உள்ளடக்கத்துக்குச் செல்

குந்தனிகா கபாதியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குந்தனிகா கபாதியா
Kundanika Kapadia
நந்திகிராம் ஆசிரமத்தில் 2018 ஆம் ஆண்டு சூலையில் குந்தனிகா கபாதியா
நந்திகிராம் ஆசிரமத்தில் 2018 ஆம் ஆண்டு சூலையில் குந்தனிகா கபாதியா
பிறப்பு(1927-01-11)11 சனவரி 1927
லீம்புடி, வத்வான் மாவட்டம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு30 ஏப்ரல் 2020(2020-04-30) (அகவை 93)
வல்சாத்து, குசராத்து, இந்தியா
தொழில்நாவலாசிரியர், கதை ஆசிரியர், கட்டுரையாளர்
மொழிகுசராத்தி
குறிப்பிடத்தக்க விருதுகள்சாகித்திய அகாதமி விருது (1985)
துணைவர்மக்கராந்து தேவ்,

குந்தனிகா கபாதியா (Kundanika Kapadia 11 ஜனவரி 1927- 30 ஏப்ரல் 2020) குஜராத்தைச் சேர்ந்த ஓர் இந்திய புதின , கதை எழுத்தாளர் மற்றும் கட்டுரையாளர் ஆவார்.

சுயசரிதை

[தொகு]

குந்தனிகா கபாடியா 11 ஜனவரி 1927 அன்று லீம்ப்டியில் (இப்போது குஜராத், குஜராத்தில்) நரோத்தம்தாஸ் கபாடியாவுக்கு மகளாகப் பிறந்தார். கோத்ராவில் தனது ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை முடித்தார். இவர் 1942 இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றார். 1948 ஆம் ஆண்டில், பம்பாய் பல்கலைக்கழகத்துடன் இணைந்த பாவ்நகரின் சமல்தாஸ் கல்லூரியில் வரலாறு மற்றும் அரசியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். இவர் மும்பை பொருளியல் பள்ளியில் முழு அரசியலில் முதுகலைப் பட்டம் பயின்றார் ஆனால் தேர்வு எழுதவில்லை. இவர் 1968 இல் மும்பையில் குஜராத்தி கவிஞர் மகரந்த் தேவை மணந்தார். இந்தத் தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லை.[1] வல்சாத் அருகே வாங்கல் கிராமத்திற்கு அருகிலுள்ள நந்திகிராம் என்ற ஆசிரமத்தை தனது கணவருடன் இணைந்து 1985 இல் நிறுவினார். இவள் நந்திகிராம் தோழர்களால் இசாமா என்று அறியப்பட்டார். இவர் யாத்ரிக் (1955-1957) மற்றும் நவநீத் (1962-1980) இதழ்களின் பதிப்பாசிரியராக இருந்தார்.[2]

இவர் தனது 93 வயதில் இந்தியாவின் குஜராத்தின் வல்சாத் மாவட்டத்தில் வாங்கல் கிராமத்திற்கு அருகிலுள்ள நந்திகிராமில் 30 ஏப்ரல் 2020 அன்று இறந்தார்.[3]

தொழில் வாழ்க்கை

[தொகு]

சினேகன் என்பது இவருடைய புனைபெயர் ஆகும். பரோத் தட்டா பஹேலா எனும் இவரது முதல் புதினம் 1968 ஆம் ஆண்டில் வெளியானது, அதைத் தொடர்ந்து அக்னிபாபாசா (1972). இவர் சட் பகலா ஆகாஷ்மா ( வானத்தில் ஏழு படிகள், 1984) ஆகிய புதினங்களை எழுதினார், இது விமர்சன ரீதியில் பாராட்டைப் பெற்றது மற்றும் பெண்ணியத்தை ஆராய்ந்த இவரது சிறந்த புதினமாகக் கருதப்படுகிறது.[4]

இவரது முதல் கதை "பிரேம்னா அஞ்சு", இது ஜன்மபூமி செய்தித்தாள் ஏற்பாடு செய்த சர்வதேச கதை போட்டியில் இரண்டாவது பரிசு பெற்றது. அதன்பிறகு இவர் மேலும் பல கதைகளை எழுதத் தொடங்கினார். பிரேம்னா அஞ்சு கதைத் தொகுப்பாக 1954 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இவருடைய மற்ற கதைத் தொகுப்புகள் வடு நீ வடு சுந்தர் (1968), ககல்னி ஹோடி (1978), ஜாவா டைசு தமனே (1983) மற்றும் மனுஷ்ய தாவு (1990) ஆகியன ஆகும். இவரது கதைகள் தத்துவம், இசை மற்றும் இயல்பை ஆராய்கின்றன. இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் குந்தனிகா கபாடியா நி சிரேசு வர்தாவோ (1987) என்ற பெயரில் வெளியிடப்பட்டன. இவர் தூம்கேது, சரத் சந்திர சட்டோபாத்யாய், ரவீந்திரநாத் தாகூர், வில்லியம் சேக்சுபியர் மற்றும் இப்சன் ஆகியோரால் ஈர்க்கப்பட்டார்.

துவார் அனி தீவால் (1987) மற்றும் சந்திர தாரா விரிக்ச வடல் (1988) ஆகியவை இவரது கட்டுரைத் தொகுப்புகள் ஆகும். அக்ரான்ட் அன் அக்ரோஷ் (1993) இவரது சுயசரிதை ஆகும். இவர் பரம் சாமிபே (1982), ஜருகே திவா (2001) மற்றும் குலால் அன் குஞ்சர் ஆகியவற்றில் பதிப்பாசிரியராக பணியாற்றினார். பரம் சமிப்பே இவளுடைய பிரபலமான பிரார்த்தனை தொகுப்பாகும்.

இவர் லாரா இங்கால்சு வைல்டரின் படைப்பை வசந்த் இவ்சே (1962) என்று மொழிபெயர்த்தார். இவர் மேரி எலன் சேஸின் எ குட்லி பெல்லோஷிப்பை தில்பர் மைத்ரி எனவும் (1963) மற்றும் பெங்காலி எழுத்தாளர் ராணி சந்தின் டிராவ்லாக் என்பதனை பூர்ணகும்ப் (1977) எனவும் மொழிபெயர்த்தார்.

சான்றுகள்

[தொகு]
  1. "Gujarati author Kundanika Kapadia dies at 93". The Indian Express (in அமெரிக்க ஆங்கிலம்). 30 April 2020. பார்க்கப்பட்ட நாள் 30 April 2020.
  2. "Nandigram : A center for Service and Sadhana". Nandigram. Archived from the original on 24 September 2018. பார்க்கப்பட்ட நாள் 28 December 2016.
  3. Shukla, Rakeshkumar (30 April 2020). "'સાત પગલાં આકાશમાં' નામની પ્રસિદ્ધ ગુજરાતી કૃતિનાં લેખિકા કુંદનિકા કાપડિયાનું નંદીગ્રામ ખાતે નિધન". Divya Bhaskar (in குஜராத்தி). பார்க்கப்பட்ட நாள் 30 April 2020.
  4. Susie J. Tharu; Ke Lalita (1993). Women Writing in India: The twentieth century. Feminist Press at CUNY. pp. 254–256. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-55861-029-3.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குந்தனிகா_கபாதியா&oldid=3448445" இலிருந்து மீள்விக்கப்பட்டது