குதப் புற்றுநோய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குதப் புற்றுநோய்
Diagram showing stage 1 anal cancer CRUK 189.svg
முதல் வகை குதப்புற்று
சிறப்புபுற்றுநோயியல்
அறிகுறிகள்ஆசனவாயிலிருந்து இரத்தப்போக்கு அல்லது ஆசனவாய் அருகே கட்டி [1]
வழமையான தொடக்கம்45 வயதுக்கு மேல்[2]
வகைகள்Squamous cell carcinoma, adenocarcinoma, small cell carcinoma, கரும்புற்றுநோய்
சூழிடர் காரணிகள்மனித சடைப்புத்துத் தீ நுண்மம் (HPV), எயிட்சு, குதவழிப் பாலுறவு, புகைத்தல், பலருடன் பாலுறவு கொள்ளுதல்[1]
நோயறிதல்உடல்பரிசோதனை, உயிரகச்செதுக்கு[1]
ஒத்த நிலைமைகள்பாலுறுப்பு உண்ணிகள், மூலம் (நோய்), ஆசனவாய்ப் பிளவு[3]
தடுப்புHPV vaccination, ஆபத்துக் காரணிகளைத் தவிர்த்தல்[4]
சிகிச்சைகதிர் மருத்துவம், வேதிச்சிகிச்சை, அறுவை சிகிச்சை[1]
முன்கணிப்புஐந்தாண்டு உயிர்வாழ்வதற்கான சாத்தியம் ~68% (US 2015)[2]
நிகழும் வீதம்8,300 (US 2019)[2]
இறப்புகள்1,280 (US 2019)[2]

குதப் புற்றுநோய் (Anal cancer);என்பது மனித ஆசனவாய்ப் பகுதி, இரைப்பைக் குழாயின் நுனிப்பகுதி ஆகியவற்றில் ஏற்படும் புற்றுநோயாகும்.[1] ஆசனவாயிலிருந்து இரத்தப்போக்கு அல்லது ஆசனவாய் அருகே ஒரு கட்டி ஆகியவை இதன் அறிகுறியாக இருக்கலாம். மற்ற அறிகுறிகளாக வலி, அரிப்பு அல்லது ஆசனவாய் சற்று வெளியேறி இருத்தல் ஆகியவை இருக்கலாம். குடல் இயக்கங்களில் மாற்றமும் ஏற்படலாம்.

மனித சடைப்புத்துத் தீ நுண்மம் (HPV), எச்.ஐ.வி / எய்ட்ஸ், குதவழிப் பாலுறவு, புகைத்தல் மற்றும் பலருடன் பாலுறவு கொள்ளுதல் ஆகியவை ஆபத்து காரணிகளில் அடங்கும்.[1] குத புற்றுநோய் பொதுவாக ஒரு செதிள் உயிரணு புற்றுநோயாகும் . பிற வகைகளில் அடினோகார்சினோமா எனப்படும் நாளப்புற்று, சிறிய செல் புற்றுநோய் மற்றும் கரும்புற்றுநோய் ஆகியவை அடங்கும். உடல் பரிசோதனையின் அடிப்படையில் நோயறிதல் சந்தேகிக்கப்படுகிறது. மேலும் உயிரகச்செதுக்கு மூலம் திசுக்களில் இப்புற்று உறுதிப்படுத்தப்படுகிறது.

ஆபத்துக் காரணிகளைத் தவிர்ப்பதும் HPV தடுப்பூசி போடுதல் ஆகியவையும் இது வராமல் தடுக்க உதவும் நடவடிக்கையில் அடங்கும்.[4] நிலையான சிகிச்சையில் கதிர்வீச்சு சிகிச்சை, கீமோதெரபி மற்றும் அறுவைச் சிகிச்சை ஆகியவை அடங்கும்.[1] அமெரிக்காவில் ஆண்டுக்கு சுமார் 8,300 பேர் குதப்புற்று நோயில் பாதிப்பில் உள்ளதாகக் கண்டறியப்படுகிறார்கள், இது புதிய புற்றுநோய்களில் 0.5% ஆகும். இப்புற்றுநோய் பொதுவாக 45 வயதிற்குப் பிறகு தொடங்குகிறது. ஆண்களை விட பெண்கள் பெரும்பாலும் குதப்புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். 1990 களில் இருந்து இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் இப்புற்ருநோயினால் பாதிக்கப்பட்டு ஐந்தாண்டுகள் உயிர்வாழும் சாத்திய வீதம் 68% ஆகும்.[2]

அறிகுறிகள்[தொகு]

ஆசனவாய்ப் பகுதியில் தெரியும் ஒரு செதில் செல் புற்றுநோய்

குத புற்றுநோயின் அறிகுறிகளில் ஆசனவாய் அல்லது மலக்குடலில் வலி அல்லது அழுத்தம் இருக்கும். குடல் பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படும், ஆசனவாய் அருகே ஒரு கட்டி, மலக்குடல் இரத்தப்போக்கு, அரிப்பு அல்லது வெளியேற்றம் ஆகியவையும் இதில் அடங்கும். இரத்தப்போக்கு கடுமையாக இருக்கலாம்.[5]

ஆபத்து காரணிகள்[தொகு]

மனித சடைப்புத்துத் தீ நுண்மம்[தொகு]

டென்மார்க் மற்றும் சுவீடனில் உள்ள நோயாளிகளிடமிருந்து பெற்ற செதிள் உயிரணு புற்றுநோய்க் கட்டித் திசுக்களை பரிசோதித்ததில், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்களின் அதிக விகிதத்துடன் தொடர்புடைய மனித சடைப்புற்றுத் தீ நுண்மம் குத புற்றுநோய்களிலும் அதிக அளவில் இருந்தன என்பதை திட்டவட்டமாகக் காட்டியது. மேற்கொள்ளப்பட்ட மற்றொரு ஆய்வில், பரிசோதிக்கப்பட்ட 84 சதவீத குத புற்றுநோய் மாதிரிகளில் HPV இன் உயர் ஆபத்து வகைகள், குறிப்பாக HPV-16 கண்டறியப்பட்டன. டென்மார்க் மற்றும் சுவீடனில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், 90% குத புற்றுநோய்கள் HPV க்கு காரணம் என்று பார்கின் மதிப்பிட்டார்.

பாலுறவுச் செயல்பாடுகள்[தொகு]

HPV க்கு வெளிப்படும் ஆபத்து காரணமாக, பலருடன் பாலியலுறவில் ஈடுபடுதல் மற்றும் குதவழிப் பாலுறவு கொள்ளல் ஆகியவை ஆண்களுக்கும் பெண்களுக்கும் குதப் புற்றுநோயை உருவாக்கும் வாய்ப்பை பெரிதும் அதிகரிக்கிறது.[6][7][8]

புகைத்தல்[தொகு]

தற்பொழுது புகைப்பிடிக்காதவர்களை விட புகைப்பிடிப்பவர்கள் குத புற்றுநோயை அதிகரிக்கும் வாய்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. ஃபிரெட் ஹட்சின்சன் புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் பொது சுகாதார அறிவியல் பிரிவின் உறுப்பினரான தொற்றுநோயியல் நிபுணர் ஜேனட் டேலிங் மற்றும் அவரது குழுவினர், குதப்புற்றுநோய் வளர்ச்சியில் புகைபிடித்தல் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருப்பதாகக் கண்டறிந்துள்லனர். இது பாலியல் செயல்பாடு போன்ற பிற நடத்தை ஆபத்து காரணிகளிலிருந்து தனித்து சுயாதீனமாக உள்ளது. ஆய்வு செய்யப்பட்ட குத-புற்றுநோய் நோயாளிகளில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் நோயறிதலின் போது தற்போதைய புகைப்பிடிப்பவர்கள், கட்டுப்பாடுகளில் புகைபிடித்தல் விகிதம் சுமார் 23 சதவிகிதம். " புகைபிடித்தல் நோயின் மிக முக்கியமான ஊக்குவிப்பாளரான" என்று டேலிங். "நீங்கள் நடப்பில் புகைப்பிடிப்பவராக இருந்தால், நீங்கள் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, குதப்புற்று வர நான்கு மடங்கு ஆபத்து உள்ளது." என்று கூறுகிறார். புகைபிடித்தல் மற்றும் குத-புற்றுநோய் வளர்ச்சியின் பின்னணியில் உள்ள வழிமுறை தெரியவில்லை என்று அவர்கள் விளக்கினர், ஆனால் புகைபிடித்தல் அப்போப்டொசிஸ் எனப்படும் உயிரணு தன்மடிவு அல்லது திட்டமிடப்பட்ட செல் இறப்பு எனப்படும் ஒரு செயல்முறையில் தலையிடுகிறது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர், உயிரணு தன்மடிவானது புற்றுநோயாக மாறக்கூடிய அசாதாரண உயிரணுக்களின் உடலை அகற்ற உதவுகிறது. ஆனால் புகைபிடித்தல் இந்த செயல்பாட்டில் தலையிட்டு நோயெதிர்ப்பு சக்தியை அடக்குகிறது, இது தொடர்ச்சியான தொற்று அல்லது அசாதாரண செல்களை அழிக்க உதவும் உடலின் செயல் திறனைக் குறைக்கும்.

நோய்த்தடுப்பு[தொகு]

இப்புற்றுநோய் பெரும்பாலும் எச்.ஐ.வி தொற்றுடன் தொடர்புடையது.

தீங்கற்ற குதப் புண்கள்[தொகு]

தீங்கற்ற குத புண்கள் பின்னாளில் குதப்புற்றுநோய் ஏற்படக் காரணமாகின்றன.[9]

பிற புற்று நோய்கள்[தொகு]

கருப்பை வாய்ப் புற்றுநோய், யோனி அல்லது பெண்குறிப் புற்றுநோய்கள் இருத்தல்

குதக் கட்டிகள்[தொகு]

குளோகோஜெனிக் கார்சினோமா அல்லது குதக் கட்டிகள் என்பது மலக்குடல்சார் பகுதியில் கருவின் குளோகல் மென்படலத்தின் தொடர்ச்சியான எச்சத்திலிருந்து உருவாகும் ஒரு அரிய கட்டியாகும். இந்த கட்டியானது மலக்குடல்சார் புற்றுநோய்களில் 2-3% ஆகும், மேலும் இது பெண்களுக்கு இரு மடங்கு அதிகமாக ஏற்படுகிறது.

நோய்க்குறியியல்[தொகு]

பெரும்பாலான குதப் புற்றுநோய்கள் மலக்குடல் பகுதியின் இணைப்புகளுக்கு அருகில் எழும் செதிள் உயிரணுப் புற்றுநோய்கள் ஆகும். இது தோல் தடிமனாதல் அல்லது தடிமனாகமல் இருத்தல் ஆகிய இரு காரணங்களாலும் நிகழலாம்.

வகைகள்[தொகு]

குடல் புற்றுநோயின் பிற வகைகள் சுரப்பித் திசுக்கட்டி அல்லது நாளப் புற்றுநோய், நிணநீர் நாளப்புற்றுநோய், இணைப்புத் திசுப்புற்று , கரும்புற்றுநோய் ஆகியவையாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 "Anal Cancer Treatment". National Cancer Institute (in ஆங்கிலம்). 2018. 30 May 2019 அன்று பார்க்கப்பட்டது.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 "Cancer of the Anus, Anal Canal, and Anorectum - Cancer Stat Facts". SEER (in ஆங்கிலம்). 30 May 2019 அன்று பார்க்கப்பட்டது.
  3. Garden, O. James; Bradbury, Andrew W.; Forsythe, John L. R.; Parks, Rowan W. (2012) (in en). Principles and Practice of Surgery E-Book. Elsevier Health Sciences. பக். 272. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780702051166. https://books.google.ca/books?id=T8BpQO8bOTcC&pg=PA272. 
  4. 4.0 4.1 "Anal Cancer Prevention". National Cancer Institute (in ஆங்கிலம்). 14 February 2014. 30 May 2019 அன்று பார்க்கப்பட்டது.
  5. National Cancer Institute. Anal Cancer Treatment (PDQ) Patient Version. பரணிடப்பட்டது சூலை 14, 2009 at the வந்தவழி இயந்திரம் 13 June 2008. Accessed 26 June 2009.
  6. "Fred Hutchinson Cancer Research Center, Changing Trends in Sexual Behavior May Explain Rising Incidence of Anal Cancer Among American Men and Women". Fred Hutchinson Cancer Research Center (fhcrc.org). 2004-07-06. 2010-04-21 அன்று பார்க்கப்பட்டது.
  7. "STD Facts – HPV and Men". 14 September 2007 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2007-08-17 அன்று பார்க்கப்பட்டது.
  8. "Anal Cancer". American Cancer Society. 2014-12-22 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-12-22 அன்று பார்க்கப்பட்டது.
  9. Natia Esiashvili; Jerome Landry; Richard H. Matthews (2007). "Carcinoma of the Anus Management". Armenian Health Network, Health.am. 5 February 2008 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2008-01-22 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குதப்_புற்றுநோய்&oldid=2868501" இருந்து மீள்விக்கப்பட்டது