குத்பா பள்ளிவாசல், புதுச்சேரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குத்பா பள்ளிவாசல்,புதுச்சேரி
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம் புதுச்சேரி
புவியியல் ஆள்கூறுகள் , புதுச்சேரி, இந்தியா
புவியியல் ஆள்கூறுகள் 11°56′N 79°08′E / 11.93°N 79.13°E / 11.93; 79.13ஆள்கூற்று: 11°56′N 79°08′E / 11.93°N 79.13°E / 11.93; 79.13
சமயம் இசுலாம்
கட்டிடக்கலை தகவல்கள்
கட்டிடக்கலை வகை மசூதி
கட்டிடக்கலைப் பாணி முகலாயக் கட்டிடக்கலை
அளவுகள்

குத்பா பள்ளிவாசல் (Khutba Mosque) இந்திய யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் உள்ள பள்ளிவாசல் ஆகும்.

இப்பள்ளிவாசல் ஜும்ஆ பள்ளிவாசல் எனவும் அழைக்கப்படுகிறது. பிரான்சு காலனித்துவ ஆக்கிரமிப்பு காலத்திலும் இப்பள்ளிவாசல் இப்பகுதியில் நாட்டின் மதச்சார்பற்ற கலாச்சாரத்தின் உதாரணமாக திகழ்ந்தது.[1]

வரலாறு[தொகு]

குத்பா பள்ளிவாசல் புதுச்சேரியின் பழமையான பள்ளிவாசல் ஆகு‌ம். 17 ஆம் நூற்றாண்டில் பிரான்சு நாட்டின் காலனியான புதுச்சேரி நகரின் தெற்கு பகுதியில் இசுலாமிய மக்கள் குடியேறினர். அப்பகுதி தெருக்கள் அனைத்தும் சவூதி அரேபியாவின் மக்கா நகரை நோக்கி அமைந்திருந்தது.[2]

அமைப்பு[தொகு]

இப்பள்ளிவாசலில் சிறிய ஹவுஸ் உள்ளது. ரமலான் நோன்பு காலத்தில் சமையல் செய்வதற்கான அறை, குவிமாடம், மினார் ஆகியவை உள்ளன.அழகான ஹவுஸ் பிரான்சு கட்டடக்கலை பாணியில் கட்டப்பட்டது.[2]

வழிபாடு[தொகு]

இப்பள்ளிவாசலில் தினமும் ஐந்து நேர தொழுகை நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை சிறப்பு ஜும்ஆ தொழுகையும் நடைபெறும். வெள்ளிக்கிழமை குத்பா பிரசங்கம் தமிழ் மொழியில் நடைபெறும்.[2]

தர்கா[தொகு]

குத்பா பள்ளிவாசல் வளாகத்தில் மௌலா சய்யுபும் எனும் சூபி ஞானி அடக்கம் செய்யப்பட்டுள்ளார். மௌலா சையுபா குத்பா எனும் இந்த ஞானியின் பெயரால் இது குத்பா பள்ளிவாசல் என அழைக்கப்படுகிறது. மக்கள் ஜாதி, மத, பேதமின்றி ஒன்றிணைந்து மும்மத வழிபாடு நடத்துவது வழக்கம்.[3]

மர்கஸ்[தொகு]

இப்பள்ளிவாசல் வளாகத்தில் புதுச்சேரி தப்லீக் ஜமாஅத்தின் தலைமை மர்கஸ் அமைந்துள்ளது. [4]

மேற்கோள்கள்[தொகு]