உள்ளடக்கத்துக்குச் செல்

குதிரன் சுரங்கப் பாதை

ஆள்கூறுகள்: 10°34′17″N 76°22′52″E / 10.5715°N 76.381°E / 10.5715; 76.381
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குதிரன் சுரங்கப் பாதை
Kuthiran Tunnel
குதிரன் சுரங்கப் பாதை நுழைவாயில்
மேலோட்டம்
அமைவிடம்குதிரன், திரிச்சூர், கேரளா, இந்தியா
ஆள்கூறுகள்10°34′17″N 76°22′52″E / 10.5715°N 76.381°E / 10.5715; 76.381
தற்போதைய நிலைபயன்பாட்டில்
வழித்தடம்C2 தே. நெ. 544
தொடக்கம்10°34′17″N 76°22′41″E / 10.5715°N 76.378°E / 10.5715; 76.378
முடிவு10°34′19″N 76°23′10″E / 10.572°N 76.386°E / 10.572; 76.386
செய்பணி
பணி ஆரம்பம்2016
உரிமையாளர்இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
இயக்குபவர்இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
Trafficதரைவழிப் போக்குவரத்து
Characterபயணிகள் & சரக்கு
தொழினுட்பத் தகவல்கள்
நீளம்இடது குழல் 955 m (3,133 அடி)
வலது குழல் 944 m (3,097 அடி)
தண்டவாளங்களின் எண்ணிக்கை3 வழி ஒரு குழலில்
(6 வழிப்பாதை, இரடை குழல்)
தொழிற்படும் வேகம்பாதை 1 - 40–80 km/h (25–50 mph)

பாதை 2 - 40–80 km/h (25–50 mph)

பாதை 3 - 40–80 km/h (25–50 mph)
சுரங்க விடுவெளி10 மீட்டர்கள் (33 அடி)
அகலம்14 மீட்டர்கள் (46 அடி)
Map
About OpenStreetMaps
Maps: terms of use
2km
1.2miles
குதிரன் சுரங்கம் மேற்கு நுழைவாயில்
மேற்கு நுழைவாயில்
குதிரன் சுரங்கம் கிழக்கு நுழைவாயில்
கிழக்கு நுழைவாயில்

குதிரன் சுரங்கப் பாதை (ஆங்கிலம்: Kuthiran Tunnel மலையாளம்: കുതിരാന് തുരങ്കം) என்பது இரட்டை குழல் நெடுஞ்சாலை சுரங்கப்பாதையாகும். இது தென்னிந்திய மாநிலமான கேரளாவில் அமைக்கப்படும் முதல் சுரங்கப்பாதையாகும். இந்த சுரங்கப்பாதை தேசிய நெடுஞ்சாலை 544-ல் அமைந்துள்ளது. இது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்குச் சொந்தமானது. இதனை இந்த ஆணையமே இயக்குகிறது. இது கேரளாவின் சாலைப் போக்குவரத்திற்கான முதல் சுரங்கப்பாதை மற்றும் தென்னிந்தியாவின் மிக நீளமான ஆறு வழிச் சாலை சுரங்கப்பாதை ஆகும்.[1][2][3] இந்தச் சுரங்கப்பாதையின் கட்டுமானப் பணிகள் 2016-ல் தொடங்கப்பட்டுத் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அண்மையில் ஒரு சிறு பகுதியில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது.

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி சமூகத் தளமான டுவிட்டர் மூலம் இரட்டை குழாய் சுரங்கங்களில் ஒன்றைத் திறப்பதாக அறிவித்தார்.[4]

தற்போதைய போக்குவரத்து

[தொகு]

ஆனைமலை மலையின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள குதிரை மலையில் குதிரை சாய்வில் இந்த சுரங்கப்பாதை அமைந்துள்ளது. இந்த மலை அறிவிக்கப்பட்ட வனவிலங்கு சரணாலயமாகும்.

தேசிய நெடுஞ்சாலை 544யில் (இந்தியா) நெரிசலான திருச்சூர் - பாலக்காடு பாதையில் குதிரன் சாய்வு போக்குவரத்திற்கு இடையூறான குறுகிய பாதை மற்றும் விபத்து மிகுந்த இடமாகும். இச்சுரங்கப்பாதை வேலைகள் முடிந்து, இரண்டு சுரங்கப்பாதைகளும் பயன்பாட்டிற்கு வரும் போதுகொச்சிக்கும் கோயம்புத்தூருக்கும் 3 கிலோமீட்டர்கள் (1.86 mi) மற்றும் குதிரன் வழியாகச் செல்லும் சுரங்கப்பாதை கணிசமான அளவு பயண நேரம் மற்றும் இதுவரை இருந்த வாகன நெரிசலைத் தவிர்க்கிறது.

புவியியல் மற்றும் நிர்வாக சவால்கள் காரணமாகச் சுரங்கப்பாதையின் பணிகள் முடிக்க ஒரு தசாப்தத்திற்கும் மேலாக ஆனது.

ஆகஸ்ட் 2018-ல்கேரள வெள்ளத்தின் போது, அவசரக்கால வாகனங்கள் செல்வதற்காகச் சுரங்கப்பாதை திறக்கப்பட்டது. ஜூன் 2019-ல் சுரங்கப்பாதை நான்கு மணி நேரம் அவசர பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கப்பட்டது.[5] ஜனவரி 2020-ல், திருச்சூர் மற்றும் பாலக்காடு இடையே இந்திய மின் குழுமம் இந்தியாவின் நிலத்தடி மின்தடப் பணிகளை எளிதாக்கும் வகையில் சுரங்கப்பாதை ஓரளவு திறக்கப்பட்டது.[6]

ஜூலை 31, 2021 அன்று, டுவிட்டர் மூலம் நிதின் கட்காரி வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து , பாலக்காடு - திருச்சூர் திசையில் உள்ள இரண்டு சுரங்கப்பாதைகளில் ஒன்று போக்குவரத்துக்காக அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டது.[7]

செலவு

[தொகு]

பிரகதி குழுமம் ஐதராபாத்தைச் சேர்ந்த கேஎம்சி நிறுவனம் மூலம் பணியை மேற்கொள்ளத் துணை ஒப்பந்தம் செய்தது. பிரகதி நிறுவனம் 200 கோடி ரூபாய் செலவில் துணை ஒப்பந்தத்தை எடுத்தது.

பரிமாணம்

[தொகு]

ஆறு வழித்தட இரட்டை குழாய் சுரங்கங்கள் கிட்டத்தட்ட 1 கிலோமீட்டர் நீளமுடையது. இடது குழாய் 955 m (3,133 அடி) மற்றும் வலது குழாய் 944 m (3,097 அடி), அகலம் மற்றும் உயரம் 14 மற்றும் 10 மீட்டர்கள் (46 மற்றும் 33 அடி), முறையே. 20 மீட்டர்கள் (66 அடி) இடைவெளியில் அமைந்திருக்கும். சுரங்கப்பாதைக்குள் இரண்டு அவசர குறுக்குவழிகளும் உள்ளன.[8]

காணொளி

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Work on left tunnel at Kuthiran begins". Dailyhunt. Retrieved 2016-12-01.
  2. "Work on left tunnel at Kuthiran begins". Deccan Chronicle. Retrieved 2016-12-01.
  3. "Kuthiran tunnel work resumes". Times of India. Retrieved 2016-12-01.
  4. "Kuthiran Tunnel Opening: Big news for Kerala, Tamil Nadu and Karnataka! One side of tunnel to be OPENED for public today, says Nitin Gadkari | WATCH video". Zee Business. 2021-07-31. Retrieved 2021-07-31.
  5. "Major safety lapse as cops open Kuthiran tunnel to clear jam". www.onmanorama.com. Retrieved 2021-08-01.
  6. Daily, Keralakaumudi. "Kuthiran tunnel partially opened as Power Grid's trial run commences". Keralakaumudi Daily (in ஆங்கிலம்). Retrieved 2021-08-01.
  7. "One of two Kuthiran tunnels in Kerala declared open by Union govt". The News Minute (in ஆங்கிலம்). 2021-08-01. Retrieved 2021-08-01.
  8. "Ministry of Road Transport & Highways, Government of India". morth.nic.in. Retrieved 2021-07-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குதிரன்_சுரங்கப்_பாதை&oldid=3477798" இலிருந்து மீள்விக்கப்பட்டது