குதிரைவால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குதிரைவால்
இயக்கம்மனோஜ் லியோனல் ஜாக்சன்
ஷியாம் சுந்தர்
தயாரிப்புபா. ரஞ்சித்
விக்னேஷ் சுந்தரேசன்
கதைஜி. இராஜேஷ்
இசைபிரதீப் குமார்
நடிப்புகலையரசன்
அஞ்சலி பாட்டீல்
ஒளிப்பதிவுகார்த்திக் முத்துகுமார்
படத்தொகுப்புகிரிதரன் எம்கேபி
கலையகம்நீலம் புரொடக்‌ஷன்ஸ்
யாழி பிலிம்ஸ்
வெளியீடுபெப்ரவரி 12, 2021 (2021-02-12)(IFFK)
27 பெப்ரவரி 2021 (Berlin)
ஓட்டம்125 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு5 கோடிகள்

குதிரைவால் (Kuthiraivaal)[1] என்பது 2021 ஆம் ஆண்டு தமிழ் -மொழியில் வெளியான உளவியல் பரபரப்பூட்டும் திரைப்படம் ஆகும். ஜி.ராஜேஷ் எழுதிய கதையை மனோஜ் லியோனல் ஜாக்சன், ஷ்யாம் சுந்தர் ஆகியோர் இணைந்து இயக்கியிருந்தனர். இந்த படத்தில் கலையரசன், அஞ்சலி பாட்டீல், சௌம்யா ஜெகன்மூர்த்தி, ஆனந்த் சாமி , சேத்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.[2] குதிரை வால் கொண்ட மனிதன், வால் இல்லாத குதிரை, வானத்தில் சூரியனும், சந்திரனும் ஒரே நேரத்தில் தோன்றுவது போன்ற மாய யதார்த்தக் கூறுகளை இந்த படம் கொண்டுள்ளது.[3] [4] [5] ஆளவந்தான் போன்ற மந்திர யதார்த்தத்தின் கருத்தை பயன்படுத்திய சில தமிழ் படங்களில் ஒன்றாக இந்த படம் கருதப்படுகிறது.[6] பெர்லின் விமர்சகர்கள் திரைப்பட விழாவில் சர்வதேச வெளியீட்டுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் இந்திய திரைப்படம் இதுவாகும்.[7] பிரான்ஸ் காஃப்காவின் தி மெட்டாமார்போசிஸ் என்ற புதினத்திலிருந்து இந்த படம் தழுவலாக எடுக்கப்பட்டது.[8]

சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

  1. https://m.imdb.com/title/tt13022626/mediaviewer/rm1830461441/
  2. "Here is the teaser of Kalaiyarasan's 'Kuthiraivaal' - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-01.
  3. Venkiteswaran, C. S. "In Tamil film 'Kuthiraivaal', the tale of a horse's tail turns out to be an unforgettable head trip". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-01.
  4. "PA. Ranjith's 'Kuthiraivaal' to explore the concept of magical realism? Read details". Republic World (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-01.
  5. "Kuthiraivaal teaser: Kalaiyarasan, Anjali Patil's film is all things surreal". The New Indian Express (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-01.
  6. "பா.இரஞ்சித் வெளியிடும் குதிரைவால்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-03-01.
  7. "Kuthiraivaal becomes the first Indian film to premiere at Berlin critics week - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-01.
  8. "Kalaiyarasan's next, Kuthiraivaal, to be screened at Berlin Critics Week - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குதிரைவால்&oldid=3673512" இலிருந்து மீள்விக்கப்பட்டது