உள்ளடக்கத்துக்குச் செல்

குனாசு ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குனாசு ஆறு (Cunas River) மத்திய பெருவில் உள்ள ஜூனின் பகுதியில் அமைந்துள்ள ஒரு ஆறு ஆகும். இந்த ஆறு கடல் மட்டத்திலிருந்து 5,180 மீட்டர் உயரத்தில் கார்டில்லெரா ஆக்சிடென்டலில் உருவாகிறது. இந்த ஆறு ஜூனின் பிராந்தியத்தில் சுபாகா மாகாணம், கான்செப்சியன் மாகாணம் மற்றும் ஹுவான்காயோ மாகாணம் ஆகிய 3 மாகாணங்களில் பாய்ந்து ஓடுகிறது.[1]

பாய்ந்தோடும் வழி

[தொகு]

குனாசு தென்மேற்கிலிருந்து வடகிழக்கில் பயணித்து மந்தாரோ பள்ளத்தாக்கில் நுழைகிறது. இந்த நதி மந்தாரோ ஆற்றின் ஆற்றுப் படுகையைச் சேர்ந்தது.

பொருளாதாரம்

[தொகு]

லிமா நகரின் முக்கிய வழங்குநர்களில் ஒன்றான மந்தாரோ பள்ளத்தாக்கு வழியாக இந்த ஆறு செல்கிறது. சுபாகா நகரம் அதன் பாதையில் உள்ள முக்கிய நகரமாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Río Cunas". Iperú. பார்க்கப்பட்ட நாள் January 12, 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குனாசு_ஆறு&oldid=3805578" இலிருந்து மீள்விக்கப்பட்டது