குத்சியா தோட்டம்
குத்சியா பாக் (Qudsia Bagh) என்பது இந்தியாவின் பழைய தில்லியில் அமைந்துள்ள 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு தோட்ட வளாகம் மற்றும் அரண்மனையாகும்.
வரலாறு
[தொகு]முகலாயப் பேரரசர் அகமது சா பகதூரின் தாயார் குத்சியாவுக்காக 1748 ஆம் ஆண்டில் குத்சியா பாக் கட்டப்பட்டது[1]. பழைய தில்லி நகருக்கு வடக்கில் இவ்வளாகம் அமைந்துள்ளது. முன்னதாக இவ்வளாகம் ஓர் அற்புதமான அரண்மனையாகக் கருதப்பட்டது. பழுதடைவதற்கு[2] முன்பாக இவ்வரண்மனை வாரிசு சொத்தாக இருந்தது[3]. 1857 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியக் கிளர்ச்சி ஏற்பட்டபோது இவ்வரண்மனையில் பெரும் பகுதிகள் சேதமாக்கப்பட்டன[4].
நுழைவாயில், சாகி பள்ளிவாசல்[5] (பேரரசின்) மற்றும் தொழுவங்கள்[6] மட்டும் இன்று அங்கு எஞ்சியிருக்கின்றன. இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் பதிவேடுகளில் இத்தோட்டம் ஒரு பாதுகாக்கப்பட்ட நினைவிடம் என்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக வரலாற்றாளர் அசன் சாபர் குறிப்பிட்டுள்ளார்[7]. குத்சியா பாக் என்ற பெயரை எம்.எம் அக்கர்வால் பூங்கா என்று பெயர் மாற்றம் செய்ய தில்லி மாநகராட்சி திட்டமிட்டது. ஆனால் பலமான எதிர்ப்புகள் கிளம்பின.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Bakht Ahmed, Firoz (2013-01-08). "Qudsia Bagh to become Aggarwal Park!". The Milli Gazette. http://www.milligazette.com/news/5757-qudsia-bagh-to-become-aggarwal-park. பார்த்த நாள்: 2013-12-08.
- ↑ Sharma, Manimugdha S (2013-03-24). "Paradise lost: How Delhi’s historic Qudsia Bagh is dying". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 2013-12-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131211025354/http://articles.timesofindia.indiatimes.com/2013-03-24/delhi/37981094_1_garden-anirudh-goswami-barn-owls. பார்த்த நாள்: 2013-12-08.
- ↑ "The Qudsia Bagh". British Library. 2009-03-26. பார்க்கப்பட்ட நாள் 2014-01-08.
- ↑ Kumari, Kajal (2009-02-05). "Qudsia Bagh: A walk in the park at a heritage bagh". இந்தியன் எக்சுபிரசு. http://www.indianexpress.com/news/qudsia-bagh-a-walk-in-the-park-at-a-heritage-bagh/419347/. பார்த்த நாள்: 2013-12-08.
- ↑ "Khadsia Bagh Musjid, Delhi". British Library. 2009-03-26. பார்க்கப்பட்ட நாள் 2014-01-08.
- ↑ "Khoodsia Baug [Qudsia Bagh] Musjeed, Delhi". British Library. 2009-03-26. பார்க்கப்பட்ட நாள் 2014-01-08.
- ↑ Volume II, p. 295, No. 11