர்), ஆதனூர் (தெற்கு), ஆதனூர் (வடக்கு), கொட்டரை ஊராட்சி, சாத்தனூர், சிறுகன்பூர் ஊராட்சி (கிழக்கு), சிறுகன்பூர் (மேற்கு), வரகுபாடி ஊராட்சி, காரை (கிழக்கு), காரை (மேற்கு), தெரணி, ஆயினாபுரம், கொளக்காநத்தம், கொளத்தூர் (மேற்கு) கொளத்தூர் (கிழக்கு) திம்மூர், கூடலூர், புஜங்கராயநல்லூர், நொச்சிகுளம் ஊராட்சி (பெரம்பலூர்), ஆத்தூர், சில்லக்குடி (பெரம்பலூர்) (வடக்கு) மற்றும் சில்லக்குடி (தெற்கு) கிராமங்கள்.

இலப்பைகுடிக்காடு (பேரூராட்சி).[4]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் இரண்டாம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் வாக்குகள் வேறுபாடு
2011[5] எஸ். எஸ். சிவசங்கர் திமுக 81,723 துரை காமராஜ் தேமுதிக 58,766 22,957
2016 ஆர். டி. ராமச்சந்திரன் அதிமுக 78,218 த. துரைராஜ் திமுக 59,422 18,796
2021 எஸ். எஸ். சிவசங்கர் திமுக 1,03,922 ஆர். டி. ராமச்சந்திரன் அதிமுக 97,593 6,329

தேர்தல் முடிவுகள்

[தொகு]
வேட்பாளர் வாக்கு வீதம்
2021
47.43%
2016
38.15%
2011
46.89%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: குன்னம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக சா. சி. சிவசங்கர் 103,922 47.43 Increase 18.45
அஇஅதிமுக ஆர். டி. இராமச்சந்திரன் 97,593 44.54 Increase 6.39
நாம் தமிழர் கட்சி பி. அருள் 9,354 4.27 Increase 3.46
அமமுக எஸ். கார்த்திக்கேயன் 2,118 0.97 புதிது
சுயேச்சை ஆர். செல்வராஜீ 977 0.45 புதிது
சுயேச்சை எசு. பாலமுருகன் 934 0.43 புதிது
நோட்டா நோட்டா 753 0.34 1.13
மநீம ஏ. எசு. சாதிக் பாட்சா 739 0.34 புதிது
சுயேச்சை எம். ஆர். பிரகாசு 604 0.28 புதிது
பசக எசு. பாண்டியன் 494 0.23 0.31
சுயேச்சை எம். வினோத்குமார் 451 0.21 புதிது
வெற்றி வாக்கு வேறுபாடு 6,329 2.89 -6.28
பதிவான வாக்குகள் 219,126 80.13 -0.02
நிராகரிக்கப்பட்ட ஓட்டுகள் 151 0.07
பதிவு செய்த வாக்காளர்கள் 273,461
அஇஅதிமுக இடமிருந்து திமுக பெற்றது மாற்றம் 9.28
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016: குன்னம்[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக ஆர். டி. ராமச்சந்திரன் 78,218 38.15% ‘‘புதியவர்’’
திமுக டி. துரைராஜ் 59,422 28.98% 17.91
பாமக ஜி. வைத்தியலிங்கம் 37,271 18.18% ‘‘புதியவர்’’
விசிக ஆளூர் ஷா நவாஸ் 19,853 9.68% ‘‘புதியவர்’’
நோட்டா நோட்டா 3,024 1.47% ‘‘புதியவர்’’
நாம் தமிழர் கட்சி பி. அருள் 1,665 0.81% ‘‘புதியவர்’’
இஜக எ. வி. ஆர். இரகுபதி 1,168 0.57% ‘‘புதியவர்’’
பசக கே. இராஜேந்திரன் 1,092 0.53% 0.34
சுயேச்சை ஆர். துரைராஜ் 1,055 0.51% ‘‘புதியவர்’’
சுயேச்சை எம். தருமலிங்கம் 586 0.29% ‘‘புதியவர்’’
சுயேச்சை என். சிலம்பரசன் 566 0.28% ‘‘புதியவர்’’
வெற்றி வாக்கு வேறுபாடு 18,796 9.17% -4.00%
பதிவான வாக்குகள் 205,044 80.15% -1.76%
பதிவு செய்த வாக்காளர்கள் 255,823
திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது மாற்றம் -8.74%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: குன்னம்[7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக எஸ். எஸ். சிவசங்கர் 81,723 46.89% ‘‘புதியவர்’’
தேமுதிக துரை காமராஜ் 58,766 33.72% ‘‘புதியவர்’’
இஜக பி. ஜெயசீலன் 13,735 7.88% ‘‘புதியவர்’’
சுயேச்சை பி. பொன்னிவளவன் 8,395 4.82% ‘‘புதியவர்’’
பா.ஜ.க டி. பாசுகரன் 2,509 1.44% ‘‘புதியவர்’’
சுயேச்சை பி. இரமேசு 2,264 1.30% ‘‘புதியவர்’’
பசக கே. இராஜேந்திரன் 1,526 0.88% ‘‘புதியவர்’’
ஜாமுமோ ஜி. மருதுதுரை 1,433 0.82% ‘‘புதியவர்’’
சுயேச்சை எம். குமார் 1,411 0.81% ‘‘புதியவர்’’
இரா.ஜ.த. எம். தங்கவேல் 1,070 0.61% ‘‘புதியவர்’’
சுயேச்சை பி. சாமிநாதன் 901 0.52% ‘‘புதியவர்’’
வெற்றி வாக்கு வேறுபாடு 22,957 13.17%
பதிவான வாக்குகள் 212,789 81.91%
பதிவு செய்த வாக்காளர்கள் 174,294
திமுக வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 31 December 2021. Retrieved 10 Feb 2022.
  2. "தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் விவரக்குறிப்புகள்".
  3. குன்னம் தொகுதி கண்ணோட்டம் -2021
  4. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 5 செப்டெம்பர் 2015.
  5. 2011 இந்திய தேர்தல் ஆணையம்
  6. "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 April 2022. Retrieved 30 Apr 2022.
  7. Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.