குந்தியன் அணுக்கரு எரிபொருள் வளாகம்
குந்தியன் அணுக்கரு எரிபொருள் வளாகம் (Kundian Nuclear Fuel Complex) என்பது பாக்கித்தானின் பஞ்சாப் மாகாண மியான்வாலி மாவட்டத்தில் அமைந்துள்ள அணுக்கரு எரிபொருள் உருவாக்கும் ஆலையாகும்.
வரலாறு
[தொகு]இசுலாமாபாத்திற்கு 175 கிலோமீட்டர் தெற்கில் பாக்கித்தான் அணுக்கரு ஆற்றல் எரிபொருள் வளாகம் என்ற மற்றொரு அணுக்கரு எரிபொருள் உருவாக்கும் ஆலையை நிர்மாணிக்கும் பணியைத் பாக்கித்தான் அணுக்கரு ஆற்றல் ஆணையகம் 2006 ஆம் ஆண்டில் தொடங்கியது. இதற்கு முன்னரே குந்தியன் அணுக்கரு எரிபொருள் வளாகம் என்ற உள்நாட்டு அணுக்கரு எரிபொருள் ஆலை குந்தியனில் அமைக்கப்பட்டிருந்தது. இந்த ஆலையையும் பாக்கித்தான் அணுக்கரு ஆற்றல் ஆணையகம் முனீர் அகமதுகான் தலைமையில் 1980 ஆண்டில் கட்டி முடித்திருந்தது[1].
குந்தியன் அணுக்கரு எரிபொருள் வளாகம் சேசுமா அணு மின் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள யுரேனிய எரிபொருள் அணுக்கரு உலையாகும். இவ்வுலையின் ஆண்டு உற்பத்தி அளவு 24 டன்களாகும். 1978 ஆம் ஆண்டு முதல் கராச்சி அணு மின் நிலையத்திற்குத் தேவையான எரிபொருளை இந்த வளாகம் அளித்து வருகிறது. இந்த அணுக்கரு எரிபொருள் ஆலை தற்பொழுது குந்தியன் அணுக்கரு எரிபொருள் ஆலை-1 என்ற பெயரில் இயங்கிவருகிறது[2]
மேற்கோள்கள்
[தொகு]புற இணைப்புகள்
[தொகு]- World Nuclear Organisation பரணிடப்பட்டது 2012-02-20 at the வந்தவழி இயந்திரம்