உள்ளடக்கத்துக்குச் செல்

குதிரை பேரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குதிரை பேரம் என்பது சிக்கலான பேரம் பேசுதல் அல்லது அரசியல் வாக்கு வர்த்தகம் போன்ற பிற பரிவர்த்தனைகளுக்கான ஒரு பரவலான உருவகமாகும்.

வரையறை

[தொகு]

குதிரை பேரம் என்பது குதிரைகளை வாங்குவதும் விற்பதும் ஆகும். மேலும், இது குதிரை வியாபாரம் என்றும் குறிப்பிடப்படுகிறது. குதிரைகளை வாங்கும் போது வாங்குபவருக்கும் விற்பவருக்கும் இடையே நடைபெறும் தீவிரமான விலை பேரம் பேசுதல் நடைமுறையில் இருந்தது.

விற்பனைக்குக் கொண்டு வரப்படும் ஒரு குதிரையின் தகுதிகளை மதிப்பிடுவதில் உள்ள சிரமங்கள் காரணமாக, குதிரை விற்பனையானது நேர்மையின்மைக்கு பெரும் வாய்ப்புகளை வழங்குகிறது. குதிரை விற்பனையாளர்கள் இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், குதிரை வியாபாரம் செய்பவர்கள் நேர்மையற்ற வணிக நடைமுறைகளைக் கொண்டவர்கள் என்ற பெயரைப் பெறுகின்றனர்.

அரசியலில் குதிரை பேரம்

[தொகு]

அரசியலில் நிச்சயமற்ற நிலை ஏற்படும் போதோ, தேர்தல் முடிந்து ஒரு கட்சி ஆட்சியமைக்க முற்படும் போது, அக்கட்சிக்கு பெரும்பான்மை உறுப்பினர்கள் இல்லாத போதோ, ஏற்கனவே ஆட்சியில் இருக்கும் ஒரு கட்சியை ஆட்சியிலிருந்து அகற்ற, அக்கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் பொருட்டு, அக்கட்சியின் சில உறுப்பினர்களை, பணம், பதவி கொடுத்து அக்கட்சிக்கு எதிராக செயல்பட வைக்க முயற்சிகள் செய்வது குதிரை பேரம் ஆகும்.[1]

மேலும், குதிரை பேரம் என்பது அரசியல் கட்சிகள், தங்கள் பெரும்பான்மையை நிரூபிக்கவோ அல்லது ஆட்சியைப் பிடிக்கவோ, பிற கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற அல்லது மக்களவை உறுப்பினர்களை, பணமோ பதவியோ கொடுத்து விலைக்கு வாங்கும் சட்டவிரோத, ஜனநாயக விரோத நடவடிக்கையைக் குறிக்கும்.

ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை ஒரு கட்சிக்கு இல்லாத போது, ஆண்ட கட்சியோ, அதிக சட்டமன்ற உறுப்பினர்களை அல்லது மக்களவை உறுப்பினர்களைக் கொண்ட கட்சியோ அல்லது மற்ற கட்சிகளோ, தங்கள் பெரும்பான்மையை அதிகரிக்கும் பொருட்டு, மற்ற கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களை அல்லது மக்களவை உறுப்பினர்களை, தங்கள் கட்சிக்கு ஆதரவாக செயல்பட குதிரை பேரம் மேற்கொள்கின்றனர்.[2] இவை மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளை அவமதிக்கும் செயலாகும்.

உதாரணங்கள்

[தொகு]

சமீபத்தில் கூட தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகம் (த. வெ. க.) கட்சி சட்டமன்ற உறுப்பினர்களிடம் குதிரை பேரம் நடைபெற்றதாகக் குற்றச்சாட்டுகள் உருவாகி,[3][4][5] அதுகுறித்த விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.[6][7] மேலும், இது தொடர்பாக தமிழ்நாட்டின் ஆளுநரிடமும் விளக்கம் கேட்கும் முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளன.[8] சமீபத்திய நிகழ்வுகளில், ஆளுங்கட்சி அல்லது முக்கிய எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சில சட்டமன்ற உறுப்பினர்களிடம் நடத்தப்படும் பேரம்,[9] வழக்குகளைப் பற்றிய தகவல்கள் ஊடகங்களில் அதிகம் உலாவருகின்றன.[10][11][12] இந்த முறைகேடுகளைத் தடுக்க தமிழ்நாட்டின் ஆளுநர், இந்தியக் குடியரசுத் தலைவர் ஆகியோரிடம், கட்சிகள் புகார் அளிப்பதும் வழக்கமாகியுள்ளது.[13][14]

மேற்கோள்கள்

[தொகு]
  1. இணையதளச் செய்திப் பிரிவு (2026-05-09). "குதிரை பேரம் என்றால் என்ன?". தினமணி (in Tamil). Retrieved 2026-07-09.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. இராஜா சண்முகசுந்தரம் (2026-05-25). "'குதிரை பேரம்' என்றால் என்ன ? எதற்கு அரசியலில் இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது..?". ABP Nadu. Retrieved 2026-07-09.
  3. தினமலர். "20 ஆண்டுக்கு முன் தி.மு.க., தான் குதிரை பேரத்தை உருவாக்கியது". www.dinamalar.com. Retrieved 2026-07-09.
  4. "Lokal Tamil - தமிழ் செய்திகள் | Latest Tamil News | Online Tamil News | Breaking News in Tamil". tamil.getlokalapp.com. Retrieved 2026-07-09.
  5. E. T. V. Bharat (2026-07-08). "குதிரை பேரம் விவகாரம்: கைதான 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி". ETV Bharat News. Retrieved 2026-07-09.
  6. "Lokal Tamil - தமிழ் செய்திகள் | Latest Tamil News | Online Tamil News | Breaking News in Tamil". tamil.getlokalapp.com. Retrieved 2026-07-09.
  7. நமது நிருபர். "தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம்; பின்னணியை விசாரிக்க முடிவு". www.dinamalar.com. Retrieved 2026-07-09.
  8. நக்கீரன் நியூஸ்டெஸ்க் (2026-07-08). "தமிழக குதிரை பேரம்! கவர்னருக்கு டெல்லி டோஸ்!". Nakkheeran. Retrieved 2026-07-09.
  9. "தவெக எம்.எல்.ஏ-க்களிடம் குதிரை பேரம்: கைதான 5 பேருக்கும் 2 நாள் போலீஸ் காவல் - நீதிமன்றம் உத்தரவு!". Samayam Tamil. Retrieved 2026-07-09.
  10. "தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம் நடத்தியதாக வழக்கு செந்தில் பாலாஜி, அசோக்குமாருக்கு முன்ஜாமீன்: உயர் நீதிமன்றம் உத்தரவு - Dinakaran". Dinakaran. 2026-07-09. Retrieved 2026-07-09.
  11. thanthitv (2026-07-09). "Senthilbalaji |TVK MLA|தவெக MLA-விடம் குதிரை பேரம்..செந்தில் பாலாஜிக்கு க் வைத்து உத்தரவிட்ட நீதிபதி". Thanthi TV. Retrieved 2026-07-09.
  12. தினமணி செய்திச் சேவை (2026-07-08). "தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம்: 5 பேரை 2 நாள் காவலில் விசாரிக்க அனுமதி". தினமணி (in Tamil). Retrieved 2026-07-09.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  13. செய்திப்பிரிவு (2026-07-06). "குதிரை பேரம் உண்மையாய் இருந்தால் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்: திருமாவளவன் கருத்து". Hindu Tamil Thisai. Retrieved 2026-07-09.
  14. நமது சிறப்பு நிருபர். "குதிரை பேரம்: தவெக அரசிடம் விளக்கம் கேட்க கவர்னர் முடிவு?". www.dinamalar.com. Retrieved 2026-07-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குதிரை_பேரம்&oldid=4595551" இலிருந்து மீள்விக்கப்பட்டது