குனிசெரி கும்மாட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கேரளா மாநிலத்தில் பாலக்காடு மாவட்டத்திற்கு உட்பட்ட குனிசெரி கிராமத்தில் உள்ள பூக்குளங்கரை பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெற்றுவரும் திருவிழா குனிசெரி கும்மாட்டி. மீன இலக்கினத்தில் புரட்டாதி நட்சத்திரத்தில் இத்திருவிழா கொண்டாடப்படுகிறது.

வரலாறு[தொகு]

கோழிக்கோட்டை தலைநகராகக் கொண்ட சாமூத்திரி மன்னர் கி பி 12-ஆம் நூற்றாண்டுக்கும் கி பி 17-ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் பல்வேறு பகுதிகளை போரில் ஈடுபட்டு சொந்தம் கொண்டாடி வந்தநிலையில், குனிசெரி பகுதியில் போர் நடைபெற்றபோது, சாமூத்திரியின் வீரர்களை அப்பகுதி வாழ் வீரர்கள் தொடர்ந்து பல நாட்களாக முன்னேற விடாமல் தடுத்து நிறுத்தினர். இறுதியில் பூக்குளங்கரை பகவதி அம்மனிடம் வருந்தி மன்னிப்பு கேட்ட சாமூத்திரி மன்னர் அப்பகுதியில் கொல்லப்பட்ட வீரர்களின் விதவைகளுக்கு வாழ்க்கைத்துணையாக தன் கோழிக்கோடு நாட்டிலிருந்து பலரை அனுப்பி வைத்ததாகவும், பூக்குளங்கரை பகவதி அம்மனின் பிறந்தநாள் வெகு விமரிசையாக கொண்டாடுவதாகவும் அறிவித்ததாக புராணக்கதைகள் கூறுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குனிசெரி_கும்மாட்டி&oldid=2931466" இலிருந்து மீள்விக்கப்பட்டது