குதிரை வால் அணில்
குதிரை வால் அணில் | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | சுந்தாசையூரசு
|
இனம்: | சு. இப்பூரசு
|
இருசொற் பெயரீடு | |
சுந்தாசையூரசு இப்பூரசு (ஜியோப்ரி, 1831) | |
துணையினங்கள் | |
| |
![]() |
குதிரை வால் அணில் (Horsetail squirrel) என்பது சையூரிடே குடும்பத்தைச் சேர்ந்த கொறிணி சிற்றினமாகும். இது போர்னியோவிலும் சுமத்திரா தீவு முழுவதும் காணப்படுகிறது. இதே போல் புரூணை மற்றும் மலேசியா ஆகிய முழு நாடுகளையும் உள்ளடக்கிய மலாய் தீபகற்பத்தின் தெற்குப் பகுதியிலும், இந்தோனேசியா மற்றும் தாய்லாந்தின் சில பகுதிகளிலும் காணப்படுகிறது. 1831-ஆம் ஆண்டில் இந்த அணில் வியட்நாமில் கண்டுபிடிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த அணிலின் வரம்பைப் பற்றிய அடுத்தடுத்த விளக்கங்களில் வியட்நாம் சேர்க்கப்படவில்லை.[2]
குதிரை வால் அணில் சுந்தாசையூரசு மர அணில்களில் மிகவும் வண்ணமயமான, மிகப்பெரிய அளவிலானது. இது ஒரு நடுத்தர அளவிலான அணில் ஆகும். இது தலை முதல் உடல் நீளம் 21.5 முதல் 25 செமீ (8.5 முதல் 9.8 அங்குலங்கள்), வால் நீளம் 24 முதல் 29 செமீ (9.5 முதல் 11.5 அங்குலங்கள் வரை) இருக்கும். குதிரை வால் அணில் சாம்பல் நிற தலை, தோள், முன்னங்கால்களுடன் வெண்மையான உடலினையும், மந்தமான ஆரஞ்சு அல்லது சிவப்பு-பழுப்பு நிற அடிவயிற்றினையும் கொண்டுள்ளது. இந்த அணிலின் வால் பொதுவாக கருப்பு நிறத்துடன் பளபளப்பான கருப்பு அல்லது சாம்பல் நிறத்திலிருக்கும். [3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Meijaard, E. (2017). "Sundasciurus hippurus". IUCN Red List of Threatened Species 2017: e.T21155A22250415. doi:10.2305/IUCN.UK.2017-2.RLTS.T21155A22250415.en. https://www.iucnredlist.org/species/21155/22250415. பார்த்த நாள்: 12 November 2021.
- ↑ Thorington, R.W. Jr.; Hoffmann, R.S. (2005).
- ↑ Payne, J, C.M. Francis, K Phillips.