குதிரை வாகனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குதிரை வாகனம்
குதிரை வாகனம்.jpg
உரிய கடவுள்: சந்திரன்
சூரியன்
கல்கி

குதிரைவாகனம் என்பது இந்து சமயப் புராணங்களின்படி சாஸ்தா, கல்கி, சூரியன்,[1] சந்திரன் ஆகியோரின் வாகனமாகும். இந்துக்கோயில்களில் திருவிழாக்களின் பொழுது அந்தந்த கோயில் உற்சவமூர்த்திகள் ஊர்வலத்தில் எழுந்தருளும் வாகனங்களில் ஒன்றாக குதிரைவாகனமும் உள்ளது. தமிழ்நாட்டின். கிருட்டிணகிரி மாவட்டம், ஒசூர் சந்திர சூடேசுவரர் கோயில் மாசி மாதம் நடக்கும் தேர் திருவாழாவின்போது தேர்த் திருவிழாவுக்கு முந்தைய நாட்களில் நடக்கும் உற்சவங்களில் குதிரைவாகன உற்சவமும் ஒன்று.

இவ்வாறு குதிரைவாகனத்தில் கடவுளர் ஊர்வலம் வருதலை குதிரைவாகன சேவை என்று அழைக்கின்றனர்.

வாகன அமைப்பு[தொகு]

குதிரை வாகனமானது மரத்தால் செய்யப்பட்டு, மேற்புரம் உலோகத் தகடுகளால் காப்பும், அழகும் செய்யப்பட்டுகின்றன. குதிரைக்கு இறக்கைகள் உள்ளது போல வடிவமைக்கப்பட்டு, அது பாய்ந்து செல்வது போன்ற தோற்றத்தில் உள்ளது. குதிரை வாகனத்தின் மீது உற்சவரை அமர்த்த ஏதுவாக இரும்பால் தாங்கு பலகைகள் கூடுதலாக அமைக்கப்படுகின்றன.

ஆதாரங்கள்[தொகு]

  1. "எந்தக் கடவுளுக்கு என்ன வாகனம்?". https://tamilandvedas.com.+பார்த்த நாள் 8 மார்ச் 2017.

காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குதிரை_வாகனம்&oldid=2199318" இருந்து மீள்விக்கப்பட்டது