குதிக்கும் சிலந்தி
குதிக்கும் சிலந்தி | |
---|---|
![]() | |
An adult male Phidippus audax | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
Unrecognized taxon (fix): | Salticidae |
Genera | |
உயிரியற் பல்வகைமை | |
500+ genera, 5000+ species | |
![]() |
குதிக்கும் சிலந்தி (Jumping spider) சிலந்தி இனங்களில் ஒன்றாகும். இந்தச் சிலந்திவகையானது வலை பின்னுவதில்லை. இது குதித்து குதித்து செல்லும் பண்பு கொண்டதால், குதிக்கும் சிலந்தி என்ற பெயர்பெற்றது.[1] இவற்றில் 500 முதல் 5800க்கும் மேல்பட்ட கணுக்காலி இனத்தைச் சார்ந்தவை விவரிக்கப்பட்டுள்ளன. கணுக்காலிகள் மத்தியில் குதிக்கும் இந்த வகைச் சிலந்திகளின் பார்வைத் திறன் சிறப்பாக கொண்டு உள்ளது. இதனால் இவற்றால் வேட்டையாடவும், ஊடுருவவும் சிறப்பாக செயல்பட இயலுகிறது. சிலந்திகள் பொதுவாக மெதுவாகவே நகரும் தன்மையுடன் இருந்தாலும், ஒருசில இனங்கள் மட்டுமே சுறுசுறுப்பாகத் தாவும் திறன்கொண்டு காணப்படுகின்றன. இதன் மூலம் வேட்டையாடுவதில் சிறந்தும், ஒருசில வேளைகளில் அச்சுறுத்தும் விதமாகவும் தோன்றுகிறது. நன்கு வளர்ந்த பூச்சிகளின் ஏட்டுநுரையீரல் இவற்றிற்கு மூச்சிக்குழாயாகப் பயன்படுகிறது. குதிக்கும் சிலந்திகள் பொதுவாகத் தனது கண்களைவைத்தே அதிக எச்சரிக்கையைப் பெற்றுக்கொள்கிறது. இவற்றிற்கு இரண்டு சோடி கண்கள் கொண்டு காணப்படுகின்றன. இவை பொதுவாகத் தட்டான் வகைப் பூச்சிகளைப் பிடித்து உணவாக உட்கொள்கின்றன.[2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ ஆதி வள்ளியப்பன் (16 செப்டம்பர் 2017). "கான்கிரீட் காட்டில்... 1- இன்னும் மீதம் இருக்கிறது இயற்கை". கட்டுரை (தி இந்து). http://tamil.thehindu.com/general/environment/article19692826.ece. பார்த்த நாள்: 18 செப்டம்பர் 2017.
- ↑ சூழ் உலகு 09: சிலந்தியின் தட்டான் வேட்டை தி இந்து தமிழ் 12 நவம்பர் 2016