குன்னத்தூர் (திருப்பூர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேரளத்தில் உள்ள ஊரைப் பற்றி அறிய, குன்னத்தூர் ஊராட்சி என்னும் கட்டுரையைப் பார்க்கவும்.
குன்னத்தூர்
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருப்பூர்
வட்டம் ஊத்துக்குளி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

8,774 (2011)

1,232/km2 (3,191/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 7.12 சதுர கிலோமீட்டர்கள் (2.75 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/kunnathur

குன்னத்தூர் (ஆங்கிலம்:Kunnathur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்த ஊர் கருப்பட்டிக்கு பெயர்பெற்றது[3].

அமைவிடம்[தொகு]

குன்னத்தூர் பேரூராட்சியிலிருந்து திருப்பூர் 22. கிமீ; பெருந்துறை 20 கிமீ; கோபிச்செட்டிப்பாளையம் 24 கிமீ., தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு[தொகு]

7.12 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 32 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி பெருந்துறை (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருப்பூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,588 வீடுகளும், 8,774 மக்கள்தொகையும் கொண்டது.[5]

கோயில்கள்[தொகு]

குன்னத்தூரின் லட்சுமிநாராயணர் கோயில் பன்னிரண்டாம் நூற்றாண்டில் சேரர்களால் கட்டப்பட்டது. மேலும் புகழ்மிகு வழிபாட்டுத்தலங்களான அகிலாண்டேஸ்வரி அம்மன் கோயில், அரண்மனை மாரியம்மன் கோயில், சிவன் கோயில், பொங்காளியம்மன் கோயில் ஆகியன உள்ளன. பொங்காளியம்மன் கோயில் 32 கிராம மக்களும் வந்து சேர்ந்து வழிபடும் இடம். இக்கோயிலின் தேர் திருவிழா மிக பிரசித்தம் உடையது. மாகாளி அம்மன் கோயில், சங்குமாரியம்மன் கோயில் ஆகியனவும் உள்ளன.அது மட்டுமில்லாமல் தமிழ்நாட்டின் 5 வது ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயம் குன்னத்தூரில் இருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் ஆதியூர் எனும் ஊரில் உள்ளது. இங்குக்குள்ள அணைத்து சிற்பங்களும் ஒரே கல்லினால் ஆனவை. இது குன்னத்தூருக்கு மேலும் பெருமை யாகும்.

மருத்துவமனைகள்[தொகு]

  • குன்னத்தூர் அரசு மருத்துவமனை
  • தனியார் மருத்துவமனைகள்

எந்த நேரத்திலும் மருத்துவம் பார்க்க இயலும்.

கல்விக்கூடங்கள்[தொகு]

அரசு தொடக்கப் பள்ளி 8-ஆம் வகுப்பு வரையும், அரசு மகளிர் மேல்நிலை பள்ளி 6 முதல் 12 வரை பெண்களுக்காக மட்டும், கருப்பண்ண நாடார் பள்ளி 6 முதல் 10 வரை இருபாலருக்கும், சரஸ்வதி கல்வி நிலையம் (தமிழ்,ஆங்கில வழி கல்வியகம்), கொங்கு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி போன்ற கல்விக்கூடங்கள் அமைந்துள்ளன. அரை மணி நேர பயணத்தில் பல பொறியியல் கல்லூரிகளும், கலைக்கல்லூரிகளும் உள்ளன.

பொருளாதாரம்[தொகு]

குன்னத்தூரில் ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கூட்டுறவு வங்கி, தமிழ்நாடு மெர்க்கண்டெய்ல் வங்கி ஆகியன அமைந்துள்ளன.

போக்குவரத்து[தொகு]

கோபிசெட்டிபாளையத்தில் இருந்து கோவை வழி பேருந்துகள் அனைத்தும் குன்னத்தூர் வழியாக செல்கின்றன. மேலும் திருப்பூரில் இருந்து ஈரோடு செல்லும் பேருந்துகள் அனைத்தும் குன்னத்தூர் வழியே செல்கின்றன. அரைமணி நேரத்திற்கு ஒரு முறை பேருந்து வசது உண்டு. மேலும் பத்துநிமிட பயணத்தில் பெருமாநல்லூர், செங்கப்பள்ளி ,ஊத்துக்குளி செல்லலாம். அங்கு சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை ஆகிய ஊர்களுக்கு பேருந்துகள் கிடைக்கின்றன. அவசர தேவைகளுக்கு மகிழுந்து, ஆட்டோ வசதிகளும் உண்டு.

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. ஜில்லா பேசும் குன்னத்தூர் கருப்பட்டி..!
  4. [ http://www.townpanchayat.in/kunnathur குன்னத்தூர் பேரூராட்சியின் இணையதளம்]
  5. Kunnathur Population Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=குன்னத்தூர்_(திருப்பூர்)&oldid=3715129" இலிருந்து மீள்விக்கப்பட்டது